விநாயகர் - 4

பார்வதி தன் புதல்வனான பிள்ளை யார் கொடுத்த குரலைக் கேட்டு ஓடி வந்தாள். அங்கு தலை வெட்டப்பட்டு கிடக்கும் சிறுவனைப் பார்த்து சிவனாரிடம் "இப்படிச் செய்து விட்டீர்களே! நம் மகனையே கொன்றுவிட்டீர்களே!" என்று கண் ணீர் வடித்துக் கதறினாள். அதுவரை எல்லாவற்றையும் பார்த்துக் கொண் டிருந்த அங்கிருந்தவர்கள் கற்சிலை கள் போலாகிவிட்டனர். சிவனாருக்கும் உடல் வியர்த்துவிட்டது. வாடிய முகத்துடன் அவர் "நம் மகனா? அது எப்படி?" என்று கேட்டார்.

 

பார்வதியும் தான் எடுத்து வைத்த மருதாணி அறைப்பு எப்படிப் பிள்ளையாராகியது என்பதைக் கூறினாள். அதுகேட்டு சிவனார், "ஓகோ! நீயே சிருஷ்டித்த மகனா! அதனால் தான் உன்னை ‘அம்மா' ‘அம்மா' என்று கூப்பிட்டானா? நம் மகன் என்று நீ சொல்வது சரி அல்ல," என்றார்.

 

அதுகேட்டு பார்வதி திடுக்கிட்டாள். அப்போது விஷ்ணு பிரம்மா விற்கு ஜாடை காட்டவே, பிரம்மா வும் முன் வந்து சிவனிடம் "தாங்கள் பார்வதி தேவியை ஏற்றபோதே தங்களது தேஜசை பார்வதியார் உடலில் புகச்செய்தீர்கள். அப்போது முதல் உங்களில், பாதி பாகம் பார்வதி யாகவும் மற்ற பாதி நீங்களாகவும் இருக்கிறீர்கள்.

எனவே இந்தப் பிள்ளையார் தங்கள் மகனே!" என்று கூறினார். சிவனார் கைகளைப் பிசைந்தவாறே யோசனையில் ஆழ்ந் தார். பார்வதி தேவி கண்ணீர் வடித் துக் கொண்டிருந்தாள். அப்போது ஆகா யத்திலிருந்து ஓர் அசரி வாக்கு "வடக்கு திசை நோக்கிப் படுத்திருக் கும் தலையை எடுத்து வந்து என் உடலில் பொருத்துங்கள். நான் உயிர் பெற்று எழுந்துவிடுவேன்" என்று பிள்ளையாரின் குரலில் ஒலித்தது. 

உடனே தேவர்களும் பிரமதா கணங்களும் கிளம்பிச் சென்றன. ஆனால் அவர்களுக்கு யாருமே வடக்கு திசையில் தலை வைத்துப் படுத்தவர் தென்படவில்லை. அவர் கள் தேடிக் கொண்டே சஹ்ய மலைப் பகுதியில் வில்வ வனம் ஒன்றை அடைந்தார்கள். 

அங்கு ஒரு வெள்ளை குட்டி யானை வடக்கு திசை நோக்கிப் படுத்துக் கொண்டிருந்தது. அது சிவனை நினைத்துத் துதித்துக் கொண்டும் இருந்தது. அந்த குட்டி யானை தேவலோக யானையான ஐராவதத்தின் மகனான கஜேந்திரன். ஒரு முறை இந்திரன் வந்தபோது அது அவனை லட்சியம் செய்யாமல் இருக்கவே இந்திரன் கோபமடைந்து அதனைக் கடிந்து கொண்டான். 

அப்போது கஜேந்திரன் பணிவுடன் "என் தந்தை தான் தங்களிடம் பணி புரிபவர். அதற்காக அவர் மகனான நானும் உங்கள் வேலையாளைப் போல பணிந்து போக வேண்டுமா? அப்படி ஒன்றும் இல்லை," என்று சற்றும் பயப்படாமல் கூறியது. 

"ஏய்! குட்டி யானையே! நான் யார் தெரியுமா? தேவேந்திரன்" என இறுமாப்புடன் இந்திரன் கூறினான். அதற்கு கஜேந்திரனும் "ஆமாம். நான் குட்டி யானை தான். நான் கஜேந்திரன். இது போல நாகேந்திரன், சிம் மேந்திரன் என்று பல இந்திரர்கள் இருக்கிறார்கள். நூறு யாகங்கள் செய் தால் போதுமே இந்திரப்பதவி கிடைக்க. தவம் செய்தாலும் இந்திரப்பதவி கிடைத்துவிடும். எனவே யாராவது தவமோ யாகங்களோ செய்தால் உனக்கு பயம் ஏற்பட்டுவிடுகிறது. இந்திரப் பதவி அப்படி ஒன்றும் உயர்ந்ததோ அல்லது கிடைக்காத பொருளோ அல்ல!" என்றது.

அதுகேட்டு இந்திரன் கோபம் கொண்டு, "உன் தலை துண்டித்துப் போகட்டும்" எனத் திட்டினான். கஜேந்திரன் சிரித்தவாறே "சிவனின் கட்டளை இல்லாவிட்டால் சிற்றெறும்பு கூட அசையாது. அப்படி என் தலை துண்டித்து விழுந்தால் நீயே அதற்கு வணக்கம் செலுத்த வேண்டி வரும். தெரியுமா?" என்றது. 

கஜேந்திரன் சிறந்த அறிவாளி என அறியாத இந்திரன் இறுமாப்புடன் "போ, போ! அந்த சிவனையே நம்பி பூலோகத்தில் கிட," எனக் கூறி கஜேந்திரனை சொர்க்கலோகத்தில் இருந்து பூலோகத்திற்குத் தள்ளி விட்டான். கஜேந்திரன் சஹ்ய மலைப் பகுதியில் வந்து விழுந்தான். அவன் அங்கேயே இருந்து எப்போ தும் சிவனையே தியானித்தும் வரலானான். சிவனார் வசிக்கும் வட திசையிலுள்ள கைலாச பர்வதத்தை நோக்கித் தன் தலையை வைத்துப் படுத்து வந்தான். 

தேவர்கள் இந்த கஜேந்திரனின் தலையை வெட்டி எடுத்து வந்து சிவனின் மகனான பிள்ளையாரின் உடலில் பொருத்தினார்கள். மறு நிமிடமே பிள்ளையார் யானை முகத் துடன் உயிர் பெற்று எழுந்தார். பார்வதியோ, "ஆ! இதென்ன விபரீதம்? என் மகனுக்கு யானை முகமா?" என வருந்திக் கண்ணீர் உகுக்கலானாள். அப்போது யானை முகத்தோரான பிள்ளையார் பார்வதி தேவியைப் பார்த்து, "அம்மா! கவலைப்படாதே. நடக்க வேண்டி யது நடந்திருக்கிறது. அன்று நீங்களும் சிவனாரும் படுக்கை அறையில் இருந்தபோது சுவரின் மீது யானையின் உருவத்தைப் பார்க்கவில் லையா? அது நானே!" என்றார். 

பார்வதியும் சிவனாரும், "ஆ! அப்படியா!" என்று கூவினார்கள். சிவனும் "விக்கின விநாயகா! நீயே எங்கள் மகனாக வந்துவிட்டாயா! ஆகா, இதென்ன விளையாட்டு!" என்றார். பிள்ளையாரும் "ஆமாம். கஜாசுரனை ஒழிக்க ஏதாவது ஒரு வழி செய்து தானே ஆக வேண்டும்" என்றார். சிவனும் "ஆமாம். நான் யானைத் தோலை உடுத்து அதன் முகத்தை எப்போதும் அருகில் வைத் திருப்பதாகக் கூறினேன். அதையும் நிறைவேற்றவா இப்படிச் செய் தாய்?" என்றார். பிறகு அவர் "விக்கின விநாயகா! உன் விசுவரூபத்தைக் காட்டு!" எனவே, விநாயகர் ஆகாய மளவிற்கு உயர்ந்தார்.

அதில் நீர், நிலம், நேருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்ச பூதங்களும் பலவித வண்ணங்களும் கொண்ட யானையும் தெரிந்தன. பெரிய வயிறும் துதிக் கையும் கொண்ட விநாயகரை அவர்கள் பார்த்தார்கள். அவரது கைகளில் அங்குசமும், பாசமும் இருந்தன. 

இந்திரன் முதலிய முப்பத்து முக்கோடி தேவர்களும் விநாயகருக் குத் தலைவணங்கி நின்றார்கள். அப்போது இந்திரனின் காதில் அன்று கஜேந்திரன் கூறிய ‘என் தலை முன் நீ வணங்க வேண்டிய காலம் வரும்' என்ற சொற்கள் மெல்லிய குரலில் ஒலித்தன. விநாயகரின் தலை கஜேந் திரனுடையதே எனவும் தெரிந்தது. இந்திரன் தன் காதுகளைப் பிடித்துக் கொண்டு மூன்று முறை தோப்புக் கரணம் போட்டு பின் விழுந்து வணங்கி, "கஜேந்திரா! நீ பெரிய அறிவாளி. நான் அறியாமல் செய்த பிழையைப் பொறுத்து மன்னித்து விடு!" என வேண்டினான். தேவர்கள் யாவரும் தம் தலைவன் இந்திரன் செய்தது போலவே செய்தனர். 

விசுவரூபம் எடுத்த விநாயகரிடம் சிவனும், "விக்கின விநாயகா! உன் இந்த உருவில் கணக்கில்லாத சிறப்பு களைக் காண்கிறோம். அவற்றைப் பற்றி நீயே கூறு!" என்றார். 

விநாயகரும் "சிவ பக்தர்கள் கூடி யுள்ளதே இந்த அகிலாண்டகோடி உலகம். நான் இந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகர் சிவன் பார்வதியாரின் மகன். அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்" எனக் கூறி மௌனமாக நின்றார். 


அப்போது பிரம்மா முன் வந்து "விஷ்ணு மச்சாவதாரம் எடுத்து சோமகாசுரனைக் கொன்று வேதங்களை எடுத்து வந்து பாதுகாத்தார். அவற்றை விநாயகர் எனக்கு கொண்டு வந்து கொடுத்தார். அதனைப் படித்து என் அறிவு வளர்ந்தது. அப்போது தான் விநாயகரின் பல அருமை பெருமைகளை நான் தெரிந்து கொண் டேன். 

நாம் நினைப்பதை அடையக் காரணமாக உள்ள விக்கின விநாயகரை முதலில் தியானித்துப் பிறகு சிருஷ்டித் தொழிலைத் துவக்கி னேன்," எனக் கூறி தொடர்ந்தார். "விநாயகர் விசுவரூபம் கொண் டவர் பஞ்சகணங்களான நீர், நிலம், நேருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் அதிபதி. எனவே, அவர் மகாகணபதி ஆனார்.

அவரது விசுவ ரூபத்தில் ஐந்து வித நிறங்களான வெள்ளை, நீலம், சிவப்பு, பச்சை, கருமை ஆகியவற்றை பஞ்சமகா பூதங்களின் நிறங்களாகவே கண் டோம். யானை கூரிய அறிவின் அறிகுறி. பெரிய தொப்பை இருந்தால் மட்டும் போதாது. கூரிய அறிவும் வேண்டும் என்பதைத் தான் விநாயகர் தம் உருவால் உணர்த்துகிறார். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதனையும் விநாயகர் உணர்த்துகிறார். 

விரைவிலேயே இவர் மூஞ்சூறு வாகனத்தின் மீது அமர்ந்து சுற்றி வரப் போகிறார். சூரிய சந்திர கிரகங்கள் ஒரு குறிப் பிட்ட வழியில் நின்று சென்று சுழல்வது போல ஒரு சிறிய எலி மீது யானையின் உருவில் அமர்ந்து செல் லும் அதிசயத்தை அறிவுறுத்தப் போகிறார் விநாயகர்.

இப்படிப்பட்ட சீரிய அறிவிற்குத் தாமே காரணம் என்பதனையும் எடுத்துக் காட்டு கிறார் விநாயகர். யானையை அடக்க அங்குசத்தைப் பயன்படுத்துவது போல உலகை அடக்கும் சக்தியும் மனோதிட மும் வேண்டும் என விநாயகர் தெரிவிக்கிறார். அறிவை யானையை அடக்குவது போலச் சரியான வழி யில் செலுத்த உபயோகிக்க வேண் டும் என உணர்த்துகிறார்.
எல்லோரும் தர்ம நியாயங்களுக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் எனத் தம் கையி லுள்ள பாசக் கயிற்றால் தெரிவிக் கிறார். நிறைகுடம் போலத் ததும் பாமல் அடக்கமாய் இருக்க வேண் டும் என்பதை அவரது கலசம் அறி வுறுத்துகிறது. 

கோடாலி இன்னல் களைப் போக்கும் சின்னமாக உள்ளது. உலகில் ஏற்படும் சிறிய பெரிய சத்தங்களைக் கேட்க அவரது பரந்த செவிகள் உள்ளன. யானைக் கண் சிறிதானாலும் எல்லாவற்றை யும் நன்கு பார்க்க வல்லது.
எனவே அணுவில் இருந்து பிரம்மாண்டம் வரை எல்லாவற்றையும் அவர் கூர்ந்து கவனிக்கிறார். செழுமைக்கு விநாயகரே அதிபர். நிறைய சாப்பிடுபவர். ஆகாரத்தால் உடல் பலமும் புத்தி பலமும் ஏற்படும் என்பதை உணர்த்தி பழங்கள், பட்சணங்கள், இலை தழைகள் ஆகியவற்றை ஏற்கிறார். எப்படிப்பட்ட இன்னல்களைப் போக்கும் விக்கின விநாயகரைப் பூசிக்க வேண்டும்.

இவர் தாம் ஐந்தாவது வேதமாகக் கருதப்படும் பாரதத்தையே உலகிற்கு அளித்தவர். இப்படிப்பட்டவரின் அருமை பெருமைகளை எடுத்துக் கூற யாராலும் முடியாது. எந்த வேலையை ஆரம்பிப்பதானாலும் விக்கின விநாயகரை முதலில் நினைத் துப் பூஜித்துவிட்டே ஆரம்பிக்க வேண்டும். அப்போது தான் அது நல்ல விதமாக முடியும். அதற்காக அவர் தம் அபயக் கரங்களை உயர்த்திக் காட்டுகிறார். எனவே இவர் மகா கணபதியாக எல்லோராலும் நினைத் துப் பூஜிக்கப்படுபவராகிறார்.

இவ்வாறு பிரம்மா கூறி முடிக் கவே, சிவனும் "பிரம்மா சொன்னது வேதவாக்கு. எனவே விநாயகருக்கே முதல் பூஜை" என்றார். எல்லோரும் ‘ஆமாம்' என ஒருமனதாக ஆமோ தித்து ஒரே குரலில் கூறினார்கள்.
நாரதர் கானம் பாட, சரஸ்வதி தேவி வீணை மீட்டி கீர்த்தனம் வாசித்தாள். அப்போது பார்வதி தேவி விநாயகரை நமஸ்காரம் செய்யப் போக விசுவரூப மகா கணபதி "அம்மா! வேண்டாம். தாய் மகனை வணங்குவது சரியல்ல" எனக் கூறி தன் விசுவரூபத்தை அடக்கி முன் போல சிறு விநாயகராகித் தாயின் காலடியில் நின்றார்.

தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். விநாயகரிடம் "விக்கின விநாயகா! வினை தீர்ப்பவனே! இனி எந்த வேலையையும் ஆரம்பிக்குமுன் உன் னையே துதித்து இன்னல் எதுவும் இல்லாது நன்கு நடைபெற அருள் புரி என வேண்டுவோம்" என்று கூறினார்கள்.

0 comments:

Post a Comment

Flag Counter