மாதவியின் துணிச்சல்

 

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி, அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர், அதைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும்போது, அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, "மன்னா! உன்னுடைய இந்த அபாரத் துணிச்சல் பாராட்டுக்கு உரியது.  பேய் என்று தெரிந்தும் அதை தைரியமாக எதிர்கொள்ளத் துணிந்த ஒரு பெண்ணான மாதவியின் கதையைக்  உனக்குக் கூறுகிறேன், கேள்" என்று சொல்லிவிட்டுக் கதை சொல்லத் தொடங்கியது.

அம்பிகாபுரி கிராமத்தில் வசித்து வந்த வீரன் என்ற வாலிபன் அதே கிராமத்தைச் சேர்ந்த காமினி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். பெயர்தான் வீரனே தவிர, அவனுக்குத் தன் தாயைத் தட்டிக் கேட்கக் கூடத் துணிவில்லை. அவன் தாய் மங்கா தன் மருமகளை மிகவும் கொடுமைப்படுத்தி வந்ததைக் கண்டும், அவன்
தாயைக் கண்டித்ததே இல்லை. பலமுறை காமினி தன் கணவனிடம் தனிக்குடித்தனம் சென்று விடலாம்
என்று கெஞ்சியதுண்டு. ஆனால், அவன் அதைக் காது கொடுத்து கேட்டது இல்லை.

 தன் கணவன் கையாலாகாதவன் என்று புரிந்து கொண்ட காமினி, அந்த நரகத்திலிருந்துத் தப்ப ஒரே வழி தன் மாமியாரைக் கொன்று விடுவதுதான் என்ற முடிவுக்கு வந்தாள். ஒருநாள் மாமியார் அருந்தும் பாலில் கொடிய விஷத்தைக் கலந்து விட்டாள். ஆனால், தானே விஷங்கலந்த பாலை தெரியாமல் அருந்திவிட்டாள். மாமியான் கொடுமை தாங்காமல் காமினி தற்கொலை செய்து கொண்டாள் என்றே கிராமத்தினர் நம்பினர். துர்மரணம் அடைந்த காமினி பேயாக மாறி அந்த வீட்டையே சுற்றி வந்தாள். தன் மாமியாரைப் பழிவாங்கும் வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்து இருந்தாள்.

ஒரு வருடம் சென்றது. மங்கா தன் மகனுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க முயன்றாள். ஆனால்,  மங்கா ஒரு கொடுமைக்கா என்று அறிந்த கிராமத்தினர் பெண் கொடுக்கத் தயங்கினர். கடைசியில், அந்த கிராமத்தில் மிகவும் ஏழையான ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மாதவியைத் தன் மகனுக்கு மணடிக்க எண்ணி,  மங்கா அவள் பெற்றோடம் வலியச் சென்று வரதட்சணை எதுவும் வேண்டாம் என்றும், திருமணச் செலவுகளையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் கூறினாள். மாதவியின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதித்தனர்.

ஆனால், மாதவிக்கு மங்காவின் மருமகளாகச் செல்ல விருப்பமில்லை. ஆயினும், தன் குடும்பத்தின் ஏழைமையை மனத்தில் கொண்டு, அரைமனத்துடன் சம்மதித்தாள். சிறு வயது முதல் தான் பூஜித்து வரும் ஜெகதாம்பாள் அம்மனை தீவிரமாக பூஜை செய்து, தன் எதிர்கால வாழ்க்கை மகிழ்ச்சியாகக் கழிய வேண்டும் என்று பிராத்தனை செய்தாள்.  ஒருநாள், அம்மன் கோயிலிலிருந்து வெளியே வரும்போது, மரத்தடியில் ஒரு பெண் யோகினிஅமர்ந்திருக்கக் கண்ட மாதவி அவளைச் சென்று வணங்கினாள். பின்னர், அவளிடம் தன் வளமான வாழ்விற்கு வரம் வேண்ட, யோகினியும் ஆசீர்வாதம்  செய்தாள்.

 மாதவி சென்ற பிறகு, தன் தியானத்தில் காமினியைக் கண்ட யோகினி, அவளை அழைத்து,  வீரனின் வீட்டை விட்டு வெளியேறி, பேய்கள் வசிக்கும் உலகத்திற்கு சென்று விடச் சொன்னாள். அதற்கு பேய் வடிவத்தில் இருந்த காமினி, "நான் என்னை கொடுமைப் படுத்திய மாமியாரை அந்த வீட்டை  விட்டு வெளியேற்றும் வரை அங்குதான் சுற்றுவேன். அதற்கு ஏதாவது வழியிருந்தால் சொல்லுங்கள். தவிர,  என் கணவருடன் வாழ்க்கை நடத்த ஏதேனும் வழி இருந்தால் கூறுங்கள்" என்று கேட்டாள்.

அதற்கு யோகினி, "பேயான நீ மனிதனுடன் குடித்தனம் நடத்த முடியாது. இருந்தாலும் உன் கடந்த காலத்தை நினைத்து உன் மேல் பரிதாபம் உண்டாவதால், சில நாள்கள் உன் கணவருடன் ஆனந்தமாக வாழ்க்கை நடத்த வரம் தருகிறேன். உனக்கு மனித உருவம் தருகிறேன். ஆனால், அது தற்காலிகமாகத்தான் இருக்கும். தேவை இல்லாமல் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்க நினைத்தால் உனக்கு நரகம்தான் கிடைக்கும். தவிர, உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதவரை உன்னிடம் சில அற்புத சக்திகள் இருக்கும்.

கடவுள் நம்பிக்கை உண்டானால் மீண்டும் பேயாக மாறுவாய். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்! நீ எப்படியாயினும் சில நாள்களுக்குப் பின் பேயாக மாறி, உன் ஆயுள் காலத்தைக் கழித்து விட்டுத்தான்  மீண்டும் மனிதப்பிறவி கிடைக்கும். அந்த சில நாள்களுக்கு மட்டும் நீ மணவாழ்க்கையை மேற்கொள்வாய்"  என்று ஆசீர்வதித்தாள்.

உடனே, காமினி தன் பழைய உருவத்தைப் பெற்றுவிட்டாள். நேராகத் தன் வீட்டுக்குச் சென்று கதவைத்  தட்டியவுடன், அவளுடைய கணவரும், மாமியாரும், "பேய், பேய்!" என்று பயந்து குலைநடுங்க, அவள்   அவர்களிடம் நடந்ததை விளக்கினாள். பிறகு, முதல் காயமாகத் தன் மாமியாரை வீட்டை விட்டு  வெளியேற்றினாள். பின்னர், தன் கணவனுடன் சுதந்திரமாக வாழத் தொடங்கினாள். யோகினி அளித்து  இருந்த அபூர்வ சக்தியினால், வீட்டையே மாளிகைபோல் மாற்றினாள். அறுசுவை விருந்து படைத்தாள்.

 "மாதவி! என் வாழ்க்கையில் நிகழ்ந்த அநியாயத்தைப்பற்றி நீ அறிய மாட்டாய். என் மாமியார் என்னை மிகவும் கொடுமைப் படுத்தினாள். அதனால் அவளைக் கொல்ல முயன்ற நான், துரதிருஷ்டவசமாக, நானே இறந்து போனேன். இப்போதாவது என்னை நிம்மதியாக வாழ விடு" என்றாள் காமினி.

"காமினி! உன் மாமியாரின் மனத்தை மாற்றி நல்லவளாக்க நீ முயற்சி செய்து இருக்க வேண்டும். அதற்கு நீ  என்னைப் போல் அம்மனை இடைவிடாமல் பூஜை செய்திருந்தாலே, நடந்து இருக்கும். ஆனால், நீ உன்  மாமியாரைக் கொலை செய்யத் திட்டமிட்டு, அந்தப் பாவத்தை இப்போது அனுபவிக்கிறாய். ஆனால், நான்  உன்னைப் போலன்றி அம்மனை அல்லும் பகலும் வழிபட்டுப் பிராத்தனை செய்திருக்கிறேன். தவிர, எனக்கு  வீரனுடன் மகிழ்ச்சியான மணவாழ்வு கிட்டும் என்று ஒரு யோகினியும் ஆசி வழங்கியிருக்கிறாள்.

அதனால்,  அம்மனின் அருள் பெற்ற என்னை வாழ விடு! நீயும் அம்மனை இன்றுமுதல் வழிப்பட்டால்  மறுபிறவியிலாவது நீ நலமாக இருக்கலாம்" என்றாள் மாதவி. "எனக்குக் கடவுளின் மீது நிம்பிக்கை கிடையாது. உன்னுடைய கடவுள் நம்பிக்கை வீண் என்று இப்போது  நிரூபிக்கிறேன்" என்று சீறிய காமினி, பயங்கரப் பேயுருவம் எடுத்து, மாதவியின் மீது பாய முற்பட்டாள்.

ஆனால், சிறிதும் அஞ்சாத மாதவி, "அம்மன் என்னைக் காப்பாற்றுவாள். உன்னால் என்னை ஒன்றும் செய்யமுடியாது" என்று சவால்விட, காமினி அவள் மீது பாய்ந்தாள். ஆனால், அவளுடைய தாக்குதலினால்  மாதவிக்கு ஒன்றுமே ஆகவில்லை. மிகுந்த ஏமாற்றத்துடன் மீண்டும் மனித உருவம் எடுத்த காமினி, "ஆகா!நீ உண்மையாகவே அம்மன் அருள் பெற்றவள்தான்!" என்றவள் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தபின், "நீசொல்வது உண்மைதான், மாதவி! ஆகவே, நான் இந்த வீட்டை விட்டு சென்றுவிட முடிவு செய்து  விட்டேன். நீயே வீரனை மணந்துகொண்டு சுகமாக இரு!" என்று சொல்லிவிட்டு, அந்த வீட்டை விட்டு  வெளியேறினாள்.

இந்த இடத்தில் கதையை நறுத்திய வேதாளம், "மன்னா! முதலில் வீரனைத் திருமணம் செய்து கொள்ளத் தயங்கிய மாதவி பிறகு எப்படி சம்மதித்தாள்? எத்தனையோ  பலசாலிகளை, மந்திரவாதியை விரட்டி அடித்த காமினியால் மாதவியை ஏன் ஒன்றும் செய்ய  முடியவில்லை?

தன் கணவனை வேறு எந்தப் பெண்ணும் திருமணம் செய்யவிடமாட்டேன் என்று  உறுதியாக இருந்த காமினி, திடீரென மனம் மாறியது ஏன்? என்னுடைய கேள்விகளுக்குப் பதில் தெந்து இருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்றது.

அதற்கு விக்கிரமன், "மாதவி முதலில் வீரனை மணம் செய்து கொள்ளத் தயங்கியது உண்மைதான்!  மாதவியை சம்மதிக்கச் செய்தது அவளுடைய குடும்பத்தின் ஏழைமை மட்டுமன்றி, அவளுக்கு அம்மனின்  மீதிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும்தான்! பொதுவாகவே, பேய்களுக்கு சில அமானுஷ்ய சக்திகள்  உண்டு. தவிர, யோகினியின் தன்னுடைய அமானுஷ்ய சக்தியினால் மாதவியைக் கொன்றுவிட முடியும்  என்றே காமினி நம்பினாள். ஆனால், அவளால் மாதவியை ஒன்றும் செய்ய முடியவில்லை.

அப்போதுதான்  மாதவிக்கு அம்மன் அருள் பரிபூரணமாக உள்ளதென்றும் அவளை எந்த அமானுஷ்ய சக்தியும் ஒன்றும்  செய்ய முடியாது என்றும் புலப்பட, அவளுக்கும் கடவுள் நம்பிக்கை உண்டாகி விட்டது. யோகினி கூறியபடிகடவுள் மீது நம்பிக்கை பிறந்தால், தன் சக்தியை இழக்க நேரிடும் என்னும் விஷயம் ஞாபகம் வந்தது.

தவிர, மற்றவர்களுக்குத் தீங்கு செய்தால், தான் நரகத்திற்குச் செல்ல நேரிடும் என்ற யோகினியின் வாக்கும்நினைவுக்கு வந்தது. தனக்கு மனித உருவம் தற்காலிகமானதுதான் என்றும் ஞாபகம் வந்தது. ஆகவே,  அவள் அந்த வீட்டை விட்டு வெளியேறினாள்" என்றான். விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தை  நோக்கி பறந்து சென்றது.

 
வேதாளம் வரும்...

0 comments:

Post a Comment

Flag Counter