தருமம் வெல்லும்

 

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அதை சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் சேல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, "மன்னா! நீ ஏன் இவ்வாறு காட்டினில் சுற்றியலைகிறா? யாரையாவது பழி வாங்க விரும்புகிறாயா?

உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? வாழ்நாள் முழுவதும் பழி வாங்கத் துடிக்கும் சிலர், அதற்கான வாப்பு கிடைக்கும் போது பழிவாங்கும் எண்ணத்தையே கைவிட்டு விடுகின்றனர். அப்படிப்பட்ட ஒருவனின் கதையைக் கூறுகிறேன், கேள்!" என்று கதை சோல்லாயிற்று.

தண்டகாரண்யக் காட்டின் கிழக்குப் பகுதியில் இரு காட்டு சாதி மக்கள் வசித்து வந்தனர். ஒருநாள் ஜங்கிணி சாதியைச் சேர்ந்த சில இளம்பெண்கள் வேட்டையாடிக்கொண்டிருந்தனர்.

  அவர்களுள் ரத்னாங்கியும் ஒருத்தி! பார்ப்பதற்கு மிக அழகானவள். ஒரு முயலைத் துரத்திக் கொண்டே சேன்ற ரத்னாங்கி வழி தவறி தன் தோழிகளிடமிருந்து பிரிந்து விட்டாள். தன் அவர்களுடன் திரும்பிச் சேர்ந்து கொள்ள முயலும் போது, திடீரென ஒரு இளைஞன் அவள் எதிரில் தோன்றினான்.

பார்த்தவுடனேஅவன் கண்டோலி சாதியைச் சேர்ந்தவன் என்று அவளுக்குத் தெரிந்து விட்டது. ஜங்கிணி சாதியினருக்கும், கண்டோலி சாதியினருக்கும் பல ஆண்டுகளாகக் கடும்பகை நிலவி வந்தது. பகை சாதியைச் சேர்ந்த இளைஞனைக் கண்ணெதிரே கண்டவுடன், ரத்னாங்கஇவனைக் கொல்ல எண்ணி, தன் வில்லில் அம்பைப் பொருத்தி அவனைக் குறிபார்த்தாள். ஆனால் அவனோ அவளைப் பார்த்து புன்னகைத்தவாறு நின்று கொண்டிருந்தான்.

அதைக்கண்டு வியப்புற்ற ரத்னாங்கி, "உனக்கு உன் உயிரின் மீது ஆசை இல்லையா?" எனக் கேட்டாள். அதற்கு அவன், "உன்னுடைய அற்புதமான அழகில் கட்டுண்டு நிற்கிறேன்" என்றான்.

இதைக் கேட்டதும், ரத்னாங்கி வெட்கத்துடன் தலை குனிந்தாள். "பெண்ணே! உன் பெயர் ரத்னாங்கி என்று எனக்குத் தெரியும். என் பெயர் தினா! இன்று உன்னை நேரில் கண்டதில் சோர்க்கத்தையே அடைந்தது போல் உணருகிறேன். நாளைக்கும் என்னை சந்திக்க இதே இடத்திற்கு வருவா!" என்று சோல்லிவிட்டு அவன் திரும்பிச் சேன்று விட்டான்.
ரத்னாங்கியும் வீடு திரும்பினாள். அன்றிரவு அவளால் உறங்க முடியவில்லை. தினாவின் தோற்றம் அவளைத் தூங்க விடாமல் சேதது. மறுநாள் அவள் அவனை சந்திக்கச் சேல்லவில்லை. ஆனால் ஐந்தாவது நாள் அதே இடத்திற்குச் சேன்றாள்.

என்ன ஆச்சரியம்? அவளை சந்திக்க தினா தயாராக நின்று கொண்டு இருந்தான். "நீ நான்கு நாள்களாக தினமும் இங்கே வந்து எனக்காகக் காத்திருக்கிறாயா?" என்று ரத்னாங்கி வியப்புடன் கேட்டாள்.

 "இல்லை, ரத்னா! உன் மனத்தில் முழுமையாக இடம்பெற நான்கு நாள்கள் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். அதனால் இன்றுதான் நான் வந்தேன்" என்றான் தினா. அவனுடைய சாமர்த்தியமான பதிலினால் ரத்னாங்கியின் உள்ளம் துள்ளிக் குதித்தது. பிறகு இருவரும் மனம்விட்டு வெகுநேரம் உரையாடினார்கள். திடீரென தினா, "ரத்னா! என்னை நீ திருமணம் சேது கொள்வாயா?" என்று கேட்டான்.

இதைக் கேட்டதும், அவள் இதயம் மகிழ்ச்சியினால் படபடவென அடித்துக்கொள்ள, "தினா! எனக்கு முழு சம்மதம்! ஆனால் இதனால் நமது சாதி மக்களிடையே ஒரு யுத்தமே நிகழுமே!" என்றாள்.

"ஏன் யுத்தம் நிகழ வேண்டும்? இதன் காரணமாக இரு சாதியினரின் நெடுநாளையப் பகை தீர்ந்து நட்பு உண்டாகலாமே!" என்றான் தினா. "அப்படியும் ஆகலாம்! இரு தரப்பினருக்கும் சண்டைவந்து ரத்த ஆறும் ஓடலாம். ஆனால் என்னைத் திருமணம் சேது கொள்ள உனக்குத் துணிச்சல் இருக்கிறதா?" என்று ரத்னா கேட்டாள்.

உடனே தினா காக்கை இறகுகளினாலான ஒரு தொப்பியை அணிந்து கொண்டு, "ரத்னா! நான் இப்போது உங்கள் சாதிக்காரனைப் போல் இருக்கிறேன். உன்னோடு வந்து இன்று உன் வீட்டில் தங்கவும் போகிறேன். இப்போது சோல்! எனக்கு துணிச்சல் இருக்கிறதல்லவா?" என்றவன் அவள் கையைப் பிடித்துக் கொண்டு அவள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ரத்னாவின் வீட்டிலே அன்றிரவு தங்கினான்.

நடு இரவில் ஏதோ சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட ரத்னா, தினா சத்தமின்றி தன் வீட்டை விட்டு வெளியே சேல்வதைப் பார்த்தாள். ரத்னாவும் அவனைப் பின் தொடர்ந்தாள். நேராக ஜங்கிணி சாதியினரின் குல தெவமான வீரம்மா கோயிலை அடைந்த தினா, அம்மனின் கையில் இருந்த உடுக்கை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

அவன் மீது பாந்து சேன்று அவனைப் பிடித்துக் கொண்ட ரத்னா, "அடப்பாவி! இதற்காகவா என் மீது பிரியம் இருப்பதுபோல் நாடகம் போட்டாயா?" என்று கோபித்தாள். "இல்லை ரத்னா! எங்கள் கிராமத்தில் சில துர்தேவதைகளின் வருகையினால்தான் விஷக்காச்சல் ஏற்பட்டுள்ளது.

 உங்கள் குலதெவமான வீரம்மா மகிமை வாந்தவள். அவளுடைய உடுக்கை எடுத்துக் போ ஒலிக்கச் சேதால் துர்தேவதைகள் ஓடி விடுவார்கள். அதை எடுப்பதற்காகத்தான் நான் உன் மீது பிரியம் இருப்பது போல் நடித்தேன். ஆனால் உன்னைப் பார்த்தது முதல் உன் மீது உண்மையாகவே பிரியம் கொண்டு விட்டேன்" என்றாள்.

இதற்குள், அவர்களுடைய பேச்சு சத்தம் கேட்டு அங்கு வந்த பூசாரி கூக்குரல் எழுப்ப, ஜங்கிணி சாதித்காரர்கள் ஓடிவந்து இருவரையும் பிடித்து விட்டனர். மறுநாள் இருவரும் ஜங்கிணி கிராமத்துப் பஞ்சாயத்தில் நிறுத்தப்பட்டனர். வீரம்மா கோயில் பூசாரி இருவர் மீதும் குற்றம் சாட்டி, ஜங்கிணி சாதியின் தலைவரான பல்லுகமன் முன்னிலையில் வழக்கு விசாரித்தனர்.

"ரத்னாங்கி! நமது ஜென்மப் பகைவர்களின் குலத்தைச் சேர்ந்த ஒருவனுடன் நட்பு வைத்துக் கொண்டு, அவனுக்கு உன் வீட்டில் தங்க இடம் கொடுத்தா. உன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா?" என்று கேட்டான்.
"தினாவுடன் நட்பு வைத்துக் கொண்டால், நம் இரு சாதியினர் இடையே ஒற்றுமை தோன்றும் என்று கருதினேன்" என்றாள் ரத்னா!

"குற்றம் சேத நீ மன்னிப்புக் கேட்காமல் தான் சேதது சரி என்று வாதிடுகிறா!" என்ற பூசாரி, தினாவை நோக்கி, "நீ எங்களுடைய பகைவன்! எங்கள் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்தா! எங்கள் சாதிப் பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டா. எங்கள் குல தெவத்தின் உடுக்கைத் திருடினா. இந்தக் குற்றங்களை ஒப்புக் கொள்கிறாயா?" என்று கேட்டான்.

"இவற்றை நான் குற்றம் என்று நினைக்கவில்லை. எங்கள் கிராமத்தினர் பலரின் உயிரைக் காக்கத்தான் நான் இவ்வாறு சேதேன். தயவு சேது என்னுடைய நோக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள்" என்றான். உடனே, பல்லுகமன் பக்கம் திரும்பிய பூசாரி, "தலைவரே! இவர்கள் இருவரும் சேதது மிகப்பெரிய குற்றம்! இவர்களுக்கு மரண தண்டனை விதியுங்கள்" என்றான். இயற்கையிலேயே மிகவும் நல்லவனான பல்லுகமன் சற்று நேரம் சிந்தித்தப்பின், "பூசாரி குற்றஞ் சாட்டுவது சரிதான்!

 ஆனால் தினா மற்றும் ரத்னாங்கியின் நோக்கம் உன்னதமானது. அதனால் நான் இருவரையும் மன்னிப்பதோடு மட்டுமல்லாமல், இருவருக்கும் திருமணம் சேது வைக்கவும் சம்மதிக்கிறேன். தினா அம்மனின் உடுக்கை எடுத்துச் சேல்லட்டும். அவனுடைய கிராமத்தில் விஷக்காச்சல் அகன்றபின், திரும்பிக் கொண்டு வரட்டும்" என்றான்.

தலைவரின் நியாயமான தீர்ப்பை கேட்டு, ஜங்கிணி சாதியினர் மகிழ்ச்சியில் ஆரவாரம் சேதனர். தவிர, இந்தத் தகவலை கண்டோலி சாதித் தலைவன் தண்டோதண்டனுக்கும் அனுப்பப்பட்டது. தகவலைக் கேட்ட தண்டோதண்டன் வியப்படைந்தான். பல்லுகமன் இத்தனை நியாயமாக முடிவெடுப்பான் என்று அவன் எதிர்ப்பார்க்கவில்லை.

 தண்டோதண்டன் இயற்கையிலேயே மிகக் கொடியவன். பல ஆண்டுகளுக்கு முன், பல்லுகமன் தன் பரிவாரத்தடன் வேட்டையாடச் சேன்றிருந்து போது, விஷயமறிந்த அவன் ஒரு யானைப் படையுடன் பல்லுகமன் கிராமத்திற்குச் சேன்று சூறையாடினான். பல மக்களைக் கொன்று குவித்தான். பல்லுகமன் வீட்டுக்குள் புகுந்து, அவனுடைய ஒரே மகனைத் திருடிக் கொண்டும் வந்து விட்டான். அந்தப் பிள்ளைதான் தினா! உண்மையில் தினா பல்லுகமனின் புதல்வன்! அன்று இரு சாதியினருக்கும் இடையே மூண்ட கடும்பகை பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது.

பழைய பகையை மனத்தில் கொண்டு தினாவிற்கு மரண தண்டனை விதிக்காமல், அவனை மன்னித்தது அவன் மனத்தில் ஒரு பெரும் புரட்சியை உண்டாக்கியது. மனம் மாறிய தண்டோதண்டன் தன் சாதி மக்களை அழைத்து, "பல்லுகமன் தினாவை பெருந்தன்மையுடன் மன்னித்த பிறகு, நாம் அவர்களுடன் பகைமை பாராட்டுவதில் பொருள் இல்லை. தினா, ரத்னா திருமணத்தில் நாம் அனைவரும் பங்கேற்போம். அப்போது தினா யார் என்ற உண்மையை பல்லுகமனுக்குக் கூறுவேன்" என்றான்.


இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி "மன்னா! பல்லுகமன் ரத்னாவையும், தினாவையும் மன்னித்தது பெரிய விஷயமில்லை. ஆனால் மிகக் கொடியவனான தண்டோதண்டன் எப்படி மனம் மாறினான்? இரு சாதியினரும் ஒன்றுபட அவன் எப்படி சம்மதித்தான்? வீரம்மா அம்மனின் உடுக்கைப் பெற வேண்டும் என்ற காரணத்திற்காக அவன் இந்த முடிவுக்கு வந்தானா? அல்லது தன் வளர்ப்பு மகன் மன்னிக்கப்பட்டான் என்பதற்காகவா? என்னுடைய கேள்விகளுக்கு பதில் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்றது.

அதற்கு விக்கிரமன், "தண்டோதண்டன் மனம் மாறியதன் காரணமே வேறு! ஆரம்பத்திலிருந்தே தர்மத்தையும், நியாயத்தையும் கடைப் பிடித்து வந்த பல்லுகமனின் சேயல்கள் அவன் மனத்தை மாற்றின.  இத்தகைய நியாயமான, நேர்மையான பல்லுகமனுடன் விரோதம் பாராட்டுவதற்கு எந்தப் பயனும் இல்லை என்று தோன்றியது. தவிர, இரு சாதியினரும் ஒன்றுபட்டால், நன்மைகளே அதிகம் என்றும் தோன்றியது. ஆகையால் தண்டோதண்டன் மேற்கூறிய முடிவெடுத்தான்" என்றான்.

விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் தான் புகுந்திருந்த உடலுடன் பறந்து சேன்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

 
வேதாளம் வரும்...

0 comments:

Post a Comment

Flag Counter