அழகிய முயல் பை!

காகிதத்தைக் கொண்டு படங்கள் மட்டும் தான் வரைய முடியும் என்றில்லை... அதில் அழகிய பை தயாரித்து உங்கள் நண்பர்கள் அனைவரையும் அசத்தலாம், மிக எளிதாக!
 
  

தேவையான பொருட்கள்:
  1. கனமான காகிதம் (பெரிய அளவு)
  2. கத்தரிக் கோல்
  3. பசை
  4. கறுப்பு ஸ்கெட்ச்  கடையிலிருந்து பெரிய அளவிலான கனமான காகிதத்தை வாங்கி, அதை இரண்டாக மடித்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான பையின் அளவுக்கு, வலது, இடது என இருபுறங்களையும் ஒட்டி விடுங்கள். இப்போது பை வடிவம் கிடைத்து விடும். அடுத்து வாய்ப்பகுதியை படத்தில் காட்டியபடி மடித்துக் கொள்ளுங்கள்.


 மீதமிருக்கும் வெள்ளைக் காகிகத்தில் வட்ட வடிவில் முயலின் தலை வரைந்து, அதை அப்படியே கத்தரித்துக் கொள்ளுங்கள். பின் முயலுக்கு கண், மூக்கு, வாய் வரையுங்கள். முயலுக்கு காதுகள், கைகள் மற்றும் கால்களையும் வரைந்து, அவற்றை வெட்டிக் கொள்ளுங்கள். 
அடுத்து தலை, கை, கால்களை, படத்தில் காட்டியுள்ளபடி, பசை உதவியுடன் பையில் ஒட்டுங்கள். இப்போது பார்ப்பதற்கு சதுரவடிய முயல் போல காட்சியளிக்கும். முயலின் தலையை திருப்பி, பையைத் திறக்கலாம். பின் தலையை நேராக வைத்து பையின் வாயை மூடலாம்.

0 comments:

Post a Comment