நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
விளக்கம் :ஒருவர் நமக்கு செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் செய்த தீமையை அக்கணமே மறந்து விடுவது நல்லது.
மருத நாட்டு இளவரசன் வீரசிம்மனும், ஏழைக் குடும்பத்தில் பிறந்த கலைதாசனும் ஒரே குருகுலத்தில் பயின்ற போது இணைபிரியா நண்பர்களாக இருந்தனர். வீரசிம்மன் மன்னனாக முடிசூடியதும், பழைப நட்பை மறக்காமல் கவிதைகள் புனைவதில் வல்லவனான கலைதாசனை தனது ஆஸ்தான கவிஞனாக்கினான். அன்று முதல் ஏழ்மை நிலையிலிருந்து விடுபட்டு வசதியான வாழ்க்கையை கலைதாசன் வாழ்ந்தான்.
அரசவையில் இடம் கிடைத்தாலும், கடவுள் அளித்த கவிதை எழுதும் திறமையை கடவுளுக்காக மட்டுமே பயன்படுத்துவதில் உறுதியாக இருந்த கலைதாசன், கடவுள் துதிப் பாடல்கள் எழுதுவதில் மட்டுமே ஆர்வம் காட்டினான்.
கலைதாசன் மீது பொறாமை கொண்டிருந்த மற்ற அரசவைக் கவிஞர்கள் இதனை சாதகமாக்கிக் கொண்டு, அவனைப் பற்றி மன்னனிடம் தவறாக சொல்லிக் கொடுத்தனர். அதனால் வீரசிம்மன் மனம் சஞ்சலமடைந்தது. ஒரு நாள் கலைதாசனை அழைத்த வீரசிம்மன், தன்னைப் பற்றி புகழ்ந்து கவிதை பாடுமாறு கேட்டான். ஆனால் தான் கடவுளைத் தவிர வேறு யாரையும் புகழ்ந்து பாடுவதில்லை என கலைதாசன் மறுத்து விட்டான். ஏற்கனவே சஞ்சலத்தில் இருந்த வீரசிம்மன் இப்போது கடும் கோபம் கொண்டு கலைதாசனை பதவியிலிருந்து நீக்கியதோடு, அவனை நாடு கடத்தி காட்டில் வாழும்படி உத்தரவிட்டான்.
சில மாதங்கள் கழித்து காட்டுக்கு வேட்டையாடச் சென்ற வீரசிம்மன், பாதை மாறிச் சென்று வழி தெரியாமல் காட்டுக்குள் திண்டாடினான். அப்போது சூறைக் காற்று வீசியதால் மரம் ஒன்று முறிந்து அவன் மீது சாய்ந்தது. பலத்த காயங்களோடு மரத்திறன் அடியில் தவித்துக்கொண்டிருந்தான். காட்டில் வசித்து வந்த கலைதாசன் அவ்வழியே செல்லும் போது வீரசிம்மனைப் பார்த்து அவனைக் காப்பாற்றி தன் குடிசைக்கு தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தான்.
கலைதாசனின் பராமரிப்பால் உடல் நலம் தேறிய வீரசிம்மன் கண்ணீர் மல்க, " நண்பா, உனக்கு தீங்கிழைத்த போதும் நீ என் மேல் இவ்வளவு பரிவு காட்டுகிறாயே.. என் மீது கோபம் இல்லையா?" எனக் கேட்டான்.
"அரசே, ஏழையாய் இருந்த என்னை ஆஸ்தானக் கவிஞனாக்கி நல்வாழ்வு அளித்தீர்கள். அரசருடைய கட்டளையை ஏற்காதவன் தண்டனைக்கு உரியவனாவான். அதன் அடிப்படையில் நீங்கள் செய்தது தீங்கல்ல. ஆகவே தான் நீங்கள் அளித்த தண்டனையை உடனே மறந்து விட்டேன். நீங்கள் எனக்கு செய்த நன்மையை மட்டுமே நினைவில் வைத்துள்ளேன்" என கலைதாசன் பதிலளித்தான்.
இதைக் கேட்டு தன் செயலுக்காக வருந்திய வீரசிம்மன், " நண்பா! உன்னுடைய தண்டனையை இந்த வினாடியே ரத்து செய்கிறேன். உடனே அரண்மனைக்கு திரும்பு" எனக் கூறி கலைதாசனை கட்டியணைத்துக் கொண்டான்.