சிரிக்க வைத்தால் பரிசு

ஒருநாள், அக்பருக்கு விசித்திரமான எண்ணம் தோன்றியது. பீர்பாலை அழைத்து, என்னைச் சிரிக்கும்படி செய்துவிட்டால், நீர் கேட்கும் பரிசை அளிப்பேன் என்று கூறினார்.

என்னனென்னவோ சொல்லி, முயன்று பார்த்தார் பீர்பால்.
அக்பர் சிறிதும் அசையாமல், சிரிக்காமல் அப்படியே உட்கார்ந்திருந்தார்.

கடைசியாக, ஒரு தந்திரத்தைக் கையாளத் தொடங்கினார் பீர்பால்.
அக்பருடைய காதில், ‘இப்பொழுது நீங்கள் சிரிக்காவிட்டால், நான் என்ன செய்வேன் தெரியுமா? உம். என் விரல்களால் உங்கள் விலா எலும்புகளை அழுத்தி, கூச்சத்தை உண்டாக்குவேன்’ என்று குசு குசு வென்று சொல்லத் தொடங்கினார் பீர்பால்.

உடனே அக்பருக்குச் சிரிப்பு அளவுக்கு மீறி வந்து விட்டது!
எப்படியோ முயன்று பீர்பால் வெற்றி பெற்றுவிட்டார்

0 comments:

Post a Comment

Flag Counter