யுத்த காண்டம் - 7

 
ஆகம்பன் இறந்த செய்தி கேட்டு இராவணன் கோபற்றான். தன் வியூகத்தை ச பார்த்துவிட்டு இலங்கையையும் ஒரு  முறை  நன்கு சுற்றிப் பார்த்தான். இலங்கையைச் சுற்றிலும் வானரர்கள்  முற்றுகையிட்டு இருப்பதை அவன்
கண்டான்.

அதன் பிறகு அவன் தன் தர்பாருக்கு வந்து பிரகஸ்தனிடம், "இந்த  முற்றுகையைத் தகர்க்க என்னாலும் உன்னாலும் நிகும்பனாலும், இந்திரஜித்தினாலும், கும்பகர்ணனாலுமே முடியும். எனவே நீ உடனே போய் வானரப் படையை அழித்துவிட்டுத் திரும்பி விடு" என்றான். சீதையை இராமடம் ஒப்படைத்துவிட்டு சமாதானமாகப் போவதே மிகவும்  நல்லது என எண்ணியவர்களுள் பிரகஸ்தனும் ஒருவன். அவ்விதம் இராவணன்  நடக்காமல் போருக்குச் செல்லவே, தன் யோசனையை இராவணன் ஏற்கவில்லையென்ற காரணத்தால் அவனைவிட்டு அவன் பிரிந்து
போய்விடவில்லை. அவனுக்கு உறுதுணையாக நின்று இராவணன் இட்ட கட்டளைப்படி  நடந்து வரலானான்.
எனவே அவன் இரதத்தில் ஏறிக்கொண்டு போர்க்களம் சென்றான்.

ஆர்ப்பாட்டத்தோடு வரும் பிரகஸ்தனைக் கண்ட இராமர், "யார் இவன்?" எனக்  கேட்க விபீஷணனும் "இவன் பிரகஸ்தன். எல்லாவித அஸ்திரங்களையும் எய்ய வல்லவன். இராவணனின் படைகளில் மூன்றில் ஒரு பகுதி இவன் கீழ் உள்ளது" என்றான்.
 இதே சமயம் வானரவீரர்கள் ஆர்ப்பத்தனர். அவர்கள் மரங்களையும், கற்களையும் எடுத்துக் கொண்டு தயாராக நன்றனர். கடும்போர் முண்டது. சராந்தகன், மகாநாதன், சன்னன் போன்ற அரக்கர் படைத் தலைவர்கள் வானரப் படையின் எண்ணிக்கையை பெரும் குறைத்துக் கொண்டு வந்தனர். நீலன் பிரகஸ்தனை எதிர்த்தான். போர் மிகவும் கடுமையாக நடந்தது. அதில் நீலன் பிரகஸ்தனது தலையில் அடித்து கொன்று கீழே வீழ்த்திவிட்டான்.

இதைக்கண்ட மற்ற அரக்கர்கள் பயந்து ஓடலாயினர். இராவணனுக்கோ இது ஒரு பேரிடியாயிற்று. அவன் மற்ற அரக்கர்களிடம், "பிரகஸ்தனையே இந்த வானரர்கள் கொன்று விட்டார்களென்றால் அவர்களது பலம் சாமான்னியமல்ல. இனியும் நான் அலட்சியமாக இருக்கக் கூடாது. நானே போர்க்களம் போய் இராமனையும், இலட்சமணனையும் அழித்து வானரப்படையை நாசம் செய்கிறேன்" என்று கூறினான். இராவணன் உடனே ஒரு இரதத்தில் அமர்ந்து போர்க்களம் சென்றான். இந்திரஜித்தும் இராவணனின் மற்றொரு மைந்தனும் உடன் சென்றனர். விபீஷணன் போர்க்களத்திற்கு வரும் அரக்கர்களைக் கண்டு அவர்களின் பெயர்களை எல்லாம் இராமருக்குத் தெவித்தான்.


இராவணனது அலங்காரத்தையும் அவன் உடல் வலிமையையும் கண்டு இராமர் ஆச்சயப்பட்டார். அப்போது இராவணன் தன் வீரர்களிடம், "நீங்கள் திரும்பிப் போய் இலங்கையைப் பாதுகாத்து வாருங்கள். நான் இங்கே போர் புரிகிறேன்" என்றான். சுக்கிரீவன் இராவணனை எதிர்க்கச் சென்றான். இராவணன் விட்ட அம்புகளால் அவன் அடிப்பட்டு விழுந்து போனான். வானரப் படையைக் காக்க இராமர் தன் வில்லம்புகளை எடுத்தபோது இலட்சுமணன், "இவனை நானே எதிர்க்கிறேன். நீங்கள் இருங்கள்" எனக் கூறிச் சென்றான். இதற்குள் அனுமார் இராவணனின் தேரை அணுகி, "உன்னை ஒரே  குத்தில் கொல்கிறேன்" என்றார். இராவணனோ, "எங்கே பார்க்கலாம். நானும் திரும்பி ஒன்று கொடுக்கிறேன். அப்புறம் நீ எங்கே இருக்கப் போகிறாய்?" என்றான்.

 "ஓகோ, உன் மகன் அட்சய குமாரனை நான் கொன்றது நனைவில்லையா?" என அவர் கூறவே இராவணன் கோபம் கொண்டு அவரது மார்பில் ஓங்கி அடித்தான். அனுமார் சற்று திகைத்தாலும் மறு நமிடமே இராவணன் மார்பில் ஓர் அடி கொடுத்தார். அந்த அடியின் பலத்தை உணர்ந்து இராவணன் "‘ஆகா! இவ்வளவு பலமா உனக்கு?" என வியப்போடு கேட்டான். அனுமாரும் "இந்த ஒரு அடியிலேயே நீ விழுந்திருக்க வேண்டும். ஏதோ தப்பி விட்டாய். அடுத்த தாக்குதலின்போது நான் அடித்தால் நீ கண்டிப்பாக எமலோகத்திற்குப் போக வேண்டியதுதான்" என்றார்.

இரதாவணனோ அது கேட்டு கோபமடைந்து அனுமாரை விட்டுச் சட்டென நீலனோடு போர் புரியலானான். அனுமார் அப்போது "நீ இப்போது நீல டு போர் புரிவதால் போர் இலக்கணப்படி உன்னை நான் தாக்காமல் போகிறேன். எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காமலா போய்விடப் போகிறது?" என்று கூறினார். நீலன் விசித்திரப் போர் முறையைக் கையாண்டான். சிறிய உருவம் எடுத்து இராவணனைத் தாக்கவே இராவணனால் அம்புகளைக் கொண்டு அவனைத் தாக்க டியவில்லை. அந்தப் போரைக் கண்டு இராமரும், இலட்சுமணனும் ஆச்சயப்பட்டனர்.

இராவணனன் அக்னியாஸ்திரத்தை விட்டு நீலனைக் கீழே வீழ்த்தினான். ஆனால், அது அவனது உயிரைப் போக்கவில்லை. ஏனெனில் நீலனின் தந்தை அக்கினி. எனவே, அவனை அந்த அஸ்திரம் எதுவும் செய்யவில்லை.
இச்சமயம் இலட்சுமணன் இராவணனை எதிர்க்கலானான். வெகுநேரம் போர்  நடந்தது. முடிவில் இராவணன் பிரம்மா கொடுத்த ஒரு சக்தி ஆயுதத்தைவிட அது இலட்சமணனின் மார்பில் தாக்கி அவனை நினைவு இழக்கச் செய்தது.

 அப்போது இராமர் ஓடிவந்து இலட்சுமணனைத் தூக்க முயன்றார். இதே சமயம் அனுமார் இராவணனை பலமாக  அடிக்கவே அவன் கீழே விழுந்து இரத்தம் கக்கினான். தேலேயே மயக்க முற்றுக் கிடக்க விட்டு அனுமார் இலட்சுமணனைத் தூக்கிக் கொண்டு இராமரருகே போனார். இதற்குள் இலட்சுமணனுக்கு முர்ச்சை தெளிந்தது. இராவணனும் சமாளித்து எழுந்தான்.

அப்போது அனுமார் இராமடம் "நீங்கள் என் துகின்மீதமர்ந்து இராவணனோடு போர் புரியுங்கள்" என்றார். இராமரும் அவ்விதமே ஏறி உட்கார்ந்து போர் புரியலானார். இராவணன் கூய அம்புகளால் இராமரைத் தாக்கலானான். அது கண்டு இராமர் வெகுண்டு அவனது தேரை அழித்து தேர்ப்பாகனை ஓழித்து அவனது மார்பில் ஒரு அம்பைக் குறி வைத்து எய்தார். இராவணன் கீழே விழ இராமர் மற்றொரு அம்பால் அவனது மகுடத்தைப் பொடியாக்கினார்.

இராவணன் மெதுவாகக் கண்விழித்துப் பார்த்தான். அப்போது இராமர் "நீ இப்போது களைத்துப் போய் எவ்விதத் துணையும் இல்லாது இருக்கிறாய். எனவே உன்னை நான் கொல்லமாட்டேன். இன்று போய் நீ நாளை போருக்கு வா" எனக் கூறினார்.

இராவணன் தலை குனிந்தவாறே இலங்கைக்குத் திரும்பிச் சென்றான். அப்போதுதான் அவனுக்கு இராமன் பலம் எவ்வளவு என்பது தெரிந்தது. உடனேயே அரக்கர்களைக் கூட்டி "இந்திரனையே வென்ற நான் ஒரு மானிடனிடம் தோற்பதா? ஒரு மானிடனால் ஆபத்து நேரிடுமென பிரம்மா கூறினார். நான் அசரண்யனென்ற இக்ஷ்வாகு வம்ச மன்னனைக் கொன்றேன்.


அவன் இறக்கும்போது தன் வம்சத்தில் பிறக்கும் ஒருவனே என்னை அழிப்பானெனக் கூறினான். வேதவதியை நான் பலாத்காரம் செய்ய முயல்கையிலும் சாபம் பெற்றேன். அந்த வேதவதியே இந்த சீதை. பார்வதி, நந்தி, ரம்பை தலியவர்கள் கூறியதெல்லாம் உண்மையாகப் போகிறதோ? இப்போது ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. தூங்கும் கும்பகர்ணனை எழுப்புங்கள். இப்போதுதான் தூங்க ஆரம்பித்து உள்ளான்.
 இந்த சமயத்தில் இந்த சக்தி வாய்ந்த மானிடர்களையும், குரங்குகளையும் எதிர்க்க கும்பகர்ணன் ஒருவனால்தான் முடியும். அவன் இவர்களை எல்லாம் மிகச் சுலபமாக அழித்து விடுவான்" என்றான். உடனே, அரக்கர்கள் கும்பகர்ணனை எழுப்ப அவன் வீட்டிற்குச் சென்றனர். கும்பகர்ணனின் வீடு குகை போன்றது அவன் விடும் குறட்டையே அரக்கர்களை வெளியே  உந்தித் தள்ளியது. கடைசியில் எப்படியோ குகைக்குள் சென்றனர்.

அவன் படுத்திருந்த காட்சியே யாவருக்கும் அச்சத்தை விளைவித்தது. ஒருபுறம் மாமிசக் குவியலும் மறுபுறம் சாதக் குவியலும் இருந்தன. அரக்கர்கள் அவனை எழுப்ப பலமாகக் கத்தினார்கள். பயங்கரமான ஒலிகளை எல்லாம் ஒலித்தும் பார்த்தனர். அவனது உடலைப் பல ஆயுதங்களைக் கொண்டு குத்தினர்.  அப்போது அவன் சற்று நெளிந்து கொடுத்தான். பின்னர் கொட்டாவி விட்டவாறே எழுந்து உட்கார்ந்து மாமிசம் உண்டு மதுவை அருந்தினான். ஒருறை தன்னைச் சுற்றிலும் பார்த்துவிட்டு அவன் "ஏன் என்னை நீங்களெல்லோருமாகச் சேர்ந்து எழுப்பினீர்கள்?" எனக் கேட்டான்.


இராவணனின் மந்தியான யூபாட்சன் என்பவன் "கும்பகர்ணா, இப்போது பெரிய ஆபத்து வந்துவிட்டது. மானிடர்களும், வானரங்களுமாகச் சேர்ந்து இலங்கையையே அழிக்க ஆரம்பித்துவிட்டனர். இராமன் இராவணனையே போல் அடித்து வீழ்த்தி வீட்டிற்கும் அனுப்பி வைத்திருக்கிறான். இது சாதாரண நிலையா?" என்றான். அது கேட்டு கும்பகர்ணனன் "அப்படியா? அந்த இராமனையும் அவனது வானரப்படையும் கொன்று விட்டு வந்தே இராவணனைப் பார்ப்பேன். இதோ கிளம்பி விட்டேன் போருக்கு" என்று கூறிக் கிளம்பலானான். அப்போது மகோதரனென்ற அரக்கர் பிரகன் "நீங்கள் இப்போது உடனடியா இராவணனைப் போய் பாருங்கள். அவர் கூறுவதைக் கேட்டு விட்டு பின்னர் முடிவு செய்யுங்கள். அப்போதுதான் வெற்றிக்கு ஏதாவது வழி காண முடியும்" என்றான்.


கும்பகர்ணனும் அதற்கு இணங்கி அந்த அரக்கர்களோடு இராவணனைக் காணச் சென்றான். வழி நெடுக அவனுக்கு யாவரும் தலைவணங்கி மரியாதை செய்தனர்.  கும்பகர்ணனன் இராவணனைக் காணச் செல்கிறானென வானரர்கள் கூறிக்கொண்டனர். அப்போது இராமர் "இந்த வானரங்கள் கும்பகர்ணன் என்று ஏதோ ஒரு பெயரைக்  கூறுகின்றனவே அது என்ன? யாராவது ஒருவன் பெயரோ?" எனக் கேட்டார்.

விபீஷணனும் "அரக்கர்களில் தலைசிறந்த வீரன் கும்பகர்ணன். இந்திரனையும், யமனையும் வென்றவன். அவனது உடலைப் பார்த்தாலே பயந்து போய்விடுவார்கள். அவனது பலம் அதிகம். இவனுக்கு அழிவு எவ்வித சாபத்தாலும் ஏற்படாது நேருக்கு நேர் போராடுவதிலேதான் இவனைக் கொல்ல முடியும். அவனும் எனது சகோதரனே. இராவணனுக்கு  நல்லுரைகளை அவனும் கூறிப் பார்த்தான். ஆனால், அவை அவன் காதில் ஏறவில்லை. அதைக் கண்டு கும்பகர்ணன் அவன் போக்கிலேயே போகவிட்டு விட்டான்" என்றான்.


 

0 comments:

Post a Comment

Flag Counter