அழகிய வடிவத்தில் பேப்பர் தட்டுக்கள்

பல வண்ணங்களில் தட்டுக்களை செய்து அசத்தலாம் வாங்க
வீட்டில் சிறிய பார்ட்டி அல்லது விசேஷம் என்றால்,  ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பேப்பர் தட்டுக்கள் தான் முக்கிய இடம் பிடிக்கும். கேக் உள்பட நொறுக்குத் தீனிகள் பரிமாறப்படும் இந்த பேப்பர் தட்டுக்கள் ஒரே மாதிரியாகத் தான் இருக்க வேண்டுமா என்ன? உங்கள் விருப்பப்படி அழகிய வண்ணங்களில், வடிவங்களில் பேப்பர் தட்டுக்கள் செய்யலாம் வாங்க.

தேவையான பொருட்கள்
  • காகிதத் தட்டிக்கள்
  • வண்ணக் காகிதங்கள்
  • கத்தரிக் கோல்
  • பசை
  • வண்ணப் பென்சில்கள்


பேப்பர் தட்டின் பின்புறம் வண்ண பேப்பரை ஒட்டி, தட்டின் அளவுக்கு அதை கத்தரித்துக் கொள்ளுங்கள். இப்போது தட்டின் பின்புறம் வண்ணமயமாக காட்சியளிக்கும்.
பின்புறம் ஒட்டிய அதே வண்ணக் காகிதத்தை எடுத்து, அதில் உங்கள் கை விரல்களை படத்தில் உள்ளது போல விரித்து வைத்து பென்சிலால் ஓரங்களைச் சுற்றி கோடு போட்டு, பின் அதை அப்படியே கத்தரித்துக்கொள்ளவும். இப்போது வண்ண விரல்கள் தயார். இதே போல ஏழு வண்ண விரல்களை கத்தரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
    அவற்றின் முனைகளில் பசை ஒட்டி, படத்தில் இருப்பது போல தட்டின் அடிப்பாகத்தில் ஒவ்வொன்றாக ஒட்டுங்கள். இப்போது தட்டு பார்ப்பதற்கு தட்டு சூரியனைப் போலக் காட்சி தரும்.அடுத்து, பேப்பரின் உள்பக்கத்தில் வண்ண பென்சில்களைக் கொண்டு முகம் அல்லது உங்களுக்குப் பிடித்த உருவங்களை வரைந்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான்! அழகிய சூரியன் வடிவிலான வண்ண பேப்பர் தட்டு ரெடி. இது போல எத்தனை தட்டுக்கள் வேண்டுமானாலும் தயார் செய்து நண்பர்களை அசத்தலாம்!!

0 comments:

Post a Comment