சுயநலமிக்க நண்பன்!

பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் ஒரு அந்தணரின் மகனாகப் பிறந்தார். அவருக்கு சத்தியானந்தர் என்ற பெயர் வைக்கப்பட்டது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவரது பெற்றோருக்கு இன்னொரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு நித்தியானந்தன் என பெயரிட்டனர்.

சகோதரர் இருவரும் வளர்ந்து பெரியவர்களானபோது அவர்களது பெற்றோர் காலமாகி விட்டனர். இதனால் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட, கங்கை நதியின் ஒரு கரையில் சத்தியானந்தர் தம் குடிலை அமைத்துக் கொண்டார். நித்தியானந்தன் எதிர்க் கரையில் தன் குடிலைப் போட்டுக் கொண்டு வாழ்ந்து வரலானான்.

ஒருநாள் பாதாள லோகத்திலிருந்து பாம்புகளின் மன்னனான மணிகாந்தன் என்பவன், மானிட வடிவில் பூலோகத்திற்கு வந்தான். அவன் கங்கை நதிக்கரையில் உலாவியவாறே நித்தியானந்தனின் குடிலைக் கண்டான். சிறுவயதில் சன்னியாச வாழ்வை மேற்கொண்ட நித்தியானந்தனைப் பார்த்து அவன் ஆச்சரியப்பட்டான். பிறகு அவனோடு பேசி தான் யாரென்பதைக் கூறி அவனது நண்பனாகி விட்டான்.

இப்படியே தினமும் மணிகாந்தன் நித்தியானந்தனின் குடிலுக்குப் போய், அவனுடன் வெகு நேரம்வரை பேசி விட்டுத் திரும்பிச் செல்வான். சில சமயங்களில் மணிகாந்தன் தன் சுய உருவை எடுத்துப் படம் விரித்து நித்தியானந்தனின் மீது வெயில் படாமல் தடுத்தும் வருவான். இதனால் நித்தியானந்தன் மனதில் திடீரென ஒரு சந்தேகம் எழுந்தது.

 என்னதான் நாகனான மணிகாந்தன் நண்பன் என்றாலும், என்றாவது கோபத்தில் சீறித் தீண்டி விட்டால் பாம்பின் விஷத்தால் தான் உடனேயே இறக்கத்தானே வேண்டும்!  இதை நினைக்க நினைக்க அவன் மனம் கவலைப்பட்டது.
 கவலையால் உடலும் இளைக்கலாயிற்று. அவன் தன் தமையன் சத்தியானந்தரைக் காணச் சென்றான். அவர் அவனைக் கண்டதுமே “ஏன் தம்பி! இப்படி இளைத்துப் போய் விட்டாய்?” என்று கேட்டார். நித்தியானந்தனும் தன் கவலைக்கான காரணத்தைக் கூறினான். அப்போது சத்தியானந்தர் “நீ சொல்வதைப் பார்த்தால் நீங்கள் இருவரும் ஆருயிர் நண்பர்கள் என்று தெரிகிறது. ஆனால் அவனால் எந்த சமயமும் ஆபத்து வரலாம் என நீ சந்தேகப்படுவது தெளிவாகி விட்டது. அவனை வர விடாமல் செய்யலாமா அல்லது உன்னை அவன் காணாதபடி செய்யலாமா?” என்று கேட்டார்.

நித்தியானந்தனும் சற்று யோசித்து விட்டு “அவன் இங்கு வராமல் இருந்தாலே எனக்கு மன நிம்மதி ஏற்படும். ஆனால் அவனிடம் ‘நீ வராதே’ என்று நான் எப்படிக் கூறுவது?” என்றான். சத்தியானந்தரும் “உன்னைக் காண வரும் போது மணிகாந்தன் எவ்வித ஆபரணங்களை அணிந்து வருகிறான்?” என்று கேட்டார். நித்தியானந்தனும் “உடல் முழுவதும் ஆபரணங்கள் இருக்கும். எல்லாவற்றையும் விடப் பளபளஎன்று ஒரு வைரக்கல் அவனது கழுத்திலுள்ள ஆபரணத்தில் மின்னும்” என்றான்.

அப்போது சத்தியானந்தர் “இந்த முறை அவன் வரும் போது அந்த வைரக்கல்லை நீ கேள்” என்று சொல்லி அனுப்பினார். இரண்டு நாட்களுக்குப் பின் மணிகாந்தன் நித்தியானந்தனைக் காண வந்தான். அப்போது தன் தமையனார் கூறியபடி நித்தியானந்தன் அவனிடம் அந்த வைரக் கல்லைத் தனக்குத் தரும் படிக் கேட்டான். மணிகாந்தன் சட்டென அங்கிருந்து பாதாள லோகத்திற்குப் போய் விட்டான்.

அடுத்த தடவை மணிகாந்தன் வாசலில் வந்து நிற்கும் போதே, நித்தியானந்தன் அவனது கழுத்தில் உள்ள வைரக் கல்லைத் தனக்குக் கொடுக்குமாறு கேட்டான். மணிகாந்தன் குடிலுக்குள் வராமலேயே திரும்பிப் போய் விட்டான். மூன்றாவது முறை மணிகாந்தன் தன் குடிலை நோக்கி வருவது கண்டு, நித்தியானந்தன் அவன் எதிரே போய் நின்று “இரண்டு தடவை உன்னிடமுள்ள வைரக்கல்லைக் கேட்டேன். கொடுக்கவில்லை. இன்றாவது கொடுப்பாயா?” என்று கேட்டான்.

0 comments:

Post a Comment

Flag Counter