பால காண்டம் - 4


விசுமாமித்திரர் இராம இலட்சுமணர்களை அழைத்துக் கொண்டு ஜனகமன்னனின் தலைநகரான மிதிலாபுரியை அடைந்தார். அங்கு பல முனிவர்கள் இருந்தனர்.

ஜனகமன்னனுக்கு விசுவாமித்திரர் வந்திருக்கும் செய்தி கிடைத்தது. அவர் உடனே தனது புரோகிதருடன் வந்து விசுவாமித்திரருக்குத் தக்க மரியாதைகளைச் செய்து வரவேற்றார். பின்னர் அவர் அவரோடு இருந்த இரு சிறுவர்களைப் பார்த்து "இவர்கள் யார்?" என்று கேட்டார்.
விசுவாமித்திரரும் "இவர்கள் கோசலநாட்டு மன்னன் தசரதனின் மைந்தர்கள். உங்களிடமுள்ள சிவதனுசில் நாணேற்றுவதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்" என்றார்.


ஜனகரோடு வந்த புரோகிதர் சதானந்தர் கெளதமருக்கும் அகல்யைக்கும் பிறந்தவர். இராமனால் தன் தாயாருக்குச் சாப விமோசனம் கிடைத்ததென்றும் கெளதமர் மீண்டும் ஆசிரமத்திற்கும் வந்ததாக அவர் கேள்விப் பட்டு மகிழ்ச்சியடைந்தார்.


அவர் இராமனைப் பார்த்து "இராமா, இந்த விசுவாமித்திரரின் அருள் உனக்குக் கிடைத்தது எவ்வளவு பாக்கியமாகும். இவர் அற்ப சொற்பமானவரா? இவரது பெருமையை நான் சொன்னால் நீ ஆச்சரியப்படுவாய். அதைச் சொல்கிறேன்" எனக் கூறி விசுவாமித்திரரின் வரலாற்றைக் கூறலானார்.
"பிரம்மதேவருக்கு குசன் என்ற புதல்வர் இருந்தார். அவருக்கு குசநாபன் என்பவர் பிறந்தார். குசநாபனின் மகன் காதி என்பவர்.


 
ஒருமுறை அவர் ஒரு லட்சம அட்செளணி சேனையோடு சென்று கொண்டிருக்கையில் வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார். அங்கு பலரிஷிகளும் முனிவர்களும் இருந்து வந்தனர். தன் ஆசிரமத்திற்கு வந்த விசுவாமித்திரருக்கும் அவரது பெருத்த சேனைக்கும் வசிஷ்டர் விருந்து சாப்பாட்டை அளித்தார். அதற்குக் காரணம் அவரிடமிருந்த காமதேனுவே.
விசுவாமித்திரரும் அந்த விருந்தைப் புசித்ததோடல்லாமல் "முனிவரே, எனக்கு இந்த காமதேனுவைக் கொடுங்கள். உங்களூக்கு லட்சம் பசுக்கள் கொடுக்கிறேன்" எனக் கூறினார்.


அதற்கு வசிஷ்டர் "அரசே நீங்கள் கோடிக்கணக்கான பசுக்களைக் கொடுத்தாலும் இந்த காமதேனுவை மட்டும் நான் கொடுக்கவே மாட்டேன். எனது ஆசிரமவாசிகள் இதனை நம்பித்தான் இருக்கிறார்கள்" என்றார்.
விசுவாமித்திரரோ ஏராளமான தங்கத்தையும் அரும்பெரும் மணிகளையும் கொடுப்பதாயும் எப்படியும் தனக்கு அந்த காமதேனுவைக் கொடுக்க வேண்டுமென்றும் வசிஷ்டரிடம் கேட்டார். வசிஷ்டரோ பிடிவாதமாக முடியாது என்று கூறி விட்டார்.


அந்தப் பசுவை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்வது என்று விசுவாமித்திரர் தீர்மானித்துக் கொண்டார். அதன்படி அவரது வீரர்கள் அப்பசுவை அணுகினார்கள். அதுவோ வந்தவர்களையெல்லாம் தன் கொம்புகளால் முட்டித் தள்ளி விரட்டி வசிஷ்டரிடம் சென்று முறையிட்டது.
அதற்கு வசிஷ்டர் "விசுவாமித்திரரிடம் பெரிய சேனை இருக்கிறது. நானோ தவம் புரியும் அந்தணன். அவரை எப்படி எதிர்ப்பது?" என்றார். அதற்குக் காமதேனு "உங்களது தவத்தின் சக்திக்கு முன் அந்தப் படை எம்மாத்திரம்? இப்போதே இந்த சேனையை அழிக்க நான் எனது சக்தியால் ஒரு படையை சிருஷ்டி செய்கிறேன். அதற்கு அனுமதி கொடுங்கள்" என்றது.


வசிஷ்டர் 'சரி'யெனவே காமதேனு தனது படையை சிருஷ்டித்தது. அதன் விருப்பப்படி வந்த வீரர்கள் விசுவாமித்திரரின் பெரிய சேனை மீது பாய்ந்து ஓட ஓட விரட்டி அடித்தார்கள். விசுவாமித்திரரோ தனக்குத் தெரிந்த அஸ்திரங்களையெல்லாம்பிரயோகித்துப்பார்த்தார்.காமதேனுவோபப்லவர்கள். மிலேச்சர்கள், சகலர், காம்போஜர், ஹரிதர், கிராதர்,  எனப்பலவகைப்பட்டவர்களைச் சிருஷ்டி செய்து விசுவாமித்திரரின் சேனையைத் தாக்க ஏவியது.சிறிது காலத்திற்குப் பிறகு பிரம்மதேவன் அவர்முன் தோன்றினார். "நீ இனிமேல் ராஜரிஷி என்ற பட்டம் பெறுவாய். உனக்கு சகல சித்திகளும் இட்டும்" என்று கூறி மறைந்தார். அவரோ பிரம்மரிஷி என்ற பட்டம் பெறநினைத்து கடுந்தவம் புரியலானார்.


அப்போது இஷ்வாகுவாம் சத்து மன்னனான திரிசங்கு என்பவன் தன் பூத உடலோடு சொர்க்கத்திற்குச் செல்ல பிரியப்பட்டான். தன் விருப்பத்தை குலகுருவான வசிஷ்டரிடமும் தெரிவித்தான். வசிஷ்டரோ அது நடக்காத காரியம் எனக் கூறி விட்டார். அதனால் வேறு பலரிடம் போய் கூறினான். ஆனால் பயன் இல்லை. வசிஷ்டரது புதல்வர்களிடம் போய் தன் விருப்பத்தைக் கூறவே அவர்கள் அவனை ஹரிஜனாகப் போகும் படி சபித்து விட்டார்கள்.


சாபத்தின் காரணமாக திரி சங்குவின் உடலின் நிறம் மாறி கருப்பாகிவிட்டது. ஆடைகள் அழுக்கடைந்து போட்டிருந்த தங்க ஆபரணங்கள் எல்லாம் இரும்பாக மாறிவிட்டன. முடிவில் திரிசங்கு வசிஷ்டரின் கடும் பகைவரான விசுவாமித்திரரை அணுகி நடந்ததை எல்லாம் கூறி தன்னை எப்படியாவது பூத உடலோடு சொர்க்கத்திற்கு அனுப்ப வேண்டுமென்று வேண்டிக்கொண்டான்.
விசுவாமித்திரரும் "நீ சற்ரும் கவலைப்படாதே உன்னை இதே உடலோடு சொர்க்கத்திற்கு அனுப்புகிறேன்" எனக் கூறி அதற்காக ஒரு யாகமும் செய்யலானார். அந்த யாகத்தைக் காண எல்லா முனிவர்களும் வந்திருந்தனர். ஆனால் விசுவாமித்திரரின் புதல்வர்களும், மகோதயன் என்பவனும் வரவில்லை. அவர்களைக் கடுமையாக அவர் சபித்தார்.அந்த பலி கொடுக்கப்படும் பிராணியை எப்படியாவதுகொண்டு  வரவேண்டுமென ராஜகுரு கூறி விட்டார். அப்படி அந்தப் பிராணி கிடைக்காது போனால் அதற்குப் பதிலாக ஒரு மானிடனை பலி கொடுக்க வேண்டி வருமென்ரார். அந்தப் பிராணி கிடைக்கவில்லை. எனவே பலி கொடுப்பதற்காக ஒரு மானிடனை அம்பரீஷன் தேடலானான்.

பிருகுதந்தம் என்னும் மலைப் பகுதியில் ரிசீகனென்ற முனிவர் தன் மனைவி மக்களுடன் வாழ்ந்து வந்தார். அம்பரீஷன் அவரிடம் போய் முறையிட்டு "உங்களுக்கு லட்சம் பசுக்களைக் கொடுக்கிறேன். யாகத்தில் பலியிட உங்களது புதல்வர்களில் ஒருவனைக் கொடுங்கள்" என வேண்டினான்.
ரிஷியோ தன் முதல் மகனைக் கொடுக்க இணங்கவில்லை. ரிஷியின் மனைவியோ தன் கடைசி மகனை விட்டுப் பிரிந்திருக்க முடியாது என்றார். எஞ்சியிருந்தவன் சுனசேபன் என்ற இரண்டாவது மகன். 


அவன் அம்பரீஷனிடம் "அரசே, என்னைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. எனவே என்னை விற்பதற்கு என் தகப்பனாருக்கு இஷ்டமே என்று தெரிகிறது. எனவே என்னை யாகத்தில் பலியிடக் கொண்டு செல்லுங்கள்" என்றான்.
அம்பரீஷன் சுனசேபனுடன் கிளம்பி வரும் வழியில் விசுவாமித்திரரின் ஆசிரமத்தில் தங்கினான். சுனசேபன் விசுவாமித்திரரிடம் தன் கதையைக் கூறித் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினான். விசுவாமித்திரரும் தன் நான்கு புதல்வர்களிடம் சுனசேபனுக்கு பதிலாக யாகத்தில் பலியாகும் படிச்சொல்லிப் பார்த்தார்.


அவர்களோ தம் தந்தை கூறியதை லட்சியம் செய்யவில்லை. அவர்களை அவர் சபித்துவிட்டார். பின்னர் சுனசேபனுக்கு அவர் இரு மந்திரன்க்களை உபதேசித்து "நீ இவற்றை உச்சரி. உனக்கு நீண்ட ஆயுள் கிட்டும்" எனக் கூறி அனுப்பினார். சுனசேபனும் அப்படியே செய்ய இந்திரனே வந்து அவனுக்கு நீண்ட ஆயுளை அளித்தான்.

0 comments:

Post a Comment