Showing posts with label காகிதக் கைவினைகள். Show all posts
Showing posts with label காகிதக் கைவினைகள். Show all posts

மலர்த் தொப்பி செய்யலாம் வாங்க!

உங்களிடம் காகிதத் தட்டு இருக்கிறதா.. அதில் கொஞ்சம் காகித மலர்களை வைத்து சூப்பராக மலர்த் தொப்பி செய்து நண்பர்களை அசத்தலாம்..!

 தேவையான பொருட்கள்:
  1. ஒரு காகிதத் தட்டு
  2. காகிதப் பூக்கள்
  3. வண்ண பென்சில்கள் அல்லது ஸ்கெட்ச்
  4. கத்தரிக்கோல், பசை
  5. சரிகை நாடாக்கள்

 காகிதத் தட்டின் நடுப்பகுதியில் துளையிட்டு, பிறகு படத்தில் உள்ளது போல சற்று அகலமான கோடுகள் போடுங்கள். கோடுகள் விளிம்பிலிருந்து ஒரு அங்குலம் இடைவெளி இருக்க வேண்டும். இப்போது கோடுகளை கத்தரிகோலால் கத்தரித்து விடுங்கள். பார்ப்பதற்கு சக்கரம் போல காட்சியளிக்கும்.





 கத்தரித்த முக்கோணப் பகுதிகளை படத்தில் காட்டியது போல நிமிர்த்துங்கள். அடுத்து, தட்டின் மீது மஞ்சள் அல்லது பளிச்சென இருக்கும் வண்ணங்களைத் தீட்டுங்கள். நிமிர்ந்திருக்கும் முக்கோணங்கள் மீது வேறு வண்ணங்களைத் தீட்டுங்கள்.




தட்டில் நிமிர்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு முக்கோணத்தின் மீதும், காகிதப் பூக்களைக் கொண்டு பசை தடவி ஒட்டுங்கள். இப்போது தட்டின் ஒரு முனையில் இரண்டு துண்டு வண்ணக் காகித நாடாக்களை பசை கொண்டு ஒட்டுங்கள்.

 

 





அவ்வளவு தான்...சூப்பரான மலர்த் தொப்பி ரெடி!

பல்பு முயல்குட்டி

பழுதான மின்சார பல்பை தூக்கியெறியாதீர்கள். அதிலிருந்து சூப்பர் முயல்குட்டி பொம்மைகளைச் செய்து அசத்தலாம்.

தேவையான பொருட்கள் :

  1. பழுதான மின்சார பல்பு
  2. கனமான வண்ண பேப்பர்
  3. ட்ரேசிங் பேப்பர்
  4. கறுப்பு ஸ்கெட்ச் அல்லது மார்க்கர்.
  5. பாட்டில் மூடி
  6. கத்தரிக்கோல், பசை



கனமான வண்ணப் பேப்பரை இரண்டு சம பகுதிகளாக வெட்டுங்கள். ஒரு பாதியை எடுத்து இரண்டாக மடித்துக் கொள்ளுங்கள். படத்தில் உள்ளது போல முயலின் முகத்தை சரிபாதியாக வரும்படி, ட்ரேசிங் பேப்பர் உதவியுடன் வண்னப் பேப்பரில் பன்சில் கொண்டு வரையுங்கள்.





மடித்ததைப் பிரித்து, பென்சிலால் வரைந்த முகத்தைக் கத்தரித்து எடுத்துக் கொள்ளுங்கள். வண்ணப் பேப்பரின் அடுத்த பாதியை நீளவாட்டில் மடித்துக்கொண்டு, முயலின் மீசை, வால் ஆகியவை பாதியாக வருமாறு ட்ரேசிங் பேப்பர் உதவியுடன் வரைந்து கொண்டு அவற்றை கத்தரித்துக் கொள்ளுங்கள்.





பல்பை சுத்தமாகத் துடைத்து, மேற்பகுதியில் (சிறிய முனை உள்ள பகுதியில்) பசை உதவியுடன் முயலின் முகத்தை ஒட்டி, அதன் பின் மீசையை சரியாக ஒட்டுங்கள். கறுப்பு மார்க்கரை எடுத்துக் கொண்டு, படத்தில் உள்ளது போல முயலுக்கு கை, கால்களை வரைந்து கொள்ளுங்கள்.

கடைசியாக, பல்பின் அடிப்பகுதியில், பாட்டில் மூடியை பசை வைத்து ஒட்டி விடுங்கள். இப்போது அழகிய பல்பு முயல் தயார். பல்பை கவனமாக கையாளுங்கள். 

தலையணை பூனைக்குட்டி

நம் வீட்டில் பயன்படுத்தும் தலையணையிலிருந்து, ஆழகிய பூனை செய்து அனைவரையும் அசத்தலாம் வாங்க!

தேவையான பொருட்கள்:

  1. வெளிர் நிறத்தில் வெல்வெட் அல்லது அழகிய வண்ணத்தில், சதுர வடிவிலான தலையணை உறை
  2. பஞ்சு -தேவையான அளவு
  3. சிறிய காலுறைகள் - இரண்டு
  4. பெரிய காலுறைகள் - இரண்டு
  5. மஞ்சள் நிற பெரிய சட்டைப் பொத்தான்கள் -இரண்டு
  6. பெரிய சிகப்பு நிறப் பொத்தான் -ஒன்று
  7. தையல் ஊசி,கருப்பு நூல்



தலையணை உறையில் பஞ்சை நன்றாக, சீராக அடைத்து ஊசி நூல் கொண்டு வாயைத் தைத்து விடுங்கள். உறையின் மையப் பகுதிக்கு சற்று மேலே, படத்தில் காட்டியபடி நூலைக் கொண்டு இறுக்கமாக சுற்றிக் கட்டுங்கள். பார்ப்பதற்கு உடுக்கை போலக் காட்சியளிக்கும்.







 
இப்போது மேற்புறத்தில் இரு முனைகளிலும், படத்தில் உள்ளது போல நூலைக் கொண்டு ஒரே அளவாக இறுக்கமாக கட்டுங்கள். பூனைக்கு காதுகள் தயாரகி விட்டது. அடுத்தும் மஞ்சள் நிற பொத்தானை எடுத்து, பூனைக்கு கண்கள் இருக்கும் இடத்தில் வைத்து, ஊசி நூல் கொண்டு தைத்து விடுங்கள். அதற்கு சற்று கீழே பெரிய சிகப்பு பொத்தானை மூக்கைப் போல வைத்து தைத்து விடுங்கள். (பொத்தானின் துளைகள் வழியாக ஊசியை நுழைத்து, தலையணையோடு வைத்து தைத்து முடிச்சு போடுங்கள்).
 



சிறிய காலுறைகளில் பஞ்சை அடைத்து, படத்தில் உள்ளது போல கைகள் இருக்கும் இடத்தில் வைத்து தைத்து விடுங்கள். இதே போல பெரிய காலுறைகளில் பஞ்சை அடைத்து, கால்கள் இருக்கும் இடத்தில் தைத்து விடுங்கள்.  அடுத்து, கருப்பு நூலைக் கொண்டு, மூக்கின் அருகில் இருபுறமும், மூன்று வரிசைகளில் மீசை போல தைத்துக் கொள்ளுகள்.






 



இறுதியாக, கழுத்தில் வெல்வெட் துணியால், கழுத்தணி (tie) போல சுற்றி, அதையும் தைத்து விடுங்கள். இப்போது அழகிய பூனை ரெடி!

காலி பாட்டிலில் சமாதானப் புறா!

நாம் தூக்கியெறியும் பொருட்களில் இருந்து சூப்பராக பல கைவினைப் பொருட்கள் செய்யலாம் என்பதைத் தொடர்ந்து பார்த்து வருகிறீர்கள். அந்த வரிசையில், தேவையற்ற காலி பாட்டிலைக் கொண்டு அழகான புறா செய்து நண்பர்களை அசத்தலாம் வாங்க!
 
  

தேவையான பொருட்கள்
  1. ஒரு காலி பாட்டில் (1/2 லிட்டர்)
  2. வண்ணக் காகிதம்
  3. சட்டை மாட்டி வைக்கும் ஹாங்கர்
  4. துணிகளைக் காய வைக்கும் கிளிப்
  5. பழைய செய்தித்தாள்
  6. நூல், பசை, கத்தரிக் கோல்



 1/2 லிட்டர் அளவு கொண்ட காலி பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். கண்ணாடி பாட்டில் வேண்டாம் என்றால், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் பாட்டிலின் வடிவம் குளிர்பான பாட்டிலின் வடிவத்தில் இருக்க வேண்டும்.   படத்தில் காட்டியது போல, பாட்டிலின் முன் ஹாங்கரை வைத்து, நூலைக் கொண்டு இரண்டையும் இறுக்கமாகக் கட்டிக் கொள்ளுங்கள்.



 செய்தித் தாளை துண்டு துண்டாக கிழித்து, படத்தில் காட்டியுள்ளது போல பாட்டில் மீது பசை கொண்டு ஒட்டுங்கள்.
சற்று காய்ந்ததும், மீண்டும் வண்ணக் காகிதத்தை துண்டுகளாக்கி, செய்தித் தாளை ஒட்டியது போல, அதன் மீது ஒட்டவும்.



 வண்ண ஸ்கெட்ச் பேனா கொண்டு பாட்டிலின் மூடிப் பகுதியில் புறாவுக்கு கண்கள் வரையுங்கள். அடுத்து, துணிகளைக் காய வைக்கும் கிளிப் ஒன்றை எடுத்து, படத்தில் காட்டியுள்ளது போல பாட்டிலின் வாய்ப் பகுதியில் செருகி விடுங்கள்.

இப்போது பார்ப்பதற்கு, பறந்து செல்லும் புறாவைப் போல தோற்றமளிக்கும். நண்பர்களிடம் காண்பித்து, அவர்களை ஆச்சரியப்பட வையுங்கள்!

சுவர் அலங்காரம் செய்யலாம் வாங்க!

ணாகப் போகும் ஐஸ்கிரீம் குச்சிகளை வைத்து அழகிய, அலங்காரமான சுவரொட்டிகளைச் செய்து உங்கள் வீட்டை அழகுபடுத்துங்கள்.
 

தேவையான பொருட்கள்:
  1. ஐஸ்கிரீம் குச்சிகள் -12
  2. வண்ணக் காகிதம்
  3. பிளாஸ்டிக் பூக்கள் (கடைகளில் கிடைக்கும்) -3
  4. நூல், பசை









நான்கு ஐஸ்கிரீம் குச்சிகளை எடுத்துக் கொண்டு, அவற்றின் முனைகளை பசை கொண்டு ஒட்டி, படத்தில் உள்ளது போல சதுர படிவ ஃபிரேம் உருவாக்குங்கள்.








அதன் உள்புறம் குச்சிகளின் அளவுக்கு ஏற்றாற்போல சதுர அளவாக வண்ணக் காகிதத்தை ஒட்டுங்கள். இதே போல ஐஸ் குச்சிகள் மற்றும்  வண்ணக் காகிதங்களைக் கொண்டு மேலும் இரண்டு சதுரங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.




இப்போது மூன்று பிளாஸ்டிக் பூக்களை எடுத்துக் கொண்டு, பசை தடவி ஒவ்வொரு சதுரத்திலும் ஒரு பூவை ஒட்டி விடுங்கள். பார்ப்பதற்கு அலங்கரிக்கப்பட்ட புகைப்பட ஆல்பம் போல காட்சியளிக்கும். பூக்கள் தான் என்றில்லை. உங்களுக்குப் பிடித்த தட்டை வடிவ பொம்மைகள், சிறிய ஓவியங்கள் என எதை வேண்டுமானாலும் ஒட்டலாம். இதற்கு ஏற்றவாறு பின்புற காகிதத்தின் வண்ணத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மூன்று சதுரங்களையும், படத்தில் உள்ளது போன்று ஒன்றன் கீழ் ஒன்றாக பசை தடவி ஒட்டுங்கள். மேற்பகுதியிலுள்ள சதுரத்தில் கம்பளி நூலினை இணைத்து கட்டுங்கள்.

அழகிய இந்த அலங்கார சுவரொட்டி தயார், வீட்டில் மாட்டி அனைவரையும் அசத்துங்கள்!

செருப்பு பெட்டியில் அழகிய பரிசுப் பொருள்!

செருப்பு அல்லது ஷூ வாங்கியவுடன் அவை வைக்கப்பட்டிருக்கும் பெட்டியை தூக்கியெறிந்து விட வேண்டாம். அந்தப் பெட்டியைக் கொண்டு, அழகிய பரிசுப் பொருட்கள் செய்து நண்பர்களை அசத்தலாம் வாங்க!
 
 தேவையான பொருட்கள்:
  1. புதிய செருப்புகள் வாங்கும் போது கிடைக்கும் பெட்டி
  2. கண்ணாடி காகிதம் (பேன்சி கடைகளில் கிடைக்கும்)
  3. கத்தரிக்கோல்
  4. வண்ணக் காகிதங்கள்
  5. அழகிய சிறிய பொம்மை,
  6. பசை, தூரிகை,
  7. பெயின்ட்
 செருப்புப் பெட்டியில் மடிப்புகள், ஓட்டைகள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். படத்தில். காட்டியுள்ளபடி பெட்டியின் மூடியில் கொஞ்சம் இடைவெளி விட்டு கத்தரித்துக் கொள்ளுங்கள். மூடியின் உட்புறத்தில் கண்ணாடி காகிதத்தை சரியான அளவுக்கு கத்தரித்து, பசை தடவி பெட்டியின் மூடியில் ஒட்டி விடுங்கள். 




 இப்போது பார்ப்பதற்கு அலங்காரப் பெட்டி போலத் தோற்றமளிக்கும். அடுத்து,  வண்ண வண்ண பெயின்ட்களை எடுத்துக் கொண்டு, பெட்டி முழுக்க உங்கள் விருப்பம் போல தூரிகையைக் கொண்டு வண்ணம் தீட்டுங்கள். அடுத்து பொம்மையை எடுத்து பெட்டியின் உள்ளே வைத்து ஒட்டி விடுங்கள்.



 


வண்ணக் காகிதங்களை எடுத்துக் கொண்டு, விதவிதமான வடிவங்களில், வெவ்வேறு வண்ணங்களில் சிறிய
அளவிலான பூக்களை வரைந்து கொள்ளுங்கள்.
 
 




வரைந்தவற்றை கத்தரிக்கோல் கொண்டு அழகாக கத்தரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக பசை தடவி, கண்ணாடி காகிதத்தைச் சுற்றிலும் அழகாக ஒட்டுங்கள். இறுதியாக பசை எடுத்து, பெட்டியுடன் சேர்த்து மூடியை ஒட்டிவிடுங்கள். அவ்வளவு தான்! அலங்காரப் பெட்டி தயார். நண்பர்களுக்கு பரிசளித்து அவர்களை அசத்துங்கள்!

பேப்பர் தேவதைகள் செய்யலாம் வாங்க

வீடுகளை அலங்கரிக்க மற்றும் கிறிஸ்துமஸ் மரங்களை அழகுபடுத்த சிறிய தேவதை பொம்மைகளை விலை கொடுத்து வாங்குவோம். நீங்களே எளிதாக பேப்பர் தேவதைகளை உருவாக்கி வீட்டை அலங்கரித்து உங்கள் நண்பர்களை அசத்துங்கள்!

தேவையான பொருட்கள்:

  1. பளபளக்கும் வண்ண பேப்பர்
  2. கத்தரிக் கோல்
  3. பென்சில், பஞ்சு, வெள்ளை பேப்பர்
  4. ஸ்டேப்ளர்.
  5. வட்டமான தட்டு அல்லது வளையம்,
  6. நாணயம்,
  7. பசை




   வட்டமான தட்டு அல்லது வளையத்தை வண்ண பேப்பரின் மீது வைத்து அதைச்  சுற்றிலும் பென்சிலால் வட்டம் வரைந்து கொள்ளுங்கள்.
வட்டத்தை கத்தரித்துக் கொள்ளுங்கள். இப்போது வட்டத்தை சரிபாதியாக மடித்து கத்தரித்திக் கொள்ளுங்கள்.

அரை வட்ட வண்ணக் காகிதத்தை கூம்பு போல மடித்துக் கொள்ளுங்கள் (மளிகைக் கடைகளில் பொட்டலம் கட்டுவது போல). அதன் முனைகளை ஸ்டேப்ளர் அல்லது பசை போட்டு ஒட்டிக் கொள்ளுங்கள்.




 
இப்போது வெள்ளை பேப்பரை எடுத்து பாதியாக மடித்துக் கொள்ளுங்கள். மடித்த இடத்தின் விளிம்பில் நாணயத்தை வைத்து ஒரு வட்டம் வரைந்து கொள்ளுங்கள். கத்தரியால அந்த வட்டத்தை அப்படியே கத்தரித்துக் கொள்ளுங்கள். இப்போது மடித்த காகிதத்தை விரித்தால், 8 எண்ணைப் போல அடுத்தடுத்த இரண்டு வட்டங்கள் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் இணைந்திருக்கும் வட்டங்களை பிரித்து விடாதீர்கள்.


பேப்பரின் கீழ்ப்புறம் உள்ள வட்டத்தில் சிரிக்கும் பொம்மை முகத்தை வரைந்து கொள்ளுங்கள். மேல் வட்டத்தில் பஞ்சை பசை போட்டு ஒட்டி, முடி போன்ற அமைப்பை ஏற்படுத்துங்கள்.
இப்போது முகத்தை எடுத்து, ஏற்கனவே செய்து வைத்திருந்த கூம்பின் முனைப் பகுதியில் பசை போட்டு ஒட்டுங்கள்.





   ஒரு வெள்ளை பேப்பரை சரிபாதியாக மடித்து, படத்தில் உள்ளது போல பென்சிலால்  இறகு வரைந் து கொள்ளுங்கள். பிறகு வரைந்த பகுதியை மட்டும் வெட்டி, எடுத்தால், இரண்டு இறகுகள் கிடைக்கும். இரண்டையும் தனித்தனியாக்கி, கூம்பின் இரண்டு பக்கங்களிலும் பசை கொண்டு சரியாக ஒட்டி விடுங்கள்.








 இப்போது உங்கள் தேவதை ரெடி! நண்பர்களிடம் காண்பித்து அவர்களை அசத்துங்கள்!!

நாய்க்குட்டி பென்சில் பாக்ஸ்!

ஒவ்வொரும் முறையும் கடையில் காசு கொடுத்து பென்சில் டப்பா வாங்குவதற்கு பதிலாக, நீங்களே அழகான பென்சில் டப்பாவை எளிதாக உருவாக்கி உங்கள் நண்பர்களை அசத்தலாம்.
 
 தேவையான பொருட்கள்:
  1. பெரிய டப்பா -1
  2. சிறிய டப்பா -1
  3. வண்ணக் காகிதம் -1
  4. வெள்ளைக் காகிதம் -1
  5. கத்தரிக் கோல்
  6. வண்ண ஸ்கெட்ச்
  7. பசை


 வண்ணக் காகிதத்தை எடுத்து, பெரிய டப்பா மற்றும் சிறிய டப்பாக்களின் மூடிகளின் மேல் வண்ணக் காகிதத்தை சுருக்கமில்லாமல் பசை தடவி ஒட்டுங்கள். ஓரங்களை சரியாக கத்தரிக் கோலால் வெட்டியெடுத்து விடுங்கள். அடுத்து, சிறிய பெட்டியை அப்படியே எடுத்து, படத்தில் இருப்பது போல பெரிய பெட்டியின் மீது பசை தடவி ஒட்டிவிடுங்கள்.


 ஸ்கெட்ச் பேனா எடுத்து, சிறிய பெட்டியின் மீது நாய்க்குட்டியின் கண்களை வரையுங்கள். எஞ்சியுள்ள வண்ணக் காகிதத்தை எடுத்து, படத்தில் காட்டியுள்ள படி நாயின் காதுகளைப் போல இரண்டு துண்டுகளை வெட்டியெடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை சிறிய டப்பாவின் மீது, கண்கள் பகுதிக்கு பின்புறம் ஒட்டிக் கொள்ளுங்கள்.



 அதன் பின் வெள்ளைக் காகிதத்தை எடுத்து, படத்தில் உள்ளது போல நாயின் நாக்கு போல ஒட்டிக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த நிறங்களை ஸ்கெட்ச் பேனா மூலம் நிரப்புங்கள். அதே காகிதத்தை எடுத்து மெல்லிய, நீளமான துண்டுகளாக வெட்டி, பெரிய டப்பாவில் மீசை போல ஒட்டிக் கொள்ளுங்கள்.



 

இப்போது, கடினமான இரண்டு சிறிய காகிதத் துண்டுகள் அல்லது இரண்டு துண்டு துணியாலான துண்டுகளை எடுத்து, பெரிய டப்பாவின் பின் பகுதியில் மூடியையும் டப்பாவையும் இணைக்கவும்.



   

 நாய்க்குட்டி பென்சில் டப்பா தயார்! இனி நாயின் முகத்தைத் தூக்கி, பெட்டிக்குள் பென்சில் உள்ளிட்ட பொருட்களை வைக்கலாம்!

செருப்பு பெட்டியில் அழகிய பரிசுப் பொருள்!

செருப்பு அல்லது ஷூ வாங்கியவுடன் அவை வைக்கப்பட்டிருக்கும் பெட்டியை தூக்கியெறிந்து விட வேண்டாம். அந்தப் பெட்டியைக் கொண்டு, அழகிய பரிசுப் பொருட்கள் செய்து நண்பர்களை அசத்தலாம் வாங்க!

 தேவையான பொருட்கள்:
  1. புதிய செருப்புகள் வாங்கும் போது கிடைக்கும் பெட்டி
  2. கண்ணாடி காகிதம் (பேன்சி கடைகளில் கிடைக்கும்)
  3. கத்தரிக்கோல்
  4. வண்ணக் காகிதங்கள்
  5. அழகிய சிறிய பொம்மை,
  6. பசை, தூரிகை,
  7. பெயின்ட்



 செருப்புப் பெட்டியில் மடிப்புகள், ஓட்டைகள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். படத்தில். காட்டியுள்ளபடி பெட்டியின் மூடியில் கொஞ்சம் இடைவெளி விட்டு கத்தரித்துக் கொள்ளுங்கள். மூடியின் உட்புறத்தில் கண்ணாடி காகிதத்தை சரியான அளவுக்கு கத்தரித்து, பசை தடவி பெட்டியின் மூடியில் ஒட்டி விடுங்கள்.



 இப்போது பார்ப்பதற்கு அலங்காரப் பெட்டி போலத் தோற்றமளிக்கும். அடுத்து,  வண்ண வண்ண பெயின்ட்களை எடுத்துக் கொண்டு, பெட்டி முழுக்க உங்கள் விருப்பம் போல தூரிகையைக் கொண்டு வண்ணம் தீட்டுங்கள். அடுத்து பொம்மையை எடுத்து பெட்டியின் உள்ளே வைத்து ஒட்டி விடுங்கள்.






 வண்ணக் காகிதங்களை எடுத்துக் கொண்டு, விதவிதமான வடிவங்களில், வெவ்வேறு வண்ணங்களில் சிறிய
அளவிலான பூக்களை வரைந்து கொள்ளுங்கள்.






வரைந்தவற்றை கத்தரிக்கோல் கொண்டு அழகாக கத்தரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக பசை தடவி, கண்ணாடி காகிதத்தைச் சுற்றிலும் அழகாக ஒட்டுங்கள். இறுதியாக பசை எடுத்து, பெட்டியுடன் சேர்த்து மூடியை ஒட்டிவிடுங்கள். அவ்வளவு தான்! அலங்காரப் பெட்டி தயார். நண்பர்களுக்கு பரிசளித்து அவர்களை அசத்துங்கள்!

முகமூடிகள் செய்யலாம் வாங்க!

சூப்பர் முகமூடிகளை நீங்களே எளிமையாக தயாரித்து உங்கள் நண்பர்களை பயமுறுத்தலாம். இங்கே உள்ள  வழிமுறைகளை அப்படியே பின்பற்றி முகமூடிகள் உருவாக்கி அசத்துங்கள்! ஆல் தி பெஸ்ட்!!


தேவையான பொருட்கள்:
  1. பேப்பர் பிளேட் (பேன்சி கடைகளி்ல் கிடைக்கும்)
  2. நூல் -ஒரு மீட்டர் நீளம்
  3. வண்ணப் பென்சில்கள் அல்லது கிரேயான்கள்
  4. வண்ண நூல்கள்
  5. வண்ணக் காகிதங்கள்
  6. கத்திரி 
  7. பசை


பேப்பர் பிளேட்டை முகமாக நினைத்துக் கொண்டு,  அதில் பென்சில் மூலம் கண், மூக்கு,வாய் வரைந்து கொள்ளுங்கள். 
 
25 காசு நாணயத்தை கண்களின் மீது வைத்து, அப்படியே வட்ட வடிவமாக துளையிடுங்கள். இப்போது, முகத்தில் வண்ணப் பென்சில்கள் மூலம் பிடித்த வண்ணங்களைத் தீட்டுங்கள்.



இப்போது முகத்தின் வலது, இடது புறங்களில், காதுகள் இருக்கும் இடத்தில் சிறு துளையிடுங்கள்.

இரண்டு துளைகள் வழியாகவும் நூலை நுழைத்து கட்டிக் கொள்ளுங்கள். முகமூடி தலையில் மாட்டிக் கொள்ளும் அளவுக்கு நூலின் நீளம் இருக்கட்டும்.

இப்போது வண்ண நூல்களை சிறிது சிறிதாக வெட்டி, நெற்றியின் வலது, இடது புறங்களில் பசை தடவி ஒவ்வொன்றாக ஒட்டுங்கள்.

 


நெற்றிக்கு நடுவில் மேல் பகுதியில் முக்கோண வடிவில் வண்ணப் பேப்பரை வெட்டி, குல்லாய் போல ஒட்டி விடுங்கள்.



முகமூடி ரெடி, முகத்தில் மாட்டிக் கொண்டு நண்பர்களை அசத்துங்கள்!

மேஜிக் நாய்க்குட்டி!

ஏதாவது வித்தியாசமாக செய்து நண்பர்களை அசத்த வேண்டும் என ஆர்வமாக உள்ளீர்களா? இதோ உங்களுக்கான சூப்பர் மேஜிக் நாய்க்குட்டி! காலியான தீப்பெட்டியைக் கொண்டு எளிதாக இதைச் செய்து கலக்குங்கள்!

 தேவையான பொருட்கள்:
  1. காலியான பெரிய தீப்பெட்டி
  2. வண்ணக் காகிதம்
  3. வண்ண ஸ்கெட் பேனா
  4. பசை
  5. தூரிகை
  6. பென்சில்

 காலியான தீப்பெட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் பகுதியில் வண்னக் காகிதத்தை ஒட்டி, அதன் ஓரங்களை சரியாக கத்தரித்துக் கொள்ளுங்கள். அதன் பின் படத்தில் காட்டியுள்ளது போல, நீளமான உடலைக் கொண்ட் நாயின் முன்பகுதியை பென்சிலால் வரைந்து கொண்டு, அதில் வண்ணங்கள் தீட்டுங்கள்.

 உள்ளே இருக்கும் தீக்குச்சி வைக்கும் பெட்டியில் மேல், படத்தில் காட்டியபடி நீளமான உடலுடன் நாய்க்குட்டியின் பின்பகுதியை பென்சிலால் வரையுங்கள். அதன் மீது வண்னம் தீட்டுங்கள். சிறிது நேரம் உலர விட்ட பின் இரண்டு பெட்டிகளையும் இணைத்து விடுங்கள்.

 இப்போது, உள்புற பெட்டியை மெதுவாக வெளியே இழுத்தால், நாய்க்குட்டியின் உடல் படத்தில் உள்ளது போல நீளமாவதைக் காணலாம். சிறிய உடல் நீளமாகும் மேஜிக்கை நண்பர்களிடம் காட்டி வியக்க வையுங்கள். நாய்க்குட்டி என்றில்லை, பூனை, முயல் என, உங்களுக்கு விருப்பமானவற்றை நீளமாக்கி வரையலாம். தீப்பெட்டியை செங்குத்தாக்கி, ஒட்டகச்சிவிங்கியைக் கூட வரைந்து அசத்தலாம். 

Flag Counter