விநாயகர் - 3

 
தாரகாசுரனைப் போலவே திரிபுரா சுரர்கள் என்ற மூன்று ராட்சஸர்கள் தவம் செய்து வரங்களைப் பெற்று ஆகாயத்தில் பறந்து மூன்று உலகங் களில் உள்ள ஊர்களையும் மக் களையும் நாசம் செய்து அழித்து வந்தார்கள். அவர்கள் தமக்கென மூன்று பட்டணங்களையும் நிர்மாணித்துக் கொண்டு அவற்றில் இருந்து வந்தார்கள்.
 
அவர்களை அழிக்கக் கூடியவர் சிவன் ஒருவரே என அறிந்த தேவர்கள் கைலாசத்திற்கு வந்து தலைவாசலில் நின்று சிவனைத் துதிக்கலானார்கள். அவர்கள் பல நாட்கள் இவ்வாறு துதித்த போது புதிய இல்வாழ்க்கையை மேற்கொண்ட சிவன் திரிபுராசுரர்கள் செய்யும் அக்கிரமங்களைக் கேட்டு, அவர்களை ஒழிக்க உடனே அவர் தன் சிவகணங்களோடு கிளம்பினார்.
 
அதே சமயம் யானை போன்ற உருவில் ஓர் அசுரனும் உலக மக்களுக் குத் தொல்லை கொடுக்கலானான். கஜாசுரன் என்ற அவன் சிவபக்தன். சிவனைத் தவிர வேறு யாராலும் அவனைக் கொல்ல முடியாது என்ற வரத்தையும் பெற்றவன்.
 
நாரதர் அவனைக் கண்டு, "நீ சிவ னைப் பூஜிப்பதைவிட அவரை ஏதா வது ஒரு உருவமாக்கி உன் மார்பிற்குள் வைத்துக் கொள்" என, நல்லுப தேசம் செய்வது போலச் சொன்னார். கஜாசுரனும் சிவனை நோக்கிக் கடுந் தவம் புரிந்தான். திரிபுராசுரர்களை அழிக்கக் கிளம்பிய சிவன் கஜாசுரனின் தவத் தால் மகிழ்ந்து அவன் கேட்ட வரப்படி அவனது மார்பில் லிங்க வடிவில் இருக்கலானார்.
தேவர்களோ, "சிவன் இப்படிப் போய் கஜாசுரனின் மார்பினுள் உட்கார்ந்துவிட்டாரே. இவருக்கும் பார்வதிக்கும் இனி எப்படி மகன் பிறந்து தாரகாசுரனை அழிக்கப் போகிறான்?" எனக் கவலைப்பட்டனர். நாரதரோ, "நீங்கள் கஜாசுரனின் முன் போய் சிவனைத் துதித்தால் அவர் பூரித்து பெரிய உருவம் எடுப்பார். அப்போது கஜாசுரன் அழிவான். சிவனும் வெளியே வந்து உங்களுக்கு உதவுவார்" என்றார்.
 
உடனே தேவர்கள் எல்லோரும் கஜாசுரனின் முன் போய் சிவனைத் தோத்திரம் செய்யலானார்கள். கஜாசுர னும் அவர்களோடு சேர்ந்து சிவனைத் துதிக்கலானான். அதனால் சிவன் பூரித்து பெரிய உருவம் எடுக்க கஜாசுரனின் மார்பு பிளந்து போயிற்று. கஜாசுரன் இறந்து விழுந்தான்.
 
அப்போது கஜாசுரன் சிவனிடம், "உங்கள் பக்தனான என்னை இப்படிச் செய்துவிட்டீர்களே!" எனக் கேட்க, சிவனும் "கவலைப்படாதே! நீ எப்போதும் என்னுடன் இருக்க உன் முகத்தை எடுத்துச் செல்கிறேன். உன் தோலான யானைத் தோலை ஆடையாக உடுத்திக் கொள்கிறேன்" எனக் கூறி அவன் தோலை உடுத்திக் கொண்டு கைலாசத்திற்குச் சென்றார்.
 
பின்னர் அவர் பூமியைத் தேராகவும், சூரியசந்திரர்களைத் தேர்ச் சக்கரங்களாகவும், வேதங்களைக் குதிரை களாகவும், பிரம்மாவை தேரோட்டி யாகவும், மேருமலையை வில்லாக வும், விஷ்ணுவை அம்பாகவும் மாற்றித் தன் சிவகணங்களான நந்தி, சிருங்கி, பிருங்கி ஆகியவர்களுட னும், தேவர்களுடனும் திரிபுராசுரர் களை அழிக்கக் கிளம்பிச் சென்றார்.
 
வீட்டில் தனியாக இருந்த பார்வதி சிவன் எப்போது திரும்பி வருவார் என்பது தெரியாமல் தவித்தாள். அப் போது நாரதர் வேறு வந்து, "அம்மா பார்வதி! நீ சிவனை மணந்து கொண் டதிலிருந்து தாரகாசுரன் உனக்குத் தொல்லை கொடுக்கத் தீர்மானித்து விட்டான். அவனுக்குத் துணையாக வஜ்ஜிரதந்தன் என்பவனும் இருக்கிறான். அவன் மாயாஜாலங்கள் புரிபவன். எனவே எச்சரிக்கையுடன் இரு!" எனக் கூறிச் சென்றார்.
அதுகேட்டு பார்வதிக்கு மேலும் பயம் பிடித்தது. நன்கு குளித்துவிட்டு சற்று அயர்ந்து தூங்கினால் மன நிம்மதி ஏற்படலாம் என அவள் எண்ணி தன் காலில் இட்டுக் கொண்ட மருதாணி விழுதை எடுத்து ஒரு சிறு பொம்மையாக்கி அதனைத் தடவவே, அது ஒரு சிறுவனாகி விட்டது.
 
அதைக் கண்ட பார்வதி, "யாரப்பா நீ?" என்று கேட்க அவனும், "உன் பிள்ளை அம்மா. நான் தான் பிள்ளையார்" என்றான். பார்வதியும் மகிழ்ந்து ஓர் அங்குசத்தை அவனிடம் கொடுத்து, "நீ வாசலில் நின்று உள்ளே ஒரு புழு பூச்சி கூட நுழை யாமல் காவல் புரி!" எனக் கூறி விட்டுக் குளிக்கச் சென்றாள். பிள்ளை யாரும் தலைவாசலில் நின்று காவல் காக்கலானார். பார்வதி தனியாக இருப்பது தெரிந்து அவளைத் தூக்கி வந்து கொன்றுவிட தாரகாசுரன் திட்ட மிட்டான். பார்வதி இறந்துவிட்டால் அவளுக்கும் சிவனுக்கும் பிறக்கும் குழந்தை ஏது என்றே அவன் வஜ்ஜிர தந்தனை அப்பணியைச் செய்ய அனுப்பினான்.
 
அவன் பயங்கரப் பற்களைக் கொண்ட மூஞ்சூறு போல மாறி னான். இதனால் அவனுக்கு மூஷிகா சுரன் என்ற பெயரும் ஏற்பட்டது. அவன் தான் போவதற்கு முன் தன் கையாட்களான கஜகர்ணன், கோகர்ணன் என்ற இருவரை முதலில் அனுப்பினான். அவர்கள் எருமைக் கடாக்கள் போலக் கொழுத்து வளர்ந்தவர்கள். அவர்கள் பார்வதியின் இல்ல வாசலுக்கு வந்து உள்ளே நுழையப் பார்த் தார்கள். வாசலில் ஒரு சிறுவனைக் கண்டதும் அவர்கள் "தம்பீ! எங்களோடு கண்ணாமூச்சி விளையாட வருகிறாயா?" என்று கேட்டு ஏமாற்றப் பார்த்தார்கள்.
 
பிள்ளையாரோ அவர்களைச் சற்றும் மதியாமல், "இந்தா! இதைப் பிடித்துச் சாப்பிட்டு ஒழியுங்கள்" என்று பார்வதி தேவி கொடுத்ததில் இரு மோதக உருண்டைகளை எடுத்து அவர்கள் பக்கம் விட்டெறிந்தார். அது அவர்கள் மீது பட, அவர்கள் வலி பொறுக்காமல் ஓடினார்கள். ஆனால் அவை அவர்களின் முன் எகிறி விழுந்து பாறைகளாகின.
அவற்றின் மீது அவர்கள் கால் தடுக்கி விழுந்தார்கள். அப்போது பிள்ளையார் அவர்களைக் கூப்பிட்டு, "அடே! காதைப் பிடித்துக் கொண்டு மூன்று தோப்புக் கரணங்கள் போட்டு தாடையில் போட்டுக் கொண்டு பேசாமல் திரும் பிப் போங்கள்" என்றார். அவர்களும் அவ்வாறே செய்துவிட்டு வஜ்ஜிரதந்த னிடம் போய் நடந்ததை எல்லாம் கூறினார்கள்.
 
அதுகேட்டு வஜ்ஜிரதந்தன் எலி யாக மாறி பார்வதியின் இல்லத்திற்கு ஓடினான். பிள்ளையார் தன் கையிலிருந்த கயிறை சுருக்குப் போட்டு அந்த எலியின் கழுத்தில் போட்டு இழுத்தார். அந்த எலியின் தலையில் நான்கு குட்டுகள் குட்டி அதன் வாலைப் பிடித்துத் தூக்கி கிர்கிர்ரென்று சுற்றி தூர விட்டெறிந்தார்.
 
வஜ்ஜிரதந்தன் வெகுதூரமுள்ள தலைநகரில் அந்தப்புரத்தில் போய் ‘பொத்'தென்று விழுந்தான். அவனது மனைவி தவளாதேவி தேவி உபா சனை செய்பவள். தான் என்றென்றும் சுமங்கலியாக இருக்க அருள வேண்டு மென அவள் தேவியை வேண்டி வரமும் பெற்றவள். அவள் தன் கணவனிடம் தன் வரம் பற்றிக் கூறி இனிமேல் பார்வதிக்கு இடைஞ்சல் செய்ய அவன் போகக் கூடாது என் அறிவுரை கூறினாள்.
 
திரிபுராசுரர்களைக் கொன்ற சிவன் பார்வதியைக் காண வேகவேகமாகக் கைலாசத்திற்கு வந்தார். ஆனால் வாசலில் நின்ற பிள்ளையார் அவ ரைத் தடுத்து நிறுத்திவிட்டார். சிவனோ, "யார் நீ?" என்று கேட்க, பிள்ளையாரும் "அம்மாவின் பிள்ளை நான். இங்கு யார் யாரோ என்னென்னவோ உருவில் வருகிறார் கள். அதனால் யாரையும் உள்ளே போகவிடாமல் நான் காவல் புரி கிறேன்," என்றார்.
 
சிவனோ, "சிறுவா! என்னை யார் என்று எண்ணினாய்? நான் பரமேசு வரன்!" என்று கூறினார். பிள்ளை யாரோ "நீங்கள் இவ்வளவு பெரியவ ராக இருந்தும் இன்னமும் ஒன்றும் தெரியாதவர் போல இருக்கிறீர் களே. எனக்குத் தெரிந்ததை நான் கூறுகிறேன். சற்று அமைதியுடன் கேளுங்கள்" எனக் கூறி விவரமாகச் சொல்லலானார். ஆதிசக்தி தன் சிவப்பு, நீல, வெள்ளை நிறச் சுவாலைகளால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரைப் படைத்தாள்.
 
பிரம்மாவும் விஷ்ணுவும் தேவி கூறியதை எதுவும் கேட்டுக் கொள்ளாமல் போக, தேவி அவர்களைத் தன் மூன்றாவது கண்ணால் பார்த்து சுட்டு எரித்தாள். சிவனோ அவள் கூறுவது போலச் செய்வதாயும், முதலில் தனக்கு அவளது மூன்றாவது கண்ணைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டார். தேவியும் தனது மூன்றாவது கண்ணை எடுத்து சிவனின் நேற்றியின் நடுவே வைத் தாள்.
 
உடனே சிவனார் அந்த கண் ணைத் திறந்து சக்தியைப் பார்க்க அவள் எரிந்து சாம்பலாகி நாலா புறமும் பறந்தாள். இப்படியாக உல கம் ஏற்பட்டது. அதன்பின் தேவிக்கு முந்தைய உருவம் வந்தது. இதனால் தான் அவளை ‘மகாமாயா' எனவும் அழைக்கிறார்கள்.
 
அவள் சிவனைப் பாராட்டி பிரம்மாவையும் விஷ்ணு வையும் அவர்களது சாம்பல்களிலிருந்து உயிர் பெற்று வரச் செய்தாள். மீதமான சாம்பலை அவள் மூன்று கூறுகளாக்கி அவற்றிலிருந்து சரஸ்வதி, லட்சுமி, உமா ஆகியவர்களை வரச் செய்தாள்.பிரம்மாவுக்கு சரஸ் வதியையும், விஷ்ணுவிற்கு லட்சுமி யையும், சிவனுக்கு உமாவையும் மனைவியாக்கிவிட்டு சக்தி மறைந்து போனாள். இவ்வாறு பிள்ளையார் கூறியதும் சிவனார், "பார்க்க சிறு பயலாக இருக்கிறாய்.
என்ன பேச்சு பேசுகி றாய்? நான் ஒன்றும் செய்ய மாட்டேன், பயப்படாதே! என்னை உள்ளே போகவிடு!" என்றார். பிள்ளையாரோ "அதுதான் முடியாது. என் உடலில் உயிர் உள்ளவரை நான் யாரையும் உள்ளே போகவிடமாட் டேன்" என்றார். சிவனுக்கும் கோபம் வந்துவிட்டது.
 
சிவகணங்களை அழைத்து அச்சிறுவனை அங்கிருந்து இழுத்துச் செல்லும்படி அவர் கூறினார். அப்போது பிள்ளையார் சிரித்து "என்னைப் பார்த்து சற்றுமுன் சிறு பயல் என்றீர்கள். ஒரு சிறு பயலுக்கு இவ்வளவு கடுந்தண்டனையா? இது சரியா?" என்று கேட்டார்.
 
சிவன் அவரை முறைத்துப் பார்க்கவே பிள்ளையாரும் "சரி, நான் கணங்களின் அதிபதியான கணபதி. என்னை எதிர்க்க வரலாம்," என்றார். மறுநிமிடம் நந்தி, சிருங்கி, பிருங்கி முதலானோர் பிள்ளையாரை நோக்கிப் பாய்ந்து வந்தார்கள். அவரோ தம்மிடம் இருந்த அங்குசத் தாலும், கதையாலும், சூலத்தாலும் பாசத்தாலும் அடித்து அவர்களை விரட்டினார். அங்கு ஒருவர் கூட நிற்க வில்லை. ஓடிவிட்டார்கள்.
 
சிவன் கோபமடைந்து தன் திரி சூலத்தை எடுத்து வீசினார். பிள்ளை யாரின் அங்குசம் அதனை எதிர்த்துக் கீழே விழும்படிச் செய்தது. பிள்ளையார் "என் அன்னை கொடுத்த இந்த ஆயுதம் உள்ளவரை என்னை எதுவும் செய்ய முடியாது. நீங்களோ எனக்குத் தீங்கு விளை விக்க நினைப்பதால் இதனைத் தூர எறிந்துவிடுகிறேன். அதன்பின் உங் கள் இஷ்டம் போலச் செய்யுங்கள்" எனக் கூறி அங்குசத்தைத் தூரப் போட்டார்.
 
சிவன் கோபத்தோடு தன் சூலத்தால் பிள்ளையாரின் தலையை வெட்ட, அவர் ‘அம்மா' எனக் குரல் கொடுத்தவாறே கீழே விழுந்து விட்டார். அவரது தலை உயரக் கிளம்பி ஒளியை வீசி மாயமாய் மறைந்துவிட்டது.              
 

0 comments:

Post a Comment

Flag Counter