விநாயகர் - 9

 
கணங்களின் அதிபதியாகும் பட் டாபிஷேகத்தின் போது விநாயகர் உடுத்திக் கொள்ளப் பளபளக்கும் வண்ணப் பட்டாடைகளை பார்வதி தேவி எடுத்து வைத்திருந்தபோதும் விநாயகர் வெண்ணிற ஆடை களையே உடுத்திக் கொண்டார்.
 
அதுகண்டு பார்வதி, "இப்படிப் பட்ட சுபவேளையில் ஏன் வெண் ணிற ஆடைகளை உடுத்திக்கொள் கிறாய்?" எனக் கேட்க, விநாயகரும் "வெள்ளை நிறம் தூய்மைக்கும் அறிவு மிக்கதற்கும் எடுத்துக்காட்டு. எனவே வெள்ளைக்கலை உடுத்திக் கொண்டேன்," என்றார். பட்டா பிஷேகம் நடந்தது விநாயகர் கண நாதர் ஆனார். ஜெயலட்சுமி என்ற சித்தியையும் வித்தியாவதி என்ற புத்தியையும் அவர் மணந்து கொண்டு இரு மனைவிகளையும் இரு பக்கங்களில் உட்கார வைத்துக் கொண்டார். இதே சமயம் எட்டு திக்குகளிலிருந் தும் அஷ்ட சித்திகள் பெண்கள் உருவில் வந்து மாலைகளை விநாயகருக்கு அணிவித்து மணம் புரிந்து கொண்டார்கள். இதனால் சித்தி விநாயகர் என்ற பெயரும் பெற்றார். அவரது விவாகங்கள் விமரிசையாக நடைபெற்றன.
 
அதுவரை விநாயகருக்கு விவாகம் நடக்காமல் தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தன. ஆனால் ஆயிரம் தடைகள் ஏற்பட்டு முடிந்த பின் அவரது விவாகம் எவ்விதத் தடையும் இல்லாது நடைபெறும் என விஷ்ணு வுக்குத் தெரிந்தது தானே.
விஷ்ணுவும், "விநாயகா! இனி யார் விவாகம் நடத்தினாலும் உன்னை முதலில் நினைத்து சங்கல் பம் செய்து கொண்டு ஆரம்பிக் கட்டும். உன் பிரசன்ன வதனத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க இருக்க மன நிறைவு ஏற்படும்," என்றார்.
 
அஷ்ட சித்திகளான பெண்கள் சாமரம் வீச, சிம்மாசனத்தில் கணபதி தாம் மணந்த சித்தி, புத்தி என்ற மனைவிகளுடன் அமர்ந்திருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது அப்போது லட்சுமிதேவி முகத் தைச் சுளித்துக் கொண்டு திரும்பிப் போவது கண்டு விஷ்ணு, "லட்சுமி! போகாதே, நில்! விநாயகா! நீ லட்சுமி தேவியை உன் மடியில் உட்கார வைத்துக் கொள். ஒரு நிலையில் இல்லாமல் ஓடும் லட்சுமியை ஒரே இடத்தில் நீ நிலைக்கச் செய்!" என்றார்.
 
விநாயகரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தவராய் லட்சுமிதேவியை வணங்கி, "தாயே! உங்களை என் மடி மீது அமர்த்திக் கொள்ள எவ்வளவு பாக்கியம் செய்தேனோ!" என்றார். லட்சுமிதேவியும் விநாயகரின் மடி மீது அமர்ந்து கொண்டாள்.
 
விநாயகர் லட்சுமிதேவியை ஒரு நிலையில் நிறுத்தித் தம் மடி மீது அமர்த்திக் கொண்டது கண்டு விஷ்ணு மட்டும் அல்ல, அங்கிருந்த எல்லா தேவர்களும் ரிஷிகளும் முனிவர் களும் மனம் மகிழ்ந்து போனார்கள். லட்சுமியோடு கூடிய விநாயகரை யாவரும் துதித்தார்கள்.
 
அப்போது விஷ்ணுவும் "இப் போது விநாயகர் செல்வ விநாயகர் ஆகிவிட்டார். தாயும் மகனும் ஒன்று சேர்ந்து இருக்கும்போது அவர்களை வணங்குபவர்களுக்கு என்ன குறை?" என்றார். அப்போது நாரதர், "இந்த விநாய கருக்குதான் எவ்வளவு பெயர்கள் ஏற்பட்டுவிட்டன! சித்தி விநாயகர், செல்வ விநாயகர், கணநாதர், கணபதி இன்னும் எவ்வளவோ?" என்று கூறித் தன் வீணையை மீட்டி அவரது நாமாவளியைப் பாடி மூன்று லோகங் களிலும் திரிந்து வரலானார்.
 
ஒருநாள் விநாயகர் தன் வாகனமாக மூஞ்சூறின் மீது அமர்ந்து விந்திய மலைப் பகுதியைத் தாண்டி தென் பகுதியில் ஒரு கருநிற மலைக்கருகே போய் இறங்கினார். அங்கு ஒரே வாழைத் தோட்டமாய் இருந்தது.
மலைவாசிகள் அங்கு தாரை, தப்பட் டைகளை ஒலித்து ஆடிப் பாடிக் கொண்டு இருந்தார்கள். விநாயகர் ஓர் அழகிய சிறுவன் உருவில் அவர்களின் முன் போய் நின்றார். மலைவாசிகள் அழகான அச்சிறுவனைப் பார்த்து விட்டு, "ஆகா! கடவுளே இவனை நமக்கு அனுப்பி இருக்கிறார். இவன் எவ் வளவு அழகாக இருக்கிறான்! கட வுளின் அருளால் கிடைத்த இவனை நாம் அவருக்கே பலியிட்டு அவர் மனதைக் குளிரச் செய்வோம். அப்போது நமக்கு அவரது அருள் கிடைக்கும்," என எண்ணி அவனைத் தூக்கிக் கொண்டு போய் விக்கிரகத்தின் முன் நிறுத்தினார்கள்.
 
அங்கு ஒரு பெரிய வெட்டரிவாள் இருந்தது. ஒரு சிறுவன் அழுது கொண்டு அங்கே நின்று கொண் டிருந்தான். அவனது கழுத்தில் செவ்வரளி மாலை இருந்தது. உடல் முழுவதும் மஞ்சள் பூசப்பட்டு கருப்புத் துணியை அவன் அணிந்திருந்தான். சிறுவன் வடிவில் சென்ற விநா யகர் மலைவாசிகளிடம், "நான் உங்கள் தெய்வத்திடம் சற்று பேசவேண்டும். எனவே என்னை இன்னும் சற்றுப் பக்கத்தில் கொண்டுபோய் விடுங்கள்!" என்றார்.
 
அவர்களோ பலமாகச் சிரித்து, "நீ எங்கள் தெய்வத்துடன் பேசப் போகி றாயா? பயங்கரமாய் கருகருவென இருக்கும். நீ அவரைப் பார்த்தவுடனே பயந்து நினைவு இழந்து விழுந்து விடுவாயே!" என்றார்கள். விநாயகரும் பதிலுக்குச் சிரித்தவாறே, "உங்கள் தெய்வம் அவ்வாறு இல்லை. நீங்கள் தாம் அவரைப் பற்றி பயங்கரமாகக் கற்பனை செய்து கொண்டு உயிர் பலி கொடுக்கவும் தயாராகிவிட்டீர்கள்.
 
உங்கள் தெய்வம் ஒருநாளும் இக்கொடிய செயல்களை விரும்பியது இல்லை. என்னை அவரிடம் பேச விடுங்கள். அவரது உண்மையான உருவத்தை உங்களுக்கு காட்டுகிறேன். அப்போது தான் உண்மை தெரியும். உங்கள் தெய்வம் அழகானவர். இதோ பாருங்கள்!" எனக் கூறி அந்த விக்கிரகத்தைத் தொட்டுத் தடவ, கருப்பாக இருந்த அச்சிலை வாழைத் தண்டு போலாகியது. கண்களை உருட்டி பயங்கரமாக விளங்கிய அந்த விக்கிரகம் அன்புப் பார்வையுடன் புன்னகை புரிந்தவாறு விளங்கியது. கை நீட்டி விநாயகர் சிறுவனின் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார்.
சிறுவனும், "சுவாமியே சரணம்!" என்று கூவி, அந்த விக்கிரகத்தை வணங்கினான். கருப்புநிறச் சிலை வெள்ளையாகி, ஊமையாக இருந்த சிறுவன் பேசிய அதிசயம் கண்டு மலைவாசிகள் திகைத்து பயபக்தி யுடன் சிறுவன் வடிவாய் நின்ற விநாயகரை வணங்கித் துதி செய்தார்கள்.
 
விநாயகரோ, "என்னை வணங்க வேண்டாம். உங்கள் தெய்வத்தையே வணங்குங்கள். ஆனால் பலி இடு வதை நிறுத்துங்கள். அத்தெய்வம் உங்களைத் தாய், தந்தை, குருவைப் போல காத்து வளர்த்து வழி காட்டும். உங்கள் அன்பைக்காட்ட அவர் மீது மலர்களைத் தூவி, பழங்களை அளி யுங்கள். இச்சிறுவனே உங்கள் குரு. இவனே இத்தெய்வத்தைப் பூசித்து வரும் பூசாரியாகவும் இருப்பான். உங்களுக்கு உங்கள் தெய்வம் காட்சி அளிக்கும்," எனக் கூறி அங்கிருந்து சென்றார். மலைச் சாதியினர் அவரை வழி அனுப்பினர்.
 
விநாயகர் ஒரு மலையின் உச்சிக்குப் போனார். அங்கு பைரவர் சிரம் தாழ்த்தி ஏதோ கவலைப்பட்டவாறு அமர்ந்திருப்பதை கண்டார். விநாயகர் அவரைக் கட்டித் தழுவியதும் அவரது கருப்பு நிறம் மறைந்து வெள்ளை நிறமாகிவிட்டது.
 
அழகிய உருவை அடைந்த பைரவர் சிறுவனான விநாயகரிடம், "நீ விநாயகன் தானே, உன்னால் தான் என் நிறம் மாறும் என்பது எனக்குத் தெரி யும். நான் பிறந்தபோதே இப்படி அசŽரவாக்கு ஒன்று கூறியது. இந்த மலை மீது துணிந்து யாரும் ஏறி வரவில்லை. என்னைக் கண்டு பட்சிகளும் மிருகங்களும் கூட கத்தாமல் இருந்துவிடும். நீ எப்போது வந்து இந்த உருவை எனக்குக் கொடுத்து என்னை தேவனாக்குவாய் என்றே காத்திருந்தேன். இனிமேல் நீ செய்ய வேண்டியது ஒன்றுதான் உள்ளது. நீ உண்மையான உருவில் எனக்குக் காட்சி கொடு!" என்றார்.
 
விநாயகரும் தம் உண்மை உருவை காட்டி, "பைரவரே! இனி மக்கள் உம் மைக் கடவுளாகப் போற்றி வழிபடு வார்கள். சிவனும் விஷ்ணுவும் உம் மிடம் இருப்பதால் உம்மைக் காண நான் ஆவலுடன் இங்கு வந்தேன். சிவனுக்கும் மோகினி வடிவில் வந்த விஷ்ணுவுக்கும் பிறந்தவர் நீர்.
 
எனவே உமக்குக் கருப்பு நிறம் வந்தது. இப்போது வெள்ளை நிறம் வந்து விட்டது. இந்த மலைவாசிகள் உம்மைக் காண விரும்புவதால் ஒரு முறை அவர்களுக்குக் காட்சி அளி யும்," என்றார். பின்னர் விநாயகர் சிறுவன் வடிவில் மலைவாசிகளிடம், "இப்போது இந்த விக்கிரகத்தை வணங்கி �சுவாமியே சரணம்!� எனக் கூவுங்கள். உங்கள் தெய்வம் உங்களுக்குக் காட்சி அளிக்கும்," என்றார்.
 
அவர்களும் அவ்வாறே செய்ய அவர்களுக்கு பைரவர் அழகிய உரு வில் காட்சி அளித்தார். அவரே தம் மைக் காப்பவர் என்றும் தாம் அழைக் கும்போதெல்லாம் வந்து தம்மை ரட்சிப்பார் எனவும் மலைவாசிகள் நம்பினார்கள். தாரை தப்பட்டைகளை அவர்கள் பலமாக முழக்கி ஆனந்தக் கூத்தாடினார்கள். �சுவா மியே சரணம்! ஐயனே! அப்பனே!� என்று உரக்கக் கூவி அந்த மலைப் பகுதியே அதிரும்படிச் செய்தார்கள்.
 
பைரவரும் அவர்களை ஆசீர்வதித்து மறைய, விநாயகரும் அங்கிருந்து சென்றார். அப்போது முதல் அந்த மலைவாசிகள் பைரவருக்கு உயிர் பலி கொடுப்பதை நிறுத்தி பழங்களைச் சமர்ப்பித்து வரலாயினர். அங்கு ஒரு பெரிய கோவிலைக் கட்டி விமரிசையாக விழாக்கள் நடத்தி வரலானார்கள். இந்த மலைவாசிகள் சபரர்கள் என்றும் இவர்கள் வாழ்ந்த மலையைச் சபரிமலை என்றும் கூறுகிறார்கள்.
விநாயகர் தாம் இப்படி எல்லாம் செய்தார் என்று மலைவாசிகளுக்குத் தெரியாது. அவர்கள் தாம் வணங்கும் தெய்வமே அப்படி அற்புதங்களை நிகழ்த்தியதாக எண்ணினார்கள். பின்னர் நடந்தது அறிந்து விநாயகரை வழிபட்டார்கள்.
 
சபரிமலைவாசிகளை நல்வழிப் படுத்திய பின் விநாயகர் தம் வாகனமாகிய மூஞ்சூறின் மீது அமர்ந்து வட திசையில் சென்றார். மலைகளும் பொட்டல் மைதானங்களாக இருந்த அப்பகுதியில் ஆறுகளே இல்லை. அங்கு வாழ்ந்த மக்கள் வானத்தை நம்பியே பயிர் செய்து வந்தார்கள்.
 
அங்குள்ளவர்கள் "கங்கை பாயும் பகுதியில் வாழும் மக்கள் தாம் எவ்வளவு புண்ணியம் செய்தவர்கள்! நமக்கு அப்படிப்பட்ட கங்கை இல்லாது போனாலும் அதிலிருந்து ஒரு கிளைநதியாவது வரக்கூடாதா?" எனக் கூறிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார்கள். இதை விநாயகர் கேட்டுவிட்டார். அவரது மனம் அப்பகுதிமக்கள் தண்ணீருக்காகப் படும்பாட்டை எண்ணி இரங்கியது. அவர்களது நிலப்பரப்பும் கங்கை நதிச் சமவெளி போல இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என எண்ணினார்.
 
இமயமலை அழகிய காடுகள், நீர்வீழ்ச்சிகளோடு காட்சியளிப்பது போல அந்தப் பொட்டல்வெளி களைப் பச்சைப்பசேலென்ற வயல் வெளிகளாக்கலாம் என எண்ணி மேற்குப் பக்கம் விநாயகர் சென்றார்.
 
சஹ்யாத்திரி மலையில் கௌதமரின் ஆசிரமம் இருந்தது. அது பச்சைப்பசேலென இருப்பதைக் கண்டார் விநாயகர். அப்போது அவருக்கு ஒரு யோசனை தோன்றவே, உடனே வட திசையில் திரும்பிச் சென்றார். அவர் அப்பகுதியையும் இமயமலைப் பகுதியைப் போலவும் அதன் அடி வாரத்தில் பச்சைப்பசேலென்ற வயல்கள் நிறைந்ததாகவும் ஆக்கத் தீர்மானித்தார். ஆனால் அங்கு போய் பார்த்தபோது அவர் கண்ட காட்சி அவரை மிகவும் திகைக்க வைத்தது.

0 comments:

Post a Comment

Flag Counter