மலர்த் தொப்பி செய்யலாம் வாங்க!

உங்களிடம் காகிதத் தட்டு இருக்கிறதா.. அதில் கொஞ்சம் காகித மலர்களை வைத்து சூப்பராக மலர்த் தொப்பி செய்து நண்பர்களை அசத்தலாம்..!

 தேவையான பொருட்கள்:
  1. ஒரு காகிதத் தட்டு
  2. காகிதப் பூக்கள்
  3. வண்ண பென்சில்கள் அல்லது ஸ்கெட்ச்
  4. கத்தரிக்கோல், பசை
  5. சரிகை நாடாக்கள்

 காகிதத் தட்டின் நடுப்பகுதியில் துளையிட்டு, பிறகு படத்தில் உள்ளது போல சற்று அகலமான கோடுகள் போடுங்கள். கோடுகள் விளிம்பிலிருந்து ஒரு அங்குலம் இடைவெளி இருக்க வேண்டும். இப்போது கோடுகளை கத்தரிகோலால் கத்தரித்து விடுங்கள். பார்ப்பதற்கு சக்கரம் போல காட்சியளிக்கும்.

 கத்தரித்த முக்கோணப் பகுதிகளை படத்தில் காட்டியது போல நிமிர்த்துங்கள். அடுத்து, தட்டின் மீது மஞ்சள் அல்லது பளிச்சென இருக்கும் வண்ணங்களைத் தீட்டுங்கள். நிமிர்ந்திருக்கும் முக்கோணங்கள் மீது வேறு வண்ணங்களைத் தீட்டுங்கள்.
தட்டில் நிமிர்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு முக்கோணத்தின் மீதும், காகிதப் பூக்களைக் கொண்டு பசை தடவி ஒட்டுங்கள். இப்போது தட்டின் ஒரு முனையில் இரண்டு துண்டு வண்ணக் காகித நாடாக்களை பசை கொண்டு ஒட்டுங்கள்.

 

 

அவ்வளவு தான்...சூப்பரான மலர்த் தொப்பி ரெடி!

0 comments:

Post a Comment