விநாயகர் 1

 
சத்தியலோகத்தில் தாமரை மீது அமர்ந்து சிருஷ்டிகளைப் படைத்துக் கொண்டே இருந்த பிரம்மா கல்ப யுகம் முடியப் போகும்போது சற்றுக் கண்ணயர்ந்தார். அவர் தலையை ஆட் டிய போதெல்லாம் மலைச் சிகரங்கள் பிளந்து நேருப்பைக் கக்கின. கரு மேகங்கள் வானில் சூழ்ந்து யானைத் துதிக்கை அளவிற்கு தாரை தாரையாக மழையைப் பெய்வித்தன. உலகெங் கும் நீர் நிறைந்து விட்டது. அவர் கண்களை இறுக மூடிக் கொண்டு இருந்த போது உலகம் எல்லாம் இருண்டு விட்டது.
 
இப்படி பெரும் பிரளயமே ஏற் பட்ட போது பிரம்மா நன்கு தூங்கி விட்டார். அவருக்குப் பிரளய காலம் இரவு நேரமாகும். மறுபடியும் கண் விழித்தால் புதிய கல்ப காலம் ஆரம்ப மாகும். தம் சிருஷ்டித் தொழிலை மீண்டும் ஆரம்பிப்பார். அவர் விழித் தெழ சரஸ்வதி தேவி தனது வீணை யை அதிகாலையில் இசைத்துத் துயில் எழச் செய்யும் பூபாள ராகத்தை ஆலாபனை செய்தாள்.
 
பிரம்மா விழித்து எழுந்து உட் கார்ந்து தன் நான்கு திசைகளிலும் பார்த்தார். உலகம் நீரில் மூழ்கி மலைச் சிகரங்களின் மீது அலைகள் மோதிக் கொண்டிருப்பதை அவர் கண்டார். அந்த அலைகளுக்கு மத்தியில் ஓரிடத் தில் இருந்து ஒளி வருவதை அவர் பார்த்தார்.
 
அதை உற்றுப் பார்த்த போது ஆலிலை மீது சந்திரனைப் போல ஒளி வீசும் குழந்தை ஒன்று படுத்துத் தன் வலது கால் கட்டைவிரலைத் தன் வாயில் வைத்துச் சப்பிக் கொண்டு இருப்பதை பிரம்மா கண்டார்.
 
அது கண்டு பிரம்மா கை கூப்பி கண்களை மூடி தியானித்துப் பிறகு கண்களைத் திறந்தார். அந்த ஒளி மய மான, குழந்தை உலகெங்கும் பரவி யுள்ள பரப் பிரம்மமே என்பது பிரம்ம தேவனுக்குத் தெரிந்தது.
அவர் அக்குழந்தையையே ஆச்சரியத்துடன் மேலும் கவனமாகப் பார்க்கலானார். அதற்கு யானையின் தலை இருந்தது. தன் சிறிய துதிக்கையால் அது தன் இடது காலைப் பற்றிக் கொண்டு இருந்தது. அதன் முகத்தில் சற்று அலாதியான ஒளி வீசிக் கொண்டிருந்தது. நான்கு கைகளைக் கொண்ட அதனைப் பார்த்த பிரம்மா திடுக்கிட் டார். ஏனெனில் திடீரென அந்த இலை மீது இருந்த குழந்தை மறைந் தது. அந்த இடத்தில் உயரிய திட்டு ஒன்று தென்பட்டது.
 
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீரிலிருந்து தரைப் பகுதிகள் வெளிப் படலாயின. பிரம்ம தேவனும் தன் படைக்கும் தொழிலைச் செய்ய முற்பட்டார். முதலில் மலைகளும் நதிகளும் இருக்க வேண்டும் என எண்ணி அவர் தன் கமண்டலத்திலிருந்து நீரை எடுத்து பூமண்டலத் தின் மீது தெளித்தார். பிறகு மரங்களை யும், சுரங்கங்களையும் தாதுப் பொருள்களையும் சிருஷ்டித்தார். பின்னர் நடமாடும் ஜீவராசிகளைப் படைக்கலானார்.
 
முதலில் மீனைக் கடலில் சிருஷ்டித்தார். பிறகு தரை மீது அலையை யும் பல மிருகங்களையும் படைத் தார். பட்சிகளை உருவாக்கினார். அதன் பின் மனிதர்கள் உருவாக வேண்டும் என நினைத்துத் தம் கமண்டலத்திலிருந்து நீரை எடுத்துத் தெளித்தார்.
 
இவ்வாறு பிரம்மா படைக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த போது அவரது மனைவி சரஸ்வதி தேவி வீணையை மீட்டி வாசித்துக் கொண் டிருந்தாள். திடீரென அவளது வீணை வாசிப்பில் அபஸ்வரம் வந்தது. அது கேட்டு சரஸ்வதி தேவி திடுக்கிட்டுக் கீழே பார்த்தாள். பிரம்மாவும் கீழே நோக்கினார்.
 
திடீரென மலைகள் தலைகுப்புற கடலில் விழுந்தான். அவற்றின் சிகரங் கள் கீழே போய்விட அடிப் பகுதிகள் குடைபோல மேலே இருந்தன. அவற்றின் மீது சூரிய ஒளி விழுந்தது. ஆனால் கதிரொளி மலைச் சிகரங்களின் மீது விழவில்லை. ஏனெனில் அவை கடலுக்கு அடியிலேயே இருந்தன.
நதிகள் கடலிலிருந்து எதிர் திசை யில் போய் உயரமான இடங்களில் ஏறிப்பாயலாயின. மரங்கள் தலை கீழாகி வேர்ப் பகுதிகள் ஆகாயத்தை நோக்கி நின்றன. கடலின் மேற்பரப் பில் நீர் வாழ் பிராணிகள் மிதந்தன. நீந்தின. சில பறவைகள் போல உயரக்கிளம்பிப் பறந்தன.
 
மிருகங்களோ தலைகளாலும் கை களாலும் நடக்கலாயின. எல்லாமே விசித்திரமாக முற்றிலும் தம் இயல் பிற்கு மாறாக நடக்கலாயின. மனிதர் களில் சிலருக்கு இரண்டு தலைகள். அதில் ஒன்று பெண்ணுடையதாயும் மற்றது ஆணுடையதாயும் இருந்தது. அந்தந்த அவயங்கள் இருக்க வேண் டிய இடத்தில் இல்லாமல் தாறுமா றாக மாறி அமைந்து இருந்தன. இப்படிப் பல விசித்திர உருவங்கள் கொண்டு அவர்கள் விளங்கினர்.
 
சிலர் சாண் உயரமே இருந்தனர். சில பெண்களோ பெரிய யானை போலப் பருத்துக் காணப்பட்டனர். பனைமரம் போலக் கால்கள் சிலருக்கு. மூன்று கால்கள் சிலருக்கு. நான்கு ஒட்டகக்கால்கள் வேறு சிலருக்கு. இப்படி விசித்திர சிருஷ்டிகளாக இருந்தன. மிருகங்களும் மனிதர்களும் போடும் சத்தமோ காதைப் பிளந்தது. சாண் மனிதன் யானை போன்ற பெண்ணை பிரம்மாவிடம் காட்டி "இப்படிப்பட்ட மனைவியு டன் நான் எப்படி வாழ முடியும்!" என்று கேட்டான். இது போல பல உருவங்கள் தம் பிரச்சினைகளுக்கு வழிகூறுமாறு பிரம்ம தேவனிடம் வந்து கேட்டன. பிரம்மாவின் நான்கு தலைகளுமே அந்த விசித்திரக்காட்சி களைக் கண்டு சுழன்றன. அவர் சரஸ்வதி தேவியைப் பார்த்தார். சரஸ்வதி தேவியோ எதுவும் கூறாமல் புன்னகை புரிந்தாள்.
 
பிரம்மாவோ "ஏன் இப்படி எல்லாம் தாறுமாறாகி விட்டன? நான் சரியாகத்தான் சிருஷ்டித்தேன்?" என சற்று உரக்கவே கூறினார். அவரது குரல் பல திசைகளிலும் எதிரொலித்தது. அப்போது திடீரென ஒரு ஒளியை அவர் கண்டார். அதில் ஒரு அற்புத உருவம் தென்பட்டது. அதற்கு யானைத் தலை இருந்தது. நான்கு கைகளிலும் கயறும், அங்குசமும், கலசமும், தண்டமும் இருந்தன. சந்திரன் போன்ற அழகான உருவம். வெண்பட்டு படபடவெனக் காற்றில் பறக்க அதன் மீது போர்த்தி இருந்தது.
சரஸ்வதி தேவி அந்த உருவத் தருகே போய் நின்று நாதநாமக் கிரியை, மாயாமாளவ கௌளம், ஹம்ஸத்வனி ஆகிய ராகங்களில் வீணையில் பாட்டுக்களை இசைத் தாள். யானைமுகத்தோனாகிய அந்த உருவம் ஆலிலை மீது நின்று பிரம்மனை ஆசீர்வதித்தது. அதனைச் சுற்றிலும் ஒளி வீசியது.
 
பிரம்மா கை கூப்பி வணங்கி "மகானுபாவரே! இப்படி அற்புத வடிவைத் தாங்கியுள்ள தாங்கள் யாரோ?" எனப் பணிவுடன் கேட் டார். அந்த உருவமும் "அப்பனே! பிரம்மதேவா! ஏதாவது ஒன்றைத் தொடங்க நினைத்தால் இடையூறு களைப் போக்கும் விக்கினேஸ்வரன் நான். எந்த ஒரு வேலையையும் ஆரம்பிக்கும் போது என்னை நினைத்தால் போதும், உடனே அதற்கு எதிர்ப் படும் இடையூறுகளை என் தண்டத் தால் போக்குவேன். அந்த வேலையும் வெற்றிகரமாக முடியும். நான் பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நேருப்பு, காற்று ஆகாயம் ஆகிய பூதகணங்க ளின் அதிபதியான கணபதி. பயிர் பச்சைகளைக் காப்பவன். இம்மாதிரி விக்கினங்களை அதாவது இடையூறு களைப் போக்கும் என்னை விக்கி னேஸ்வரன் என்று அழை" என்றது.
 
பிரம்மாவும் "விக்கினேஸ்வரா! ஆனால் என் படைப்புகளுக்கு ஏன் இப்படிப்பட்ட விபŽத இயல்புகள் ஏற்பட்டன? ஏன் இப்படி உருமாறி தாறுமாறாகி விட்டன? இனி நல்ல விதமாக எப்படி சிருஷ்டி செய்வது? என்று கேட்டார்.
 
"எதற்கும் இடையூறு ஏற்படக் கூடும் என்பதை உனக்கு அறிவுறுத் தவே இப்படி எல்லாம் நடந்திருக்கிறது. ஆலிலையில் குழந்தையாக அமர்ந்து இப்போது பாலகணபதியாக நான் விளங்குகிறேன். என்னை அப் போது நீ நினைக்கவில்லை. அதனாலேயே இப்படிப்பட்ட இடையூறு கள் வந்தன. என்னை முதலில் நினைப்பது என்றால் வரப்போகும் இடைஞ்சல்கள் பற்றி முன் எச்சரிக்கை அடைவது என்பதே பொருளாகும்.
 
பிரம்மாவானாலும் சரி, வேறு யாராயினும் சரி, தாம் ஒரு வேலையை ஆரம்பிக்குமுன் அதற்கு வரக்கூடிய இடையூறுகளைப் பற்றி எண்ணி எச்சரிக்கை அடைந்து நல்ல விதமாக அந்த வேலை முடியப்பாடுபட வேண்டும். யானை அடி எடுத்து வைக்குமுன் அந்த இடம் கெட்டியாக இருக்கிறதா என்று பட்சித்துப் பார்க்கும். மிருகங்களில் யானைக்கே அறிவு அதிகம். யானை போன்ற அறிவு இருக்க வேண்டும் என உணர்த் தவே நான் யானைமுகனானேன். நீ தூங்கிக் கொண்டிருந்த போது சோமகாசுரன் உன் நான்கு வேதங்களைக் கவர்ந்து கொண்டு போய்க் கடலுக்கு அடியே ஒளித்து வைத்து விட்டான். விஷ்ணு மச்சாவதாரம் எடுத்து வந்து ஆலிலை மீது படுத்திருந்த என்னிடம் கொடுத்தார். இதோ அவற்றைக் கொடுக்கிறேன். வாங்கி மீண்டும் நன்கு படித்து அதன் பின் நீ உன் சிருஷ்டித் தொழிலை ஆரம்பி" என கூறி விக்கினேஸ்வரர் பிரம்மாவிடம் வேதங்களைக் கொடுத்தார்.
 
பிரம்மா அவற்றை வாங்கிக் கொண்டு மகிழ்ந்து போய் விக்கி னேஸ்வரரைத் துதி செய்து ‘இனி என் தொழிலை ஆரம்பிக்குமுன் உன்னை நினைக்கும்படியான வரம் அருள் வாய். இப்போது தாறுமாறாகியுள்ள உருவங்கள் மறையும்படிச் செய்ய வேண்டும்" என வேண்டினார்.
 
விக்கினேஸ்வரனின் சக்தியால் அதுவரை விகார உருவில் படைக்கப்பட்டவை எல்லாம் மறைந்தன. அப்போது விக்கினேஸ்வரர் "பிரம்ம தேவனே! இந்த வக்கிரங்களைப் போக்கியதால் எனக்கு வக்கிரதுண் டன் என்ற பெயரும் ஏற்படும். அதற்கு ஏற்ப என் துதிக்கையையும் கோணலாக வைத்துக் கொள்கிறேன். இனிமேல் இந்த மாதிரி வக்கிர சிருஷ்டி ஏற்படாமல் இருக்க என்னை தியானித்து சிருஷ்டித் தொழிலை ஆரம்பி.
 
மக்களின் மன சங்கல்பம் சித்தி அடைய, சித்தி விநாயகன் என்ற பெயரும் பெறுவேன். எல்லா கணங்களுக்கும் அதிபதியாக கணபதி என்ற பெயரில் சிவனுக்கும் பார்வதிக்கும் மகனாகப் பிறக்கிறேன்" எனக் கூறி மறைந்தார். பிரம்மாவும் "விக்கினேஸ்வராய நமஹ" எனக் கூறித் தம் சிருஷ்டி தொழிலை ஆரம்பித்தார். அது நன்கு நடந்தது.
 

0 comments:

Post a Comment

Flag Counter