காலி பாட்டிலில் சமாதானப் புறா!

நாம் தூக்கியெறியும் பொருட்களில் இருந்து சூப்பராக பல கைவினைப் பொருட்கள் செய்யலாம் என்பதைத் தொடர்ந்து பார்த்து வருகிறீர்கள். அந்த வரிசையில், தேவையற்ற காலி பாட்டிலைக் கொண்டு அழகான புறா செய்து நண்பர்களை அசத்தலாம் வாங்க!
 
  

தேவையான பொருட்கள்
  1. ஒரு காலி பாட்டில் (1/2 லிட்டர்)
  2. வண்ணக் காகிதம்
  3. சட்டை மாட்டி வைக்கும் ஹாங்கர்
  4. துணிகளைக் காய வைக்கும் கிளிப்
  5. பழைய செய்தித்தாள்
  6. நூல், பசை, கத்தரிக் கோல்



 1/2 லிட்டர் அளவு கொண்ட காலி பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். கண்ணாடி பாட்டில் வேண்டாம் என்றால், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் பாட்டிலின் வடிவம் குளிர்பான பாட்டிலின் வடிவத்தில் இருக்க வேண்டும்.   படத்தில் காட்டியது போல, பாட்டிலின் முன் ஹாங்கரை வைத்து, நூலைக் கொண்டு இரண்டையும் இறுக்கமாகக் கட்டிக் கொள்ளுங்கள்.



 செய்தித் தாளை துண்டு துண்டாக கிழித்து, படத்தில் காட்டியுள்ளது போல பாட்டில் மீது பசை கொண்டு ஒட்டுங்கள்.
சற்று காய்ந்ததும், மீண்டும் வண்ணக் காகிதத்தை துண்டுகளாக்கி, செய்தித் தாளை ஒட்டியது போல, அதன் மீது ஒட்டவும்.



 வண்ண ஸ்கெட்ச் பேனா கொண்டு பாட்டிலின் மூடிப் பகுதியில் புறாவுக்கு கண்கள் வரையுங்கள். அடுத்து, துணிகளைக் காய வைக்கும் கிளிப் ஒன்றை எடுத்து, படத்தில் காட்டியுள்ளது போல பாட்டிலின் வாய்ப் பகுதியில் செருகி விடுங்கள்.

இப்போது பார்ப்பதற்கு, பறந்து செல்லும் புறாவைப் போல தோற்றமளிக்கும். நண்பர்களிடம் காண்பித்து, அவர்களை ஆச்சரியப்பட வையுங்கள்!

0 comments:

Post a Comment

Flag Counter