யார் தகுந்தவன்?


கந்தனூரில் கந்தநாதன் என்பவர் பணக்கார வியாபாரி. அவர் தமக்கு வயதாகிவிட்டதால் தம் வியாபாரத் தைத் தொடர்ந்து நடத்தும் பொறுப் பைத் தம் மூன்று மகன்களில் யாரிடம் ஒப்படைப்பது என்று யோசித்தார். அதற்கு ஒரு வழியும் அவருக்குத் தோன்றியது.

அதன்படி அவர் தம் மூன்று மகன் களையும் அழைத்து "எனக்கோ வய தாகிவிட்டது. உங்கள் மூவரில் ஒரு வனிடம் என் வியாபாரத்தை ஒப் படைக்க நினைக்கிறேன். அந்தப் பொறுப்பை ஏற்கத் தகுந்தவன் யார் என்பதை அறிய உங்களுக்கு ஒரு சிறு பŽட்சை வைக்கப் போகிறேன். அதன் முடிவைக் கண்டே என் வியாபாரத் தையும் சொத்துக்களையும் நிர்வகிக் கும் பொறுப்பை அவனிடம் ஒப் படைப்பேன்," என்றார். அதுகேட்டு மூன்று மகன்களும் தம் சம்மதத்தைத் தெரிவித்தார்கள்.

அப்போது கந்தநாதன் தம் சட் டைப் பையிலிருந்து மூன்று ரூபாய் நாணயங்களை எடுத்து அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு ரூபாய் வீதம் கொடுத்தார். பிறகு அவர் "உங்களிடம் உள்ள ஒரு ரூபாயைக் கொண்டு இன்று மாலைக்குள் ஒரு நல்ல வேலையைச் செய்துவிட்டு வர வேண்டும்," என்று கூறி அவர்களை அனுப்பினார்.

மாலைப் பொழுது வந்தது. கந்த நாதனின் மூன்று மகன்களும் வந்து விட்டார்கள். அவரும் தன் மூத்த மகனைத் தம் அருகே அழைத்து, "நான் கொடுத்த ஒரு ரூபாயைக் கொண்டு என்ன நல்ல வேலையைச் செய்தாய்?" என்று கேட்டார். அவ னும், "நம் ஊர்க் கோயில் வாசலில் ஒரு கிழவி பசியால் துடிதுடிப்பதைக் கண்டேன். நீங்கள் கொடுத்த ஒரு ரூபாயை அவளுக்குக் கொடுத்து ஏதாவது வாங்கிச் சாப்பிடச் சொன் னேன்," என்றான்.

அடுத்து அவர் தம் இரண்டாவது மகனை அழைக்கவே, அவனும் "நான் நம்மூர் கோயிலுக்குள் போய் அர்ச்சகரிடம் நம் வியாபாரம் நன்கு நடைபெற அர்ச்சனை செய்யுமாறு கூறினேன். நான் நீங்கள் கொடுத்த ஒரு ரூபாயை அந்த அர்ச்சகருக்குக் கொடுத்தேன்," என்றான்.

கந்தநாதன் தம் மூன்றாவது மகனைப் பார்க்க, அவனோ ஒரு ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத் தான். அவரும், "என்ன இது? நான் கொடுத்த ஒரு ரூபாயை நீ எவ்விதத் திலும் செலவு செய்யவில்லையா?" என்று கேட்டார். அவனும் "பணத்தை வீணாகச் செலவு செய்வதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்பதை நான் அறி வேன். ஆனாலும் ஒரு ரூபாயைச் செலவழித்து ஒரு நல்ல வேலை யைச் செய்தேன்," என அதைக் கேட்டு கந்தநாதன் திகைத்துப் போனார்.
அப்போது அவன், "ஆச்சரியப் படுகிறீர்களா? நீங்கள் கொடுத்த ஒரு ரூபாயில் மூன்று பூசணிக் காய்களை வாங்கி, அவற்றை வேறொரு இடத் தில் மிக அருமையான பூசணிகள் எனக் கூறி இரண்டு ரூபாய்க்கு விற் றேன். அதில் ஒரு ரூபாயை எடுத்து அரை ரூபாய்க்குத் தயிர்சாதம் வாங்கி பசியால் வாடும் ஒரு சிறுவனுக்குக் கொடுத்து அவனது பசியைப் போக்கி னேன். மீத அரை ரூபாயைக் கோயில் உண்டியலில் போட்டேன். இப்படி ஒரு ரூபாயில் நல்ல வேலையைச் செய்து மீத ஒரு ரூபாயைக் கொண்டு வந்திருக்கிறேன்," என்றான்.

தன் மூன்றாவது மகனின் வியாபார சாமர்த்தியத்தையும் சேமித்து வைக்கும் குணத்தைக் கண்டு கந்த நாதன் மகிழ்ந்து அவனிடமே தம் வியாபாரத்தையும் சொத்துக்களை யும் ஒப்படைத்தார்.


0 comments:

Post a Comment

Flag Counter