செருப்பு அல்லது ஷூ வாங்கியவுடன் அவை வைக்கப்பட்டிருக்கும் பெட்டியை
தூக்கியெறிந்து விட வேண்டாம். அந்தப் பெட்டியைக் கொண்டு, அழகிய பரிசுப்
பொருட்கள் செய்து நண்பர்களை அசத்தலாம் வாங்க!
தேவையான பொருட்கள்:
செருப்புப் பெட்டியில் மடிப்புகள், ஓட்டைகள் ஏதும் இல்லை என்பதை உறுதி
செய்து கொள்ளுங்கள். படத்தில். காட்டியுள்ளபடி பெட்டியின் மூடியில் கொஞ்சம்
இடைவெளி விட்டு கத்தரித்துக் கொள்ளுங்கள். மூடியின் உட்புறத்தில் கண்ணாடி
காகிதத்தை சரியான அளவுக்கு கத்தரித்து, பசை தடவி பெட்டியின் மூடியில் ஒட்டி
விடுங்கள்.
இப்போது பார்ப்பதற்கு அலங்காரப் பெட்டி போலத் தோற்றமளிக்கும். அடுத்து,
வண்ண வண்ண பெயின்ட்களை எடுத்துக் கொண்டு, பெட்டி முழுக்க உங்கள் விருப்பம்
போல தூரிகையைக் கொண்டு வண்ணம் தீட்டுங்கள். அடுத்து பொம்மையை எடுத்து
பெட்டியின் உள்ளே வைத்து ஒட்டி விடுங்கள்.
வண்ணக் காகிதங்களை எடுத்துக் கொண்டு, விதவிதமான வடிவங்களில், வெவ்வேறு வண்ணங்களில் சிறிய
அளவிலான பூக்களை வரைந்து கொள்ளுங்கள்.
வரைந்தவற்றை கத்தரிக்கோல் கொண்டு அழகாக கத்தரித்து எடுத்துக்
கொள்ளுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக பசை தடவி, கண்ணாடி காகிதத்தைச் சுற்றிலும்
அழகாக ஒட்டுங்கள். இறுதியாக பசை எடுத்து, பெட்டியுடன் சேர்த்து மூடியை
ஒட்டிவிடுங்கள். அவ்வளவு தான்! அலங்காரப் பெட்டி தயார். நண்பர்களுக்கு
பரிசளித்து அவர்களை அசத்துங்கள்!

தேவையான பொருட்கள்:
- புதிய செருப்புகள் வாங்கும் போது கிடைக்கும் பெட்டி
- கண்ணாடி காகிதம் (பேன்சி கடைகளில் கிடைக்கும்)
- கத்தரிக்கோல்
- வண்ணக் காகிதங்கள்
- அழகிய சிறிய பொம்மை,
- பசை, தூரிகை,
- பெயின்ட்



வண்ணக் காகிதங்களை எடுத்துக் கொண்டு, விதவிதமான வடிவங்களில், வெவ்வேறு வண்ணங்களில் சிறிய
அளவிலான பூக்களை வரைந்து கொள்ளுங்கள்.

0 comments:
Post a Comment