தலையணை பூனைக்குட்டி

நம் வீட்டில் பயன்படுத்தும் தலையணையிலிருந்து, ஆழகிய பூனை செய்து அனைவரையும் அசத்தலாம் வாங்க!

தேவையான பொருட்கள்:

  1. வெளிர் நிறத்தில் வெல்வெட் அல்லது அழகிய வண்ணத்தில், சதுர வடிவிலான தலையணை உறை
  2. பஞ்சு -தேவையான அளவு
  3. சிறிய காலுறைகள் - இரண்டு
  4. பெரிய காலுறைகள் - இரண்டு
  5. மஞ்சள் நிற பெரிய சட்டைப் பொத்தான்கள் -இரண்டு
  6. பெரிய சிகப்பு நிறப் பொத்தான் -ஒன்று
  7. தையல் ஊசி,கருப்பு நூல்தலையணை உறையில் பஞ்சை நன்றாக, சீராக அடைத்து ஊசி நூல் கொண்டு வாயைத் தைத்து விடுங்கள். உறையின் மையப் பகுதிக்கு சற்று மேலே, படத்தில் காட்டியபடி நூலைக் கொண்டு இறுக்கமாக சுற்றிக் கட்டுங்கள். பார்ப்பதற்கு உடுக்கை போலக் காட்சியளிக்கும். 
இப்போது மேற்புறத்தில் இரு முனைகளிலும், படத்தில் உள்ளது போல நூலைக் கொண்டு ஒரே அளவாக இறுக்கமாக கட்டுங்கள். பூனைக்கு காதுகள் தயாரகி விட்டது. அடுத்தும் மஞ்சள் நிற பொத்தானை எடுத்து, பூனைக்கு கண்கள் இருக்கும் இடத்தில் வைத்து, ஊசி நூல் கொண்டு தைத்து விடுங்கள். அதற்கு சற்று கீழே பெரிய சிகப்பு பொத்தானை மூக்கைப் போல வைத்து தைத்து விடுங்கள். (பொத்தானின் துளைகள் வழியாக ஊசியை நுழைத்து, தலையணையோடு வைத்து தைத்து முடிச்சு போடுங்கள்).
 சிறிய காலுறைகளில் பஞ்சை அடைத்து, படத்தில் உள்ளது போல கைகள் இருக்கும் இடத்தில் வைத்து தைத்து விடுங்கள். இதே போல பெரிய காலுறைகளில் பஞ்சை அடைத்து, கால்கள் இருக்கும் இடத்தில் தைத்து விடுங்கள்.  அடுத்து, கருப்பு நூலைக் கொண்டு, மூக்கின் அருகில் இருபுறமும், மூன்று வரிசைகளில் மீசை போல தைத்துக் கொள்ளுகள்.


 இறுதியாக, கழுத்தில் வெல்வெட் துணியால், கழுத்தணி (tie) போல சுற்றி, அதையும் தைத்து விடுங்கள். இப்போது அழகிய பூனை ரெடி!

0 comments:

Post a Comment