
சாரங்கபுரியில், அண்ணாமலையின் நகைக்கடை மிகப் பிரபலமானதாக இருந்தது.
அவர் பரம்பரை வியாபாரி அல்ல! சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்த அண்ணாமலை
ஒரு நகைக் கடையில் பணியாளராக வேலைக்குச் சேர்ந்தார். தனது கடின
உழைப்பினாலும், ஆர்வத்தினாலும் அவர் நகை வியாபாரத்தின் சகல
நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார்.
சில ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் வேலையை விட்டுவிட்டு,
சாரங்கபுரிக்கு வந்து ஒரு நகைக்கடையைத் தொடங்கினார். அந்த நகரிலிருந்த சில
கை தேர்ந்த தொழிலாளிகளை வலை வீசிக் கண்டு பிடித்துத் தன்னிடம் வேலைக்கு
அமர்த்திக் கொண்டார். விரைவிலேயே, அவருடைய கடை மிகவும் உகந்ததாகக் கருதப்பட
வியாபாரம் பிரமாதமாக நடந்தது.
அவருடைய திறமையைக் கண்டு வியந்த நகரத்தின் செல்வர் ஒருவர் தன் புதல்வி
நாகேஸ்வரியை அவருக்குத் திருமணம் செய்து வைத்தார். திருமணத்தின் மூலம்
அவருக்கு ஏராளமான சீர் கிடைத்தது. ஆனால், இயல்பாகவே பொருளில் ஆசை
கொண்டிருந்த நாகேஸ்வரிக்கு ஏற்கெனவே இருந்த செல்வம் போதவில்லை. அதனால்,
அவள் மேலும் மேலும் செல்வத்தைப் பெருக்க முயன்றாள்.
தன் கணவர் தன்னுடன் இருப்பதைவிட, முழுநேரமும் கடையிலே தங்கி வியாபாரம்
செய்து வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்று விரும்பினாள். அவருக்கு
வேண்டிய உணவு, தேநீர் ஆகிய அனைத்தையும் கடைக்கு அனுப்பி விடுவாள். தவிர,
அவள் கணவர் பணியாளர்களை நம்பி வேலையை ஒப்படைப்பதை அறவே விரும்பவில்லை.
ஆகையால்
அது குறித்து அடிக்கடி அறிவுரை கூறுவாள். முதலில், தன்னிடமும்,
வியாபாரத்தின் மீதும் உள்ள அக்கறையினால்தான் அவள் இவ்வாறு கூறுகிறாள் என்று
அண்ணாமலை கருதினார். ஆனால் காலப்போக்கில் அவள் பணம், பணம் என்று பேயாய்
அலைவதையும், யாரையும் நம்பாமல் தூற்றுவதையும் கண்டு அவருக்கு சலிப்பு
ஏற்பட்டது. ஆனால் அவளைக் கண்டித்து பேச அவருக்கு மனம் இல்லை. நாளடைவில்
அண்ணாமலைக்கு மன உளைச்சலில் உடலிலும் தளர்ச்சி ஏற்பட்டது. அதைப்பற்றி அவர்
நாகேஸ்வரியிடம் குறிப்பிட்டபோது, அவள், அதைப் பொருட்படுத்தவில்லை.

இவ்வாறு அண்ணாமலை அவதிப்படும் போது, சாரங்கபுரிக்கு ஒரு யோகி விஜயம்
செய்தார். அண்ணாமலை அவரை தனிமையில் சந்தித்து, "சுவாமி! என் மனத்தில்
நிம்மதி இல்லை. அதனால் என் உடலும் தளர்ந்து விட்டது. நான் என் வாழ்வில்
இழந்த நிம்மதியை திரும்பப் பெறுவது எவ்வாறு?" என்று வினவினார்.
"மகனே! இளவயதில் உன் மனத்தில் வியாபாரத்தைப் பெருக்க வேண்டும் என்ற
லட்சியம் இருந்தது. அதை நீ எட்டிப் பிடித்து விட்டாய். அதனால், இப்போது
உன்னிடம் குறிக்கோள் என்று ஒன்றும்இல்லாததால் வாழ்க்கை சூனியமாகக்
காட்சிஅளிக்கிறது. இனி, மற்றவர்களுக்கு உதவி செய்து அதில் ஆனந்தம் காண
முயற்சிப்பாய்!" என்றார்.
"சுவாமி! மற்றவர்களுக்கு உதவி செய்வது என்றுமே எனக்குப் பிடித்த
விஷயம்! ஆனால் அதைச் செய்யவிடாமல் என் மனைவி என்னைத் தடுக்கிறாள். மேலும்
மேலும் செல்வம் திரட்டச் சொல்லி அவள் நச்சரிப்பதால்தான் என் வாழ்வின்
நிம்மதி பறி போய்விட்டது!" என்று அண்ணாமலை புலம்பினார்.
அதைக் கேட்ட யோகி புன்னகைத்துக் கொண்டே, "செல்வம் ஒன்றுதான் வாழ்வில்
மகிழ்ச்சியைத் தரும் என்று உன் மனைவி தவறான கருத்து கொண்டிருக்கிறாள்.
நன்கு யோசனை செய்தால், அவள் மனத்தை மாற்ற ஏதாவது வழி பிறக்கும். அவளுடைய
மனத்தை மாற்றினால், நீ இழந்த நிம்மதி உன்னை மீண்டும் தானே தேடி வரும்!"
என்றார்.
ஆனால்
அண்ணாமலை அவளுக்கு தைரியம் கூறினார். ஆகையால் ஒரு வேலைக்காரனைத்
துணைக்குஅழைத்துக் கொண்டு இருவரும் புனிதப் பயணம் மேற்கொண்டனர். அவ்வாறு
செல்வதற்குமுன் அண்ணா மலையின் யோசனைப்படி வியாபாரப் பொறுப்பை நரசிம்மன்
என்னும் பணியாளரிடம் ஒப்படைத்தாள்.
"அப்படியே முயற்சிக்கிறேன்!" என்று சொல்லி அண்ணாமலை வீடு
திரும்பினார். அன்றிரவு தூக்கம் பிடிக்காமல் அண்ணாமலை தீவிரமாக யோசித்துக்
கொண்டேயிருந்தார். மறுநாள் அவர் படுக்கையிலிருந்து எழுந்து இருக்கவில்லை.
தன் மனைவியை அழைத்து, தான் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், எழுந்திருக்கவே
முடியவில்லைஎன்றும் கூறினார்.
கலவரமடைந்த நாகேஸ்வரி உடனே மருத்துவரை வரவழைத்தாள். அண்ணாமலையை
சோதித்த மருத்துவர் அவரை ஏதோ ஒரு நோய் பற்றிஇருக்கிறதென்றும், ஆனால் அது
என்ன நோய் என்று தன்னால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் கூறினார். எந்த
ஒரு மருத்துவராலும் அவரைப் பீடித்துள்ள நோய் என்னவென்றே கண்டு பிடிக்க
முடியவில்லை என்று கூறினர். அண்ணாமலை கடைக்குச் செல்வதையே நிறுத்தி விட்டு,
எந்தநேரமும் படுக்கையிலேயே கிடந்தார்.
சில மாதங்கள் கழித்து வீட்டிற்கு வருகை தந்த நாகேஸ்வரியின் உறவினர்
ஒருவர் அவர்கள் இருவரையும் தம்பதி சமேதராக தல யாத்திரை செல்லும்படி அறிவுரை
வழங்கினார். உடல் சரிஇல்லாத கணவரால் எப்படி பயணம் மேற்கொள்ள முடியும்
என்று நாகேஸ்வரி கவலையில் ஆழ்ந்தாள்.

மூன்று மாதங்களாக, பல தலங்களையும் தன் கணவருடன் சேர்ந்து தரிசித்த
நாகேஸ்வரியின் மனத்தில் மாற்றம் உண்டாகியது. அவள் மனத்தை முழுமையாக
ஆக்கிரமத்திருந்த பண ஆசையை அகற்றி சக்தியை உண்டாக்கியது. தனது கணவரின்
உடல்நிலையும் படிப்படியாகத் தேறுவதைக் கண்டு, தனது செல்வத்தால் அடைய
முடியாதது இறைவன்அருளினால் கைகூடுவதைக் கண்டு செல்வத்தை விடச் சிறந்தது
இறையருளே என்று உணர்ந்தாள்.
பயணம் முடிந்து வீடு திரும்பிய பின், தங்களுடைய வியாபாரம் முன்போலவே
சிறப்பாக நடை பெறுவதைக் கண்டு வியந்தாள். பணியாளர்களை திருடர்கள் என்றும்,
அவர்களுக்கு உதவி செய்யக்கூடாது என்றும் தான் முன்பு கணவனிடம் கூறியது
நினைத்து வெட்கினாள். "நான் இதுவரை செல்வம்தான் வாழ்வில் மிக முக்கியம்
என்று நினைத்தது தவறு! வாழ்க்கையின் உண்மையான ஆனந்தம் இறைவன்
வழிபாட்டிலும், மற்றவர்களுக்கு செய்யும் பரோபகாரத்திலும் தான் இருக்கிறது
என்று உணர்ந்து கொண்டேன்!" என்று தன்னிடம் கூறிய நாகேஸ்வரியின் சொற்களைக்
கேட்டு அண்ணாமலை வியப்பிலும், மகிழ்ச்சியிலும் மூழ்கினார்.
தொடர்ந்து நாகேஸ்வரி அவரிடம், "ஏதோ ஒரு அதிசய நோய் உங்களை மட்டும்
பீடித்திருக்கிறது என்று நான் இன்று வரை தவறாக எண்ணிஇருந்தேன். ஆனால்,
உண்மையில் என்னையும் பண ஆசை என்ற நோய் இத்தனை நாள் வாட்டி வதைத்தது.
தலயாத்திரை சென்று வந்த பின் என்னுடைய நோயும் அகன்று விட்டது!" என்றாள்.
மனைவியின் மன மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார்
அண்ணாமலை. தான் நோயாளி போல் நடித்ததை அவளிடம் சொல்லாமல் மறைத்து விட்டார்.

0 comments:
Post a Comment