விநாயகர் -8

 
குமரனுக்குத் தன் திருமணம் தன் அண்ணன் விநாயகரால் தான் தடைப்பட்டு நின்றுவிட்டது என்று அவர் மீது கோபம் கோபமாக வந்தது. அத னால் அவன் "ஏய் பானை வயிறா! அழுக்கு உருண்டையே! உன்னால் இந்த மாதிரி இடைஞ்சலைத் தவிர வேறு ஏதாவது செய்ய முடியுமா?" என்று பொரிந்து தள்ளினான்.
 
தன்னைத் தன் தம்பி இவ்வாறு ஏசுவதைப் பொறுக்க முடியாமல் விநாயகர் பார்வதி தேவியிடம் "அம்மா! தம்பி சொன்னதை எல்லாம் கேட்டாயா? இப்படி வாய்க்கு வந்த படி பேசலாமா இவன்?" என்று சற்று மனத்தாங்கலுடன் கேட்டார்.
 
பார்வதி தேவியும் சற்றுக் கோபம் அடைந்து, "ஆமாம். இவர்களுக்கு எல்லாம் நான் உன்னை உருவாக்கிய பொம்மை என்று இளப்பம்," என்றாள். அப்போது விநாயகர், "அம்மா! நீ சொல்வது தம்பிக்குப் பொருத்தமே. ஆனால் என் தந்தையையும் அப்படிக் கூறவிட முடியுமா?" என்று கேட்டார்.
 
பார்வதியும் "ஏன் முடியாது? ஒருமுறை மோகினி உருவில் வந்த விஷ்ணுவின் பின்னால் இவர் பைத்தியம் போல ஓடவில்லையா? அந்த மோகினிக்கும் இவருக்கும் பிறந்ததுதானே பைரவர் என்ற பூதம்," என்றாள். விநாயகரும் "அப்படியா? அந்த பைரவர் இப்போது எங்கே? நான் போய்ப் பார்க்கிறேன்," என்றார். பார் வதியும் "எங்கேயோ இருக்கிறான்.
கரிய நிற ஆடைகளை அணிகிறானாம்" என்றாள். குமரனும் "நீ இப்படியே பேசிக் கொண்டிரு. நான் போய் சூரிய தேவனைச் சுற்றிவிட்டு வருகிறேன். உன்னால் முடியுமா?" எனக் கூறி விட்டுத் தன் மயில் மீது அமர்ந்து கிளம்பினான். விநாயகரோ மேரு மலை மீது ஏறி அதன் உச்சியில் அமர்ந்து கொண்டார். அப்பகுதி முழுவதிலும் சூரியன் வருவான். அங்கு சூரிய அஸ்தமனம் என்பதே கிடையாது.
 
குமரன் சூரியனைச் சுற்றிவிட்டு வந்தபோது மேருமலை உச்சியில் தன் அண்ணா விநாயகர் அமர்ந்திருப்பது கண்டு முகம் வாட்டமுற்று திரும்பி னான். குமரனைக் கண்டு பார்வதி, "ஏன் குமரா? உன் முகம் இப்படி வாட்டமடைந்து இருக்கிறது?" என்று கேட்க குமரன் "நான் சூரி யனைச் சுற்றப் போனேன். அண்ணாவோ சூரியனே தன்னைச் சுற்றி வரும் இடத்தில் உட்கார்ந்துவிட் டார். அவருக்கு எதிலுமே முன் யோசனை அதிகம் தான்," என்றான்.
 
சில நாட்களுக்குப் பின் பார்வதி தேவி மீண்டும் விநாயகரிடம் கல் யாணப் பேச்சை எடுத்தாள். அப் போது அவர் "அம்மா! உன்னைப் போல அழகான பெண் எனக்குக் கிடைத்தால் நான் கல்யாணம் செய்து கொள்ளத் தயார்," என்றார்.
 
அதைக் கேட்ட பார்வதி சற்று எரிச்சலுடன், "அப்படியானால் தெருக்கோடியில் உட்கார்ந்து வரு கிற போகிற பெண்களைப் பார்த்துக்கொண்டிரு. யாராவது அப்படி உன் கண்ணில் பட்டால் சொல். கல் யாணம் செய்து வைக்கிறேன்," என்றாள்.
 
விநாயகரும் "அப்படியே செய்கிறேன், அம்மா!" என்ற கூறி, உடனே கிளம்பித் தெருமுனையில் போய் கொஞ்ச நேரம் கிழக்கு நோக்கியும் பிறகு தென்கிழக்கு, தெற்கு என வரிகையாக எட்டு திசைகளையும் பார்த்து உட்கார்ந்து காத்திருந்தார்.
 
சற்று நேரத்திற்குப் பின் பார்வதி தேவி "என்ன விநாயகா! யாராவது உன் கண்ணில் பட்டாளா?" என்று கேட்டாள். விநாயகரோ,"இல்லை அம்மா! எந்த திசையில் பார்த்தாலும் ஜெகன்மாதாவாகிய உன் உருவம் தான் தெரிகிறது," என்றார்.
பார்வதி தேவியும் பரமானந்தம் கொண்டு, "விநாயகா! எல்லாக் கட வுள்களும் கிழக்கு நோக்கித் தான் இருப்பார்கள். அப்படிப்பட்ட விக் கிரகங்களே பூஜிக்க ஏற்றவை என்பது விதி. ஆனால் நீ மட்டும் எந்தத் திசையைப் பார்த்து இருந்தாலும் உன்னை மக்கள் பூசித்து வழிபடு வார்கள்," என்ற வரத்தை அளித்தாள். அத்தோடு அப்போதைக்கு விநாயகரின் கல்யாணப் பேச்சு முடிந்தது.
 
சில நாட்களுக்குப் பின் பார்வதி தேவி மீண்டும் விநாயகரிடம் அவரது கல்யாணம் பற்றிப்பேசவே அவர், "அம்மா! என் தம்பி தேவர்கள் படையின் சேனாதிபதியாக இருக்கிறான். அவன் வேண்டுமானால் ஒருத்திக்கு இரண்டு பெண்களாகக் கல்யாணம் செய்து கொள்ளலாம். நானோ நன்றாகச் சாப்பிட்டுவிட்டு உட்கார்ந் திருப்பவன். எனக்கு எதற்கு கல்யாணம்?" என்று திருப்பிக் கேட்டார்.
 
அப்போது சிவன், "நீ என் பிரமதா கணங்களின் அதிபதியாக இரு!" என்றார். அப்போது விநாயகர், "அப்பா! அதிபதியாக இரு என்று நீங்கள் சொல்லிவிட்டால் போதுமா? அதற்கு எனக்குத் தகுதி வேண்டாமா? என் தம்பியைப் போல அனுபவம் எனக்கு ஏது?" என்றார்.
 
பிரமதா கணங்களும் குமரனை மதித்து வந்தார்கள். சிவனோ, "இல்லை, விநாயகா! நீ தான் என் பிரமதா கணங்களின் அதிபதியாக இருக்க வேண்டும். குமரன் தேவ சேனாதிபதியாக இருக்கத்தானே இருக்கிறான். அவனால் இரு படைகளையும் கண்காணிப்பதும் சிரமம் தான்!" என்றார். அப்போது விநாயகர், "அப்பா!
 
இந்தப் பதவிக்கு ஏதாவது ஒரு போட்டி வைத்து அதில் வெற்றி பெறுபவருக்கு அதனைக் கொடுப்பது தானே முறையாக இருக்கும்?" என்றார். இதற்குப் பின் அத்தகைய போட் டியை தேவர்களும் பிரமதா கணங்களும் சேர்ந்து வைத்தார்கள். பூவுலகில் உள்ள எல்லா கேஷத்திரங்களுக்கும் புண்ணிய தீர்த்தங்களுக்கும் போய்விட்டு யார் முதலில் திரும்பி வருகிறார்களோ அவருக்கு அப்பதவி என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.
 
உடனே குமரன் தன் மயில் மீது அமர்ந்து கிளம்பிவிட்டான். விநாயகர் எப்போதும் போல உட்கார்ந்திருந்தார். கொஞ்சமும் நகரவில்லை. அப்போது விஷ்ணு, "பிள்ளை யாரே! உன்னிடம் எங்களுக்கு தனிப்பட்ட அபிமானம் உண்டு. நீதான் இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும்.
 
அப்போது தான் நாங்கள் தலை நிமிர்ந்து நிற்க முடியும். மேலும் உன் தந்தையின் மகிமையையும் நீ நிரூபிக்கும் வாய்ப்பும் இப்போது உனக்குக் கிடைக்கிறது. நீ எங்கும் எழுந்து போக வேண்டாம். உட்கார்ந்த இடத்தில் இருந்தே இப்போட்டியில் நீ வெற்றி பெறலாம்," எனக் கூறி ரகசியமாக அவர் காதில் ஏதோ சொன்னார். விநாயகரும் அதைக் கேட்டு அதன்படியே நடப்பதாகத் தலையை ஆட்டினார். பின்னர் அவர் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிக்கத் தொடங்கினார்.
 
குமரன் சென்ற கே்ஷத்திரங்களில் எல்லாம் தனக்கு முன் விநாயகர் வந்துவிட்டுப் போனதாகத் தகவல் சொன்னார்கள். அதுகேட்டுக் குமரன் திகைத்து தன் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்தான். அப் போதும் தனக்கு முன்பே விநாயகர் தன் மூஞ்சூறு வாகனத்தில் அமர்ந்து வந்திருப்பது கண்டு, "அண்ணா! நீங்கள் தாம் வெற்றி பெற்றீர்கள்," என்றான்.
 
அப்போது விநாயகர், "தம்பீ! நானாக வெற்றி பெற்றுவிடவும் இல்லை. நீயாகத் தோற்றுவிடவும் இல்லை. நாம் இருவரும் நம் தந்தையின் கைப்பொம்மைகள். அவர் ஆட்டி வைக்க, நாம் ஆடு கிறோம். இப்போது வெற்றி நம் தந்தையுடையதே. அவரது பஞ்சாட்சர நாமத்தை நான் ஜெபித்ததால் எனக்கு வெற்றி கிடைத்தது. எனவே உண்மையில் வெற்றி பெற்றது பஞ்சாட்சரமாகிய சிவநாமமே.
 
இதனைச் சொல்லிக் கொடுத்தவர் விஷ்ணு," என்றார். குமரனும் விநாயகரும் சிவனாரின் காலடிகளில் விழுந்து வணங்கினார்கள். குமரன் எழுந்து, "அண்ணாவிற்கு பிரமதா கணங்களின் அதி பதிக்கான பட்டாபிஷேகம் உடனே நடக்க வேண்டும். இது சிவபிரானின் கட்டளை!" என்றான்.
 
தேவர்கள் மகிழ்ந்து போனார்கள். சித்தர்கள், யட்சர்கள், பூத கணங்கள் ஆகிய எல்லோரும் தம் சந்தோஷத் தைத் தெரிவித்தார்கள். ஆனால் பிர மதாகணப் பிரமுகர்களான பிருங்கீஸ்வரர், சிருங்கீஸ்வரர், சண்டீஸ்வரர், நந்தீஸ்வரர் ஆகியோருக்கு இது பிடிக்கவில்லை. முன்பு புத்திர கணபதியாக விநாயகர் இருந்து கர்வ பங்கம் செய்தது அவர்கள் மனதை உறுத்தியது.
 
அவர்கள் "குமரனுக்கு தேவர் படை பலம் உள்ளது. நாங்கள் ஆரம் பத்திலிருந்தே சிவ கணங்களாக இருந்து வந்திருக்கிறோம். இப்போது எங்களுக்குத் தலைவனாக விநாயகர் வருவதா? இதுவரை இவர் ஏதாவது ஒரு படைத்தளபதியாகவாவது இருந்திருக்கிறாரா? இல்லையே! எனவே இவருக்கு எதற்கு பட்டாபிஷேகம்?" என்று ஆட்சேபித்தனர்.
 
அப்போது சிவன் "நான் சொன்னதற்கு எதிர்ப் பேச்சு சொல்லும் அளவிற்கு நீங்கள் வந்துவிட்டீர்களா?" என்று பிரமதாகணப் பிரமுகர்களைப் பார்த்து இடிஇடிக்கும் குரலில் கேட்டார்.
விநாயகரோ, "ஆமாம். இவர்கள் கேட்பது சரியே. என் கணங்கள் என்ன ஆயின? நான் புத்திர கணபதியாக இருந்தபோது சில கணங்களை வென் றேனே அவை எங்கே போயின?" என்று கேட்டார்.
 
மறுநிமிடமே ஆயிரமாயிரம் விநாயகர்கள் பல இடங்களிலிருந்து கிளம்பி வரலானார்கள். எங்கும் விநாயகர் வாழ்க என்ற கோஷமே கிளம்பி விண்ணை அதிர வைத்தது. அவர்களது நான்கு கைகளிலும் வித விதமான ஆயுதங்கள் இருந்தன. பலவகையான விசித்திரப் பொருள்கள் இருந்தன.
 
மணிகள், எழுத்தாணிகள், குஞ்சலங்கள் என்றும் ஈட்டிகள், சூலங் கள், வில் அம்புகள், கத்திகள், கதாயுதங்கள், கோடாலிகள், சுத்தியல்கள், ரம்பங்கள் என்றும் அவர்களது கைகளில் விதவிதமானவை இருந் தன. வேறு சிலர் கைகளில் இசைக் கருவிகளான வீணை, மிருதங்கம், உடுக்கை, குழல் போன்றவை இருந்து இசைக்கவும் செய்தன. வேறு சிலர் கைகளில் மருந்து, மூலிகை, பச்சிலை என்றும், சில கைகளில் நவரத்தினங்களும், தங்க நகைகளும், மலர் மாலைகளும், பழங்களும், தின்பண்டங்களும் இருந்தன.
 
சில விநாயக உருவங்கள் ஆகாயத் தில் பறந்தன. சில உருவங்களிடம் குடை, வெண்சாமரம், விசிறி போன்றவை இருந்து ஆடின. கொடிகள் பறந்தன. சிலர் இரத்தினங்கள் பதித்த சிம்மாசனத்தைக் கொண்டு வந்து போட்டார்கள். அதில் விநாயகரை உட்காரவைத்து வெண்குடை பிடித்து வெண்சாமரங்கள் வீசினர். மூஞ்சூறு அவரது காலடியில் உட்கார்ந்து ‘கீச்சு' ‘கீச்சு'சென்று கத்தியது.
 
பார்வதி தேவி விநாயகரை வணங்க முயன்றாள். அப்போது விநாயகர் தடுத்து, "அம்மா! வேண்டாம். நான் உங்கள் மகன்," எனக் கூறி வணங்கினார். அப்போது விஷ்ணு "விநாயகா! இனிமேல் நீ தடை சொல்ல முடியாது. ஏனென்றால் நீ ஆயிரம் தடவைகள் தான் தடை சொல்ல முடியும். இப்போது அந்த ஆயிரம் முறைகள் முடிந்துவிட்டன," என்றார்.
 

0 comments:

Post a Comment