பல்பு முயல்குட்டி

பழுதான மின்சார பல்பை தூக்கியெறியாதீர்கள். அதிலிருந்து சூப்பர் முயல்குட்டி பொம்மைகளைச் செய்து அசத்தலாம்.

தேவையான பொருட்கள் :

  1. பழுதான மின்சார பல்பு
  2. கனமான வண்ண பேப்பர்
  3. ட்ரேசிங் பேப்பர்
  4. கறுப்பு ஸ்கெட்ச் அல்லது மார்க்கர்.
  5. பாட்டில் மூடி
  6. கத்தரிக்கோல், பசை



கனமான வண்ணப் பேப்பரை இரண்டு சம பகுதிகளாக வெட்டுங்கள். ஒரு பாதியை எடுத்து இரண்டாக மடித்துக் கொள்ளுங்கள். படத்தில் உள்ளது போல முயலின் முகத்தை சரிபாதியாக வரும்படி, ட்ரேசிங் பேப்பர் உதவியுடன் வண்னப் பேப்பரில் பன்சில் கொண்டு வரையுங்கள்.





மடித்ததைப் பிரித்து, பென்சிலால் வரைந்த முகத்தைக் கத்தரித்து எடுத்துக் கொள்ளுங்கள். வண்ணப் பேப்பரின் அடுத்த பாதியை நீளவாட்டில் மடித்துக்கொண்டு, முயலின் மீசை, வால் ஆகியவை பாதியாக வருமாறு ட்ரேசிங் பேப்பர் உதவியுடன் வரைந்து கொண்டு அவற்றை கத்தரித்துக் கொள்ளுங்கள்.





பல்பை சுத்தமாகத் துடைத்து, மேற்பகுதியில் (சிறிய முனை உள்ள பகுதியில்) பசை உதவியுடன் முயலின் முகத்தை ஒட்டி, அதன் பின் மீசையை சரியாக ஒட்டுங்கள். கறுப்பு மார்க்கரை எடுத்துக் கொண்டு, படத்தில் உள்ளது போல முயலுக்கு கை, கால்களை வரைந்து கொள்ளுங்கள்.

கடைசியாக, பல்பின் அடிப்பகுதியில், பாட்டில் மூடியை பசை வைத்து ஒட்டி விடுங்கள். இப்போது அழகிய பல்பு முயல் தயார். பல்பை கவனமாக கையாளுங்கள். 

0 comments:

Post a Comment

Flag Counter