விநாயகர் - 7

 
ஒருநாள் நாரதர் கைலாசத்திற்குச் சென்று கொண்டு இருந்தார். வழியில் கண்டமுகி என்ற யட்சிணி அவரைப் பார்த்து கேலியாக, "நார தரே! என்னை மணந்து கொள்வீரா? ஹே! பிரம்மாவின் மைந்தா, என்னை மணந்து கொண்டு பிரம்மாவின் பந்தத்திலிருந்து விமோசனம் பெற்றுக் கொள்ளுங்கள்," என்றாள்.
 
அதற்கு "நான் கலகப்பிரியன். என்னைப் போன்று கலகம் செய்பவள் ஒருத்தி கிடைத்தால் மணந்து கொள்ளலாமே!" என்று நாரதரும் கேலியாகப் பதில் கூறினார். "நான் உங்களை விடவும் சண்டைக்காரி, கலகக்காரி," என்று யட்சிணி கூறினாள்.
 
அந்த வேளையில் விநாயகரும் குமாரசுவாமியும் கைகோர்த்துக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த நாரதர், யட்சிணியிடம் "இந்த இரண்டு சகோதரர் களுக்குள் சண்டை உண்டு பண்ண முடியுமா உன்னால்?" என்றார். "ஹூம்.
 
இது என்ன பெரிய விஷயம்? உடனே செய்து காட்டு கிறேன், பாருங்கள்!" என்று கூறிய படி அருகிலிருந்த குளத்தில் மூழ்கி தங்கத் தாமரையாகத் தோன்றி "நான் பார்வதி-பரமேஸ்வரரின் புத்திரருக்காக மலர்ந்திருக்கிறேன்," என்று கூறினாள். இதைக் கேட்டதும் இரு சகோதரர் களும் "இது என்னுடையது! இது என்னுடையது!" என்று சண்டையிடத் தொடங்கினர். "ஹே! கணேசா!
நீ அம்மாவினால் செய்யப்பட்ட பொம்மை. அழுக்கின் சிகரம்," என்று குமாரசுவாமி சொன்னார். அதற்கு விநாயகர் "நீயோ அழுக்கு நிறைந்த சரவணப் பொய்கையில் தோன்றினாய்," என்றார்.
 
குமாரசுவாமி தமது முட்டியினால் விநாயகரைத் தாக்கினார். விநாய கரோ தமது தும்பிக்கையினால் குமார சுவாமியின் இடுப்பை வளைத்து உயரே தூக்கினார். குமாரசுவாமி விநாயகரின் தொந்தியில் தலையினால் மோதினார். நாரதர் ஓடோடி வந்து, "நீங்கள் ஏதாவது ஒரு பந்தயம் வையுங்கள்," என்றார்.
 
குமார சுவாமி, "சரி! இந்த உலகத்தை எவன் ஒருமுறை சுற்றி வருகிறானோ அவனுக்குத் தான் இந்தத் தங்கத் தாமரை சொந்தம்," என்றார். "இது சரியான போட்டி!" என்று நாரதர் சொன்னார். உடனேயே மயிலில் ஏறி உலகம் சுற்றுவதற்காகக் குமாரசுவாமி கிளம்பிவிட்டார். விநாயகரோ கவலை தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்துவிட்டார்.
 
"விநாயகரே! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்ட நாரதரிடம் "முனிவரே! யாருக்கு எது கிடைக்க வேண்டுமோ அதுதான் கிடைக்கும். இந்நத் தொந்தியுடன் மூஞ்சூரில் அமர்ந்து என்னால் உலகை எப்படிச் சுற்ற முடியும்? எனது தம்பிக்கே தங்கக் கமலத்தைக் கொடுத்துவிடுங்கள்," என்று விநா யகர் கூறினார்.
 
இதைக் கேட்டு "விக்னபதியே! நான் பார்வதி-பரமேஸ்வரனைப் பார்க்கச் செல்கிறேன். பிறகு வருகிறேன்!" என்று கூறி நாரதர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதற்குப் பின் விநாயகருக்கு என்ன தோன்றியதோ? உடனே சென்று ஆசனத்தில் அமர்ந்திருந்த பார்வதி-பரமேஸ்வரரை மும்முறை வலம் வந்து வணங்கினார். தம்பியின் வருகைக்காக அங்கேயே காத்திருந்தார்.
 
பல இன்னல்களுக்கிடையே உலகைச் சுற்றிவிட்டு நீண்ட நேரம் சென்று குமாரசுவாமி அங்கு வந்தார். அவரைத் தழுவியபடி "மிகவும் கஷ்டப்பட்டு உலகைச் சுற்றிவிட்டு வந்திருக்கிறாய்! நீயே தங்கக் கமலத்தை எடுத்துக் கொள். போட்டியில் என்னமோ நான்தான் ஜெயித்திருக்கிறேன்.
ஆனாலும் எனக்கு இந்தத் தாமரை வேண்டாம்," என்று விநாயகர் கூறினார். "அது எப்படி நீ ஜெயித்தாய்?" என்ற குமாரசுவாமியிடம், "உனக்கு முன்பே நான் உலகத்தை மூன்று முறை சுற்றிவிட்டேன். சந்தேகம் இருந்தால் மற்றவர்களிடம் கேள்!" என்றார். அதே சமயம் "விநாயகர் ஜெயித்தார்!" என்ற குரல் ஆகாயத்தில் இருந்து மும்முறை ஒலித்தது.
 
குமாரசாமி உண்மையைப் புரிந்து கொண்டார். விநாயகரை சாஷ்டாங்கமாக வணங்கினார். பிறகு "அண்ணா! நான் கடுமையாகத் தவம் செய்து பிரம்ம ஞானம் பெற்றிருக்கிறேன். நீங்களோ கூர்மையான புத்தி உடையவராக இருக்கிறீர்கள்? நீங்கள் தான் முதல்வர். இப்பொழுது தாரகா சுரனுடன் போர் செய்யப் போகிறேன். என்னை ஆசீர்வதியுங்கள்," என்றார்.
 
விநாயகர் "தம்பி! நான் பெரியவன், நீ சிறியவன் என்ற எண்ணமே நம் மனதில் வரக் கூடாது. நீ ஒரு காரணத்திற்காக அவதரித்திருக்கிறாய். நீ சொன்னபடி நானோ அம்மாவால் செய்யப்பட்ட பொம்மை தான். உன் காரணமாகத்தான் பார்வதி பரமேஸ்வரரின் திருமணம் நடை பெற்றது. நீ அவர்களின் பிரிய புத்திரன். உன்னுடைய வெற்றி முதலிலேயே நிச்சயிக்கப்பட்டுள்ளது. 
 
உன்னுடைய கைகளால் இறக்க வேண்டும் என்று தாரகாசுரன் வரம் பெற்றிருக்கிறான். நீ தான் சுப்ரமண்யேஸ்வரர். எனக்காக எங்கு பார்த்தாலும் கோயில்கள் இருக்கும். உனக்கோ பெரிய தீர்த்த ஸ்தலங்களில் பெரிய கோயில்கள் இருக்கும். முக்கியமான கடவுளாக நீ வணங்கப்படுவாய். சீக் கிரமாய் தாரகாசுரனை வதம் செய்!" என்று சொன்னார். இதன்பின் தேவர்களின் சேனாதி பதியாகி குமாரசாமி தாரகாசுரனை வதம் செய்யச் சென்றார். யட்சர்களின் அதிபதியான குபேரன், யட்சிணியின் மூலம் ஏற்பட்ட கலகத்திற்காக அவளை முட்செடியாகிப் போகும் படி சபித்தார். கண்டகமுகி சாபவிமோசனம் தரும்படி கேட்டாள். அதற்கு விநாயகரால் தான் அவளுக்குச் சாபவிமோசனம் என்று குபேரன் கூறினார்.
உடனே கண்டகமுகி முட்செடியாகத் தோன்றினாள். தாரகாசுரனை வென்றபின் இந்திர னின் மகள் தேவயானியுடன் குமார சுவாமியின் திருமணம் நடத்துவதற் கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. "அண்ணனுக்குத் திருமணம் ஆகாமல் நான் எப்படி மணம் செய்து கொள்ள முடியும்?" என்று குமார சுவாமி திருமணத்தை நிறுத்தி வைத்தார்.
 
பார்வதி "மகனே! நீ மணம் செய்து கொண்டால் தான் தம்பியின் திரு மணம் நடைபெறும். எனவே நீ திருமணம் செய்து கொள்," என்று விநாயகரிடம் சொன்னாள். "ஏன் வேண்டாத சட்டதிட்டங்களை எல்லாம் நீங்கள் மதிக்கிறீர்கள்? தும்பிக்கையும் ஒரு தந்தமும் உடைய எனக்கா திருமணம்?" என்று தாயிடம் விநாயகர் கூறினார். திருமணத்தைத் தடுப்பதற்காகப் பல விதக் காரணங்களையும் சாக்குப் போக்குகளையும் சொல்லலானார். அம்மாவின் வேண்டுகோளை நிராகரிக்க முடியாத நிலையில் "அம்மா! தம்பி கடும்தவம் செய்திருக்கிறான். நான் ஒன்றுமே செய்யவில்லை. எனவே தவம் செய்யப் போகிறேன்," என்று கூறி தவம் செய்வதற்காக வனம் சென்றார்.
 
அவரது தவத்தைத் தடுப்பதற்காக இந்திரன் தேவகன்னிகளை அனுப்பினான். அர்க் என்ற தேவகன்னிகை மட்டும் அதை மறுத்துவிட்டாள். "நீ எருக்கஞ்செடியாக மாறுவாயாக!" என்று தேவேந்திரன் அவளுக்குச் சாபம் கொடுத்தான்.
 
விநாயகர் முட்செடிகள் நிறைந்த இடத்தில் தவம் செய்யலானார். அங்கு எருக்கஞ்செடிகளின் கூட்டத் தில் மொட்டுக்கள் நிறைந்திருந்தன. தேவ கன்னிகைகள் அங்கும் வந்து தவத்தைக் கெடுக்க முயற்சித்தனர். அவர்கள் கால்களில் முட்கள் குத்தவே கூச்சலிட்டனர். அந்தக் கூச்சலால் விநாயகரின் தவம் கலைந்தது. கண் விழித்துப் பார்த்தார்.
 
தேவ கன்னிகைகள் பயந்து ஓடிவிட்டனர். முட்செடியாக இருந்த கண்டக முகி "ஐயனே! சகோதரர்களாகிய குமாரசுவாமி உங்களிடையே கலகம் உண்டுபண்ணியதற்காக குபேரன் எனக்கு இவ்வாறு சாபம் கொடுத்தார். எனக்கு விமோசனம் தாருங்கள்!" என்றாள்.
 
அன்று ஆவணி மாதம் சுக்கில பட்ச நான்காம் நாள். அன்று தான் விநாயக சதுர்த்தி. எனவே கண்டக முகிக்கு விமோசனம் அளித்தார். இதன் பிறகு எருக்கஞ்செடியாக இருந்த அர்க் என்ற தேவகன்னிகை, "இந்திரனின் சாபத்தால் இந்த வடி வம் எடுத்துள்ளேன். உங்கள் பக்தை யான எனக்கு விமோசனம் தாருங்கள்!" என்றாள்.
 
அவளுக்கு சாப விமோசனம் கொடுத்தபடி "உன் நினைவாக யாரும் தொடாத எருக்கம்பூ மாலை யையும் நான் சதுர்த்தி அன்று அணிந்து கொள்வேன். நீ துவாபர யுகத்தில் குப்ஜாவாகப் பிறந்து கிருஷ்ணனால் ஏற்றுக் கொள்ளப் படுவாய். எருக்கன் வேர் மருந்துக்கு உதவும். எருக்க இலை சூரியனுக்கு உகந்ததாக இருக்கும்," என்று கூறி அவளை அனுப்பி வைத்தார்.
 
தவத்தை மேலும் தொடர எண்ணி பாம்புப் புற்றுகள் நிறைந்த இடத்திற்குச் சென்றார். பாம்புகள் படம் எடுத்தபடி அவருக்குப் பாதுகாப்பாக நின்றன. இந்திரன் மூஷிகாசுரன் என்ற அரக்கனை விநாயகருக்கு எதிராகச் சண்டை செய்யுமாறு தூண்டினான். ராட்சஸன் விநாயகருடன் போரிட வந்தபோது நாகலோகத்திலுள்ள அத்தனை நாகங்களும் அரக்கர்களுடன் மோதின. அநேகர் மடிந்தனர். மிஞ்சிய சிலரும் இந்திரனைச் சபித்தபடி ஓடி ஒளிந்தனர்.
 
இதன்பின் இந்திரன் தேவர்களை யும் தேவ கன்னிகைகளையும் ஜோடியாக விநாயகர் முன் சென்று அவர் மனத்தில் ஆசையை உண்டு பண்ணும் படி ஆணையிட்டான்.
அவனும் வஜ்ஜிராயுதம் எடுத்துக் கொண்டு சென்றான். நாகக் கூட்டம் தேவர்களை விரட்டியடித்தன. வஜ்ஜிரயுதத்தால் நாகங்களைக் கொல்ல இந்திரன் முயற்சித்த போது நாகலோகத்திலுள்ள அத்தனை சர்ப்பங்களும் அவனை நோக்கிச் சீறின. வஜ்ஜிராயுதத்திற்கு அஞ்சாமல் சொர்க்கலோகத்தையே நாகப்படை முற்றுகையிட்டது.
 
இதைக் கண்டு மகிழ்ந்த விநாயகர் அவைகளை கையில் எடுத்து முத்த மிட்டார். அவைகளையே ஆபரணங்களாக அணிந்து கொண்டு விநாயகர் கைலாசம் சென்றார். பாம்புப்பிடாரன் ரூபத்தில் தன்னைப் பார்த்து வியந்த அன்னையிடம் "அம்மா! அப்பாவின் சொத்து பிள்ளைக்குத் தானே? சங்கராபரணம் எனக்கும் ஆபரணமே!
 
தவிர தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து என்னைக் காத்ததால் இவைகள் என்னுடைய நண் பர்கள். இவைகளை அணிவதால் மக்கள் என்னை ‘நாகபூஷணம்' என்று கூறுவர்," என்றார். சிவனார் அதுகேட்டு புன்னகை புரிந்தார். விநாயகரும் தம் திருமணம் நடக்காமல் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல் லாம் செய்து வந்தார்.
 
திருமணம் செய்து கொள்ளும்படி மறுபடியும் தாய் கேட்டபோது, "பெரிய காரியம் செய்பவர்களைத் தான் கெட்டிக்காரன், சாமர்த்தியசாலி என்பர். அப்படி நான் எதுவும் செய்யவில்லையே! நானும் தம்பியைப் போல் பெரிய காரியம் செய்த பின் சாமர்த்தியசாலியாவேன். பின்பு திருமணம் செய்துகொள்கிறேன்," என்று விநாயகர் கூறினார்.
 
"நீ மட்டும் மகான் இல்லையா? உனக்கு என்ன குறை? உனக்கு சாமர்த்தியமும் புத்திபலமும் இருக் கிறதே!" என்றபடி பார் வதி அவரைத் தழுவிக் கொண்டாள்.                                                            
 

0 comments:

Post a Comment

Flag Counter