கிழவிக்கு நன்றிபாலூரிலிருந்து புறப்பட்ட இளை ஞன் புருஷோத்தமன் மருதூரை அடைந்தபோது நன்கு இருட்டி விட்டது. அன்றைய இரவை எங்கே கழிப்பது என யோசித்தபோது ஒரு சிறு வீட்டைக் கண்டு அதன் கதவைத் தட்டினான்.
சில நிமிடங்களுக்குப் பிறகே கதவைத் திறந்து கொண்டு ஒரு கிழவி வெளியே வந்தாள். அவளைப் பார்த்த அவன், "பாட்டி! நான் பாலூரி லிருந்து ஏதாவது வேலை கிடைக் குமா என்று இந்த ஊருக்கு வந் திருக்கிறேன். மிகவும் பசியாக இருக்கிறது," என்றான். கிழவியும் அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு "சரி. உள்ளே வா!" என்றாள். அவ னும் உள்ளே போனதும் கிழவி ஒரு தட்டில் உணவை வைத்து அவனிடம் கொடுத்தாள்.

அவனும் அதைச் சாப்பிட்டு விட்டு "பாட்டி! இன்றிரவு இங்கே இருந்துவிட்டு நாளைக் காலையில் போய்விடுகிறேன். வீட்டில் வேறு யாரும் இல்லையா?" என்று கேட் டான். கிழவியும் "என் மகனும் மரு மகளும் வெளியூருக்குப் போயிருக் கிறார்கள். நாளைக்குத் தான் வரு வார்கள்," என்றாள். அவனும் "சரி, நான் இங்கே ஓரமாகப் படுத்துக் கொள்கிறேன்," என்று சொல்லி தன் மேல் துண்டை விரித்துப் படுத்தான். ஆனால் அவனுக்குத் தூக்கம் வர வில்லை. அப்போது கிழவி அங் கிருந்த பீரோவைத் திறந்து நகைப் பெட்டியை எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் அதற்குள் வைத்து பீரோ வைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போவதையும் அவள் அதைத் தன் தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு படுத்துவிட்டதை யும் அவன் கவனித்தான்.

அப்போது அவன் மனம் அந்த நகைப் பெட்டியைத் திருடிக் கொண்டு போய்விட எண்ணியது. இச்சமயத்தில் யாரோ இருவர் ஜன்னலருகே நின்று தாழ்ந்த குரலில் பேசுவதை அவன் கேட்டான். அவர் களில் ஒருவன் "கிழவி நகைகளை எல்லாம் நகைப் பெட்டியில் வைத்து பீரோவில் வைத்திருக்கிறாள். பீரோ சாவி அவளிடம் இருக்கிறது. அவளை அடித்துப் போட்டுவிட்டு சாவியை எடுத்து பீரோவைத் திறந்து நகைப் பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடிவிடலாம்," என்றான்.

அதைக் கேட்ட புருஷோத்தமன் மனம் கிழவியைத் திருடர்களிட மிருந்து காப்பாற்ற வேண்டும் என எண்ணியது. எனவே மெதுவாக எழுந்து கிழவியருகே போய் அவளை எழுப்பினான். அவளிடம் திருடர்கள் இருவர் திருட வரப்போவதைக் கூறி என்ன செய்ய வேண்டும் என்பதை யும் சொன்னான்.

அதன்படி அவன் வாசல் கதவைத் திறந்து கிழவியுடன் வீதிக்கு வந்து நடந்து சென்றான். கதவு திறந்து கிடப்பதைக் கண்டு திருடர்கள் மகிழ்ந்து போய் அந்த வீட்டிற்குள் சென்றார்கள். புருஷோத்தமன் உடனே ஓடி வந்து வாசல் கதவை மூடி வெளிப்புறம் தாளிட்டான். திருடர் கள் வீட்டினுள் அடைபட்டு விட்டார்கள். கிழவி ‘திருடன்! திருடன்!!’ எனக் கூவவே, அக்கம் பக்கத்தவர் ஓடி வந்தார்கள். அவர்கள் வாசல் கதவைத் திறந்து கொண்டு ‘திபுதிபு’வென்று உள்ளே நுழைந்து திருடர்களைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் காவலதிகாரியிடம் ஒப்படைத்தார்கள்.

அப்போது புருஷோத்தமன் கிழவி யிடம் "பாட்டி! திருடர்கள் வருமுன் உன் நகைகளைத் திருட நானே எண்ணினேன். ஆனால் திருடர்கள் உன்னை அடிக்கப் போவதாகக் கூறி யது என் மனதை மாற்றிவிட்டது," என்றான். கிழவியும் பரிவுடன் அவன் முதுகைத் தடவி "தம்பி! நீ மனம் மாறி எனக்கு உதவி செய்தாய். மனம் மாறிய நீ நல்லவனே. என் மகனின் வயலில் நீ வேலை செய்ய ஏற்பாடு செய்கிறேன். வேலைக்காக நீ இனி அலைய வேண்டாம்," என்றாள். இளைஞன் ஆனந்தக் கண்ணீர் வடித்து கிழவிக்கு நன்றி செலுத்தினான்.0 comments:

Post a Comment