விநாயகர் - 2

 
தேவர்களும் அசுரர்களும் ஒன்றாகக் கூடி பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை அடைந்தார்கள். அசுரர் கள் அமிர்தத்தைக் குடித்தால் அபரி மித பலம் பெற்று அதிக அளவில் அட்டூழியங்களைப் புரிவார்கள் என எண்ணி விஷ்ணு மோகினி உருவில் வந்தார். அவர் அசுரர்களை ஏமாற்றி தேவர்கள் மட்டுமே அமிர்தத்தைக் குடிக்குமாறு செய்தார். இதனால் தேவர்களின் கர்வம் அதிகரித்தது.
 
அசுரர்களுக்கு அநீதி இழைக்கப் பட்டுவிட்டதாக எண்ணி தேவர் களைப் பழிவாங்க தாரகாசுரன் பிரம் மாவை நோக்கி கடுந்தவம் புரிந்தான். பிரம்மா அவன்முன் தோன்றவே அவன் தான் சாகாமல் இருக்கும்படி வரம் அளிக்குமாறு வேண்டினான். பிரம்மாவோ "பிறந்தவர் என்றாவது இறந்தே ஆக வேண்டும். எனவே வேறு வரம் கேள்" எனவே அவனும் "அப்படியானால் நான் சிவபிரானுக் குப் பிறக்கும் மகனின் கையால் மரணம் அடைய வேண்டும்" எனக் கோரினான். பிரம்மாவும் அந்த வரத்தைக் கொடுத்துவிட்டு மறைந்தார்.
 
இச்சமயத்தில் தான் சிவபிரானின் மனைவி தாட்சாயணி யாகத் தீயில் தன் உடலை அழித்துக் கொண்டாள். இதனால் சிவபிரான் விரக்தி அடைந்து இமயமலைப் பகுதியில் அலைந்துத் திரிந்து முடிவில் ஓரிடத் தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார்.
 
தாரகாசுரன் பெரும் ராட்சஸப் படையுடன் தேவலோகத்தைத் தாக்கி தேவர்களைக் கதறக்கதற அடித்தான். இந்திரன் முதலிய தேவர்கள் பயந்து பிரம்மாவிடம் போய் முறையிடவே, அவரும் தான் தாரகாசுரனுக்குக் கொடுத்த வரம் பற்றிக் கூறி "நாம் விஷ்ணுவைக் கண்டு பேசி இதற்கு வழி காண்போம்" என்று கூறி அவர்களை அழைத்துக் கொண்டு வைகுண்டத்திற்குச் சென்றார்.
விஷ்ணுவும் "தாட்சாயணி இப்போது இமவானின் புதல்வி பார்வதி யாகப் பிறந்திருக்கிறாள். பார்வதிக் கும் பரமசிவனுக்கும் திருமணம் நடக்கும்படிச் செய்யுங்கள்" என்று யோசனை கூறினார். தேவர்கள் நாரதரை இமவானிடம் அனுப்பினார்கள். நாரதர் கூறிய யோசனைப்படி இமவானும் தியா னத்திலுள்ள சிவ பெருமானை அணுகி, "ஐயனே! தங்களுக்குப் பணிவிடை செய்ய என் மகள் பார் வதியை அனுமதிக்க வேண்டும்," என்று வேண்டினாள்.
 
சிவபிரான் மௌனமாக இருக் கவே, அவர் தன் கோரிக்கையை ஏற்றுவிட்டார் என்றெண்ணி பார்வ தியை அவருக்குப் பணிவிடை செய்ய அனுப்பினான். சிறு வயது முதலே அவளுக்கு சிவபெருமானிடம் ஈடுபாடு உண்டு. நாரதர் வாயி லாக அவள் சிவபிரானின் அருமை பெருமைகளை அறிந்திருந்தாள். தான் மணப்பது என்றால் சிவபிரா னைத் தான் என அவள் தீர்மானித் தாள். எனவே அவள் முழு மனதுடன் அவருக்குப் பணிவிடைகள் செய்து வரலானாள்.
 
சிவபெருமான் தியானத்தில் அமர்ந்திருக்கும் இடத்தை சுத்தமாகப் பெருக்கி, நீர் தெளித்துக் கோலம் போட்டதோடு அவர் விரும்பும் வில்வ இலைகளையும் பழங்களை யும் தினமும் அவள் அவர்முன் அர்ப்பணித்து வந்தாள். இன்னிசையால் பல ராகங்களில் அவரைப் புகழ்ந்து பாடியும் வரலானாள்.
 
தியானத்தில் மூழ்கி இருந்த சிவ பெருமானோ பார்வதியைப் பார்க் கவே இல்லை. பார்வதியோ தன்னை அவர் எப்போது பார்க்கப் போகிறார் என்று ஏங்கலானாள். சிவபெருமானுக்கு மகன் பிறந்தாலே தாரகாசுரன் இறக்க வழி பிறக்கும் என எண்ணிய தேவேந்திரன் பார்வதிக்கும் சிவ பெருமானுக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக மன்மதனின் உதவியை நாடினான்.
 
முதலில் தயங்கிய மன்மதன் "சிவபிரானின் தவத்தை நான் கலைத்தால் அவரது கோபத்திற்கு ஆளாகி நான் அழிந்து போய் விடு வேனே" எனக் கூறிப் பார்த்தான்.
இந்திரன் அவன் அதைச் செய்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்தவே மன்மதனும் தேவர்களின் நலனுக்காக அதைச் செய்வதாக ஒப்புக் கொண்டான். வசந்தன் தேரை ஓட்ட, மன்மதன் தன் கரும்பு வில்லோடு மனைவி ரதிதேவியுடன் சிவபெருமான் தியா னத்தில் அமர்ந்திருக்கும் இடத்தை அடைந்தான். அவர்கள் அங்கு சென்றதும் சுற்றிலும் மலர்கள் பூத்துக் குலுங்கின. நறுமணம் நான்கு திசைகளிலும் பரவியது. குயில்கள் கூவ, வண்டுகள் ரீங்காரம் செய்ய மயில்கள் தோகை விரித்து ஆடின. திடீரென சுற்றிலும் மாறுதல் ஏற்பட்டதை சிவ பிரான் உணர்ந்தார். அவர் கண்களைத் திறந்து பார்த்த போது தம் எதிரில் பார்வதி நிற்பதைக் கண்டார்.
 
இது தான் தக்க சமயம் என்று எண்ணி ஒரு புதரின் பின் மறைந்தி ருந்த மன்மதன் சிவபெருமானை நோக்கித் தன் மலர்க்கணையை எய் தான். அது அவரது மார்பைத் தாக்கி யது. உடனே அவர் அதை யார் எய்தது என்று பார்த்தார். புதரில் மறைந்தி ருந்த மன்மதனைப் பார்த்து அவர் தன் மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதி லிருந்து வெளிப்பட்ட வெப்பமான ஒளி மன்மதனைத் தாக்கவே அவன் எரிந்து சாம்பலாகி விட்டான்.
 
தன் தியானம் கலைந்ததால் கோபம் கொண்டு அங்கிருந்து அவர் கைலாச பர்வதத்திற்குப் போய் விட் டார். மன்மதனோடு வந்த ரதிதேவி தன் கணவன் இறந்ததைக் கண்டு கண் ணீர் உகுத்துத் தீக்குளிக்க முயன்றாள். அதைக் கண்ட தேவர்கள் அவளைத் தடுத்து ஆறுதல் கூறி பார்வதிக்கும் சிவபெருமானுக்கும் திருமணம் நடக்கும் போது மன்மதன் உயிர் பெற்று வந்து விடுவான் எனக் கூறினார்கள். அவளும் மனம் தேறி மன்மதன் எரிந்த தால் மிகுந்த சாம்பலைப் பாது காத்துக் கொண்டிருந்தாள்.
 
பார்வதியோ அது வரை தன் அழ கைப் பற்றி கர்வம் கொண்டிருந்தாள். சிவபிரான் ஒரு முறை தன்னைப் பார்த்து விட்டால் அவர் தம் மனதைப் பறி கொடுத்து விடுவார் என நம்பி னாள். ஆனால் அவர் கண் திறந்து பார்த்தும் லட்சியம் செய்யாது அங்கிருந்து போய் விட்டது கண்டு அவள் வேதனை அடைந்தாள். எனவே அவள் சிவபிரானைக் குறித்துத் தவம் செய்வது என்று தீர்மானித்துக் கொண்டாள்.
எதையும் உண்ணா மல் ஆரம்பத்தில் கொஞ்சம் இலைகளை மட்டும் உட்கொண்டு வந்த அவள் போகப் போக அதையும் கூட உட் கொள்ளவில்லை. அதனால் அவளை அபர்ணா என்று எல்லோரும் அழைக் கலாயினர். கைலாச பர்வதத்திற்குச் சென்றதும் சிவபிரானை மன்மதன் எய்த அம்பு வாட்டியது. பார்வதியின் கடும் தவம் அவரை இளக வைத்தது.
 
மாறு வேடத்தில் வந்து அவர் பார்வதியைப் பட்சித்தார். அவள் உண்மையிலே தன்னை விரும்புகி றாள் என அறிந்து அவர் மகிழ்ச்சி அடைந்தார். எனவே சப்தரிஷிகளை இமவானிடம் திருமணம் பற்றிப் பேசுமாறு அவர் அனுப்பினார். இம வான் அது கேட்டுப் பூரித்துப் போனான். விரைவிலே திருமணம் நடக்க நாளும் குறிப்பிடப்பட்டது. சிவபிரான் தமதுகணங்களுடன் இமவானின் இருப்பிடத்தை அடைந்தார். பிரம்மா, விஷ்ணு, இந்திரன், தேவர்கள் என யாவரும் அத்திருமணத்தைக் காண வந்தார்கள். சப்த ரிஷிகளும் நாரதரும் முனிவர்களும் கூட்டம் கூட்டமாக அங்கு வந்து சேர்ந்தார்கள். சிவபிரான் மாப்பிள்ளைக் கோலத்தில் வர பார்வதி பல வித ஆபரணங் களை அணிந்து அழகு தேவதையாக வந்தாள்.
 
இமவான் அவர்களது திருமணத்தை விஷ்ணுவின் ஆதரவைக் கொண்டும் மற்ற பெரியோர்களின் வாழ்த்துக்களிடையேயும் நடத்தி முடித்தான். கிருகப் பிரவேசத்திற்கு சிவபெருமானுக்காக சிறப்பாக ஒரு இல்லத்தை தேவலோக சிற்பியான விசுவகர்மா அமைத்துக் கொடுத்தார். சிவபெருமானும் பார்வதியும் கை கோர்த்துக் கொண்டு அந்த இல்லத்தி னுள் சென்றார்கள். வழியில் சிவ பெருமான் ரதிதேவி சாம்பல் குவியலருகே நிற்பதைக் கண்டார்.
 
பார்வதியும் சிவபெருமானும் அவளருகேபோய் அவள் தீர்க்க சுமங் கலியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார்கள். சிவபிரான் தன் மூன்றாவதுக் கண்ணைத் திறந்து குளிர்ந்த கிரணங்களை அச்சாம்பலின் மீது விழச் செய்தார். மறு விநாடியே மன்மதன் உயிர் பெற்று எழுந்து வந்தான். அப்போது சிவபிரான் ரதிதேவியிடம் "பெண்ணே! உன் கணவன் உயிர் பெற்று விட்டான்.
இனிமேல் அவன் பிறர்களுக்குத் தென்படமாட் டான். ஆனால் உனக்கு மட்டும் எப்போதும் தென்படுவான். இப்படி அவன் இருப்பது அவனுக்கே நல் லது. யாராலும் அவனை எதுவும் செய்ய முடியாது. அவன் எய்யும் அம்புகளிலிருந்து யாரும் தப்ப முடியாது. நீ எப்போது விரும்பினா லும் அவனைப் பார்க்கலாம். இப்படிப்பட்ட வரத்தை உனக்கு அளிக்கிறேன்" என்றார்.
 
பார்வதியும் சிவபிரானும் பிறகு கிரகப் பிரவேசம் செய்தார்கள். அவர்களுடன் திருமணத்திற்கு வந்திருந்த யாவரும் அந்தப் புதிய இல்லத்தினுள் சென்றார்கள். முனிவர்களின் மனைவிகள் அருந்ததியின் தலைமையில் ஆரத்தி எடுத்தார்கள். அப்போது விசு வசர்மா திரையால் மறைக்கப்பட்ட பலகை ஒன்றை அத்தம்பதிகளின் முன்னால் வைத்து அவர்களிடம் "இது ஒரு அதிசயமான சித்திரம். இதில் இருவரது உருவங்கள் சித்தரிக் கப்பட்டுள்ளன. இந்த இருவரில் யார் மிக அழகானவர் என்பதைக் கண்டு சொல்ல எம் போன்றவர்களால் முடியவில்லை. உங்களால் தான் தீர்வு காண முடியும் என நம்புகிறோம். தயவு செய்து கூறுங்கள்" எனச் சொல்லி மறைத்திருந்த திரையை விலக்கினார்.
 
அது ஒரு நிலைக் கண்ணாடி. அதில் அவர்களிருவரும் தம் உருவங் களைப்பார்த்துப் புன்னகை புரிந்தார்கள். அப்போது நாரதர் "புன்சிரிப்பு இவர் கேட்டதின் விடையாகி விடாது" என்றார். சிவபெருமான் பார்வதியைச் சுட்டிக் காட்டி "இவளே பேரழகி" என்றார். பார்வதியோ "இந்த முக்கண்ணர்தாம் மிகமிக அழகானவர். இவருக்கு இணை யாருமே இல்லை" என்றாள்.
 
யாவரும் அத்தம்பதிகளிடம் விடை பெற்றுக் கொண்டு அவர் களைத் தனியே விட்டு விட்டுச் சென்றனர். அப்போது அவர்கள் சுவரில் அதிசயமான சித்திரம் வரையப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அந்தப் படத் தின் மத்தியில் இரு யானைகள் தம் முன்னங்கால்களைத் தூக்கிக் கொண்டு எதிர் எதிராக நின்று நாட்டியம் ஆடுவது போன்ற நிலை வரையப்பட்டிருந்தது. அந்த இரு யானைகளுக்குப் பின்னால் ஒரு குளம் இருக்க அதில் ஒரு தாமரை மலர் விரிந்திருப்பதாகக் காட்டப்பட் டிருந்தது.
சிவபெருமானும் பார்வதியும் வரையப்பட்டிருந்த இரு யானைகளைப் பார்த்தார்கள். அப்போது அவற்றிடையே ஒரு ஒளி கிளம்பியது. அது பெரிதாகிக் கொண்டே போய் எங்கும் பரவியது. அதில் நல்ல நிறத்தில் தேஜசுடன் கூடிய விக்கினேஸ்வரனை அவர்கள் கண்டார்கள்.
 
விக்கினேஸ்வரரின் முகம் யானை முகமே என்றாலும் அது ஒளி மிக்க தாய்க் காணப்பட்டது. மகிழ்ச்சிததும் பும் முகம். அமைதியை வெளிப்படுத் தும் கண்கள். வலுவான உடல். பெரிய தொந்தி. அபயம் அளிப்பது போன்ற கை. இதை எல்லாம் கண்டு பார்வதி மிகவும் சந்தோஷப்பட்டாள்.
 
விக்கினேஸ்வரைப் பார்த்து பார்வதியும் சிவபிரானும் ஆனந்தம் அடைந்தார்கள். அவர்கள் விக்கினேசு வரனைக் கண்கொட்டாமல் பார்த்தார் கள். விக்கினேசுவரர் அழகான சொற்களில் அவர்களைப் பார்த்து "நான் விக்கினேசுவரன். எந்தத் தடையை யும் அகற்றும் விநாயகன். கணங்களின் அதிபதி. அற்புத ஆனைமுகத் தோன். உங்கள் இருவருக்கும் குமரன் பிறந்து தாரகாசுரனை ஒழிப்பான். ஆனால் அவன் பிறப்பதற்கு முன் நான் உங்கள் மகனாக அவதரிப்பேன்" எனக் கூறினார்.
 
பார்வதி அவரைத்தூக்கிக் கொள்ள கை நீட்டினாள். ஆனால் அவர் அவளது கைகளுக்கு அகப்படவே இல்லை. திடீரென்று மாயமாய் மறைந்தார். அது கண்டு அவர்கள் இரு வரும் ஆச்சரியப்பட்டார்கள். அவர் கள் அந்த இல்லத்தில் ஆனந்தமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருக் கையில் ஒரு மாபெரும் ஆபத்து உலகிற்கு வந்தது.
 

0 comments:

Post a Comment