
ஸ்ரீமதி மகாவிஷ்ணுவை தியானிக்கவே அவர் அவள் முன் தோன்றினார். அவர் கழுத்தில் மாலையை போட்டு அவரை மணந்து கொண்டு அவள் அவருடன் வைகுண்ட லோகத்திற்குச் சென்றாள்.
அது கண்டு நாரதர் எரிச்சல் அடைந்து தன்னோடு பர்வதரையும் சேர்த்துக் கொண்டு அம்பரீஷனைக் கடிந்து கொண்டார். அப்போது விஷ்ணு சக்கரம் வந்து அவர்கள் இருவரையும் விரட்டியது. இருவரும் வைகுண்டத்திற்கே ஓடினார்கள்.
அங்கு ஸ்ரீமதி மகாவிஷ்ணுவுடன் இருப்பது கண்டு மேலும் ஆத்திரம் அடைந்த நாரதர் விஷ்ணுவைப் பார்த்து "நீ உன் மனைவி ஸ்ரீமதியை இழந்து கண்ணீர் வடிப்பாய். என்னைக் குரங்காக்கியதால் உன் நண்பர்களும் குருங்குகளாகத்தான் இருப்பார்கள்" என்று சாபம் கொடுத்தார்.
அது கேட்டு விஷ்ணு புன்னகை புரிந்தார். ஸ்ரீமதி தன் உண்மை உருவான லட்சுமிதேவியின் உருவில் காட்சி அளித்தாள். அப்போது அந்த இருவரின் மாயை அகன்றது.
நாரதரும் பர்வதரும் விஷ்ணுவின் கால்களில் விழுந்து வணங்கித் தம்மை மன்னிக்கும்படி வேண்டினார்கள்.
விஷ்ணுவும் "நாரதா! நீ சபித்தது கூட நான் மனதில் எண்ணிய விதமாகத்தான். நான் ராமாவதாரம் எடுக்கும்போது இப்படித் தான் நடக்கும். அப்போது இந்த ஸ்ரீமதியான லட்சுமி சீதையாகப் பிறந்து என் மனைவியாவாள். அவளை இராவணன் கவர்ந்து செல்வான். அவளை மீட்க நான் போகும் போது எனக்குத் துணைபுரிய வானரப் படைதான் என்னோடு வரும். எனவே உன் சாபம் நல்லதே. அது உலகின் நன்மைக்காகத்தான்" என்றார். அப்போது முதல் அம்பரீஷனைக் காக்க அவன் பக்கத்தில் விஷ்ணு சக்கராயுதம் இருந்து கொண்டே இருந்தது. துர்வாசர் மாபெரும் தவயோகி. ஆனால் முன் கோபக்காரர். ஒரு நாள் அவர் தம் ஆசிரமத்திலிருந்து கிளம்பிச் சென்ற போது வழியில் விஷ்ணுவின் நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு வந்து கொண்டிருந்த நாரதரைக் கண்டார்.
துர்வாசர் அப்போது ‘நாரதா! இன்று என்ன கலகம் செய்யப் போகிறீர்?" என்று கேட்டார். நாரதரும் அவரை வணங்கி "நான் பக்திப் பரவசமாகி விஷ்ணுவின் நாம சங்கீர்த்தனமே செய்து வந்தேன். பக்திமானான அம்பரீஷனைப் பார்க்கப் போய்க் கொண்டிருக்கிறேன்" என்றார்.
"அடேயப்பா! நீங்கள் போய் பார்க்கும் அளவிற்கு அந்த அம்பரீஷன் உயர்ந்த பக்திமானா?" என அவர் கேட்டார். நாரதரும் "ஆமாம் மகரிஷியே! விஷ்ணுவின் பரமபக்தர். ஏகாதசி விரதத்தை கொஞ்சமும் தவறாமல் கடைப்பிடிப்பவர்" என்றார்.
துர்வாசரும் "ஓ! மகாதபஸ்வியான என்னைவிட அவர் மேலானவரா? தவசக்தியை விட விஷ்ணு பக்திதான் உயர்ந்ததா?" என்று சற்று கோபத்தோடு கேட்டார். அப்போது நாரதரும் "இதை நான் சொல்வானேன்? நீங்களே அம்பரீஷனை நேரில் கண்டால் உண்மை விளங்கும்" என்று கூறி விட்டுச் சென்றார்.
நாரதர் கூறியது துர்வாசர் மனதைத் துளைத்தது. அவர் உடனே அம்பரீஷன் ஏகாதசி விரதத்தை முடித்து துவாதசி பாரணைக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.

அப்போது பண்டிதர்களும் சாஸ்திரங்களைக் கற்றுணர்ந்தவர்களும் அம்பரீஷனிடம் "நீங்கள் விரதபங்கம் ஏற்படாதிருக்க கொஞ்சம் நீரை உள்ளங்கையில் விட்டுக் குடியுங்கள். அதனால் விரதம் முடிந்தது போலாகும். துர்வாசர் வந்து சாப்பிட்ட பின் நீங்கள் சாப்பிடலாம்" என்றனர். அம்பரீஷனும் அவ்வாறே செய்தான்.
துவாதசி கழிந்து திரியோதசி வந்த பிறகே துர்வாசர் நதியிலிருந்து வந்தார். அவர் கோபத்தோடு தன் சடை முடிகளை விரித்துப் போட்டுக் கொண்டு "அடே நீசனே! விஷ்ணுவின் பரம பக்தன் என்ற மமதையில் எனக்கு மரியாதை செய்வதில் குறை வைத்தாயா? என்னை துவாதசி பாரணையில் உணவு உண்ணக் கூப்பிட்டு விட்டு எப்படி நீ விரதத்தை முடிக்கலாம்? இப்படிச் செய்ய உனக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்? மும்மூர்த்திகளே எனக்கு பயப்படும் போது நீ எம்மாத்திரம்? பிடிசாபத்தை!" எனக் கோபத்தோடு பொரிந்து தள்ளினார்.
அம்பரீஷன் அவரது பாதங்களில் விழுந்து "தவசிரேஷ்டரே! என் விரதத்திற்கு முறிவு ஏற்படக் கூடாதே என்பதற்காகத்தான் ஜலத்தை ஆசமனம் செய்தேன். உணவாக எதனையும் தங்களுக்கு அளிப்பதற்கு முன் சாப்பிடவில்லை. மேலும் துவாதசி திதி கழிவதற்குள் தாங்கள் வந்து சாப்பிட்டாலே துவாதசி பாரணை பலன் கிடைக்கும் என்றும் நீங்கள் வரத்தாமதம் ஆனதால் ஜலத்தை ஆசமனம் செய்து விரதத்தை முடிப்பதில் தவறு இல்லை என்றும் பண்டிதர்களும் ஞானிகளும் கூறினார்கள். எனவே அவ்வாறு செய்து விரதத்தை முடித்தேன்.

அவரது தவசக்தி எல்லாம் அவரது தலைச்சடை முடிகளில் தான் பரவி இருந்தது. அவர் தன் ஒரு சடையைப் பிடித்துத் தன் யோகத் தடியால் ஒரு தட்டு தட்டினார். அனல் பொறிகளை கக்கியது. கரும் புகையும் வந்து ஆகாயத்தில் பரவியது. அப்புகை மண்டலத்தில் கிருத்தியை என்ற மாபெரும் பூதம் தோன்றியது.
துர்வாசர் அதனிடம் "தான் மாபெரும் பக்திமான் என்று கர்வம் கொண்டுள்ள இந்த அம்பரீஷனை நீ ஒழித்து விடு" எனக் கட்டளை இட்டார். துவும்அப்படியே செய்வதாக துர்வாசரிடம் கூறி விட்டு வணங்கி விட்டுச் சென்றது.
அது இடி போல கர்ஜித்துக் கொண்டு அம்பஷனைத் தாக்க வந்தது. அப்போது அவனைக் காத்து வந்த விஷ்ணு சக்கரம் நேருப்புப் பொறி பறக்கச் சுழன்று வந்து கிருத்தியைத் துண்டு துண்டாக வெட்டித் தள்ளியது. அது கண்டு துர்வாசர் திகைத்துப போனார்.
அந்த சக்கரம் அத்தோடு நில்லாமல் துர்வாசரைத் தாக்க வந்தது. துர்வாசர் தனது மற்றொரு சடையைத் தட்டி விட்டார். அந்த சடையும் நேருப்பைக் கக்கிக் கொண்டு கிளம்பியது. விஷ்ணு சக்கரம் அதனையும் அழித்தது.
துர்வாசர் மேலும் ஒரு சடையை எடுத்துத் தட்டி ஏவினார். அது ஆகாயத்தை இருட்டடையச் செய்தது. ஆனால் விஷ்ணு சக்கரம் அதனைத் தாக்கி இருளைப் போக்கியது. இப்படியாக துர்வாசரின் ஒவ்வொரு சடையாக அழிந்து அவர் தலை மொட்டையாகியது.
தம் சக்தியை இழந்த அவர் ஓட விஷ்ணு சக்கரம் அவரைத் துரத்தியது. அவர் பிரம்மாவிடம் போகவே அவர் "என்னால் காக்க முடியாது" என்றார். உடனே துர்வாசர் கைலாசத்திற்குப் போய் சிவபிரானைக் கண்டார். அவரும் "நீ விஷ்ணுவிடமே போ. அவர் தான் தன் சக்கராயுதத்தைத் திரும்பப் பெற முடியும்" என்று கூறி அனுப்பினார்.
இவ்வாறு பிரம்மாவும் சிவனும் உதவ இயலாது எனக் கூறி விடவே வேறு வழி இல்லாமல் துர்வாசர் வைகுண்ட லோகத்திற்கே போய் விஷ்ணுவிடம் கூறி சக்ராயுதத்தின் தொல்லையிலிருந்து விடுபடுவது எனத் தீர்மானித்தார்.
துர்வாசர் வைகுண்டத்திற்குப் போய் விஷ்ணுவைக் கண்டார். விஷ்ணுவோ "நான் என் சக்கராயுதத்தை அம்பரீஷனைக் காக்க அனுப்பி விட்டேன். அதனால் நீ அம்பரீஷனிடமே சரண் புகுந்தால் தப்பலாம்" எனக் கூறி அனுப்பினார்.
என்ன செய்வார் துர்வாசர்? வேறு வழியின்றி தலை குனிந்து கொண்டு கர்வம் குலைந்து போய் அம்பரீஷனை அணுகி அவரது காலில் விழப் போனார். அம்பரீஷனும் அவரைப் பற்றித் தூக்கினான். விஷ்ணு சக்கரத்தை நிறுத்தினான். தவசக்தியை விட பகவானின் பக்தியே உயர்ந்தது என்பதை துர்வாசரே ஒப்புக் கொண்டு அங்கிருந்து சென்றார். அம்பரீஷன் விஷ்ணு பக்தர்களில் ஒருவனாகச் சிறப்புப் பெயர் பெற்றான்.

விசுவாமித்திரர் காமதேனுவை தனக்குக் கொடுக்கும்படிக் கேட்டார். வசிஷ்டர் கொடுக்க முடியாதென மறுக்கவே அவர் பலவந்தமாக அதனைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனார். வசிஷ்டர் தம் தவ வலிமையால் பல வீரர்களை சிருஷ்டித்து விசுவாமித்திரரின் படையைச் சிதற அடித்து விரட்டினார். காமதேனுவையும் விசுவாமித்திரர் இடமிருந்து மீட்டுக் கொண்டார்.
படை பலத்தை விட தவ வலிமையே வலுவானது எனக் கண்ட விசுவாமித்திரர் தானும் தவம் செய்து வசிஷ்டரைப் போலாக இமயமலைக்குச் சென்றார். அவர் கடுந்தவம் புரிந்ததோடு மட்டுமல்லாமல் வசிஷ்டர் வாயாலேயே பிரம்மரிஷி என்ற பட்டமும் பெற்றார். அது முதல் விசுவாமித்திரர் வசிஷ்டருடன் எதற்கும் போட்டி போடலானார்.
ராவணனும் அவனது அரக்கர்களும் எங்கும் திரிந்து யாகங்களை அழித்தும் யாகம் செய்பவர்களைத் துன்புறுத்தியும் வந்தார்கள். விசுவாமித்திரர் ஒரு யாகம் செய்ய எண்ணி இமயமலைப் பகுதியில்உள்ள தமது சித்தாசிரமத்தில் யோக நிஷ்டையில் அமர்ந்தார்.
அப்போது அவருக்கு விஷ்ணு சூரிய வம்சத்தில் இராமராகப் பிறந்து வளர்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. உலகைக் காக்க அவதரித்த இராமருக்கு வசிஷ்டர் போதிக்கும் கல்வியோடு அஸ்திரசஸ்திர, வில்வித்தைகளைக் கற்றுக் கொடுத்தாலே அந்த வேலை செவ்வனே முடியும் என விசுவாமித்திரர் நினைத்தார். அத்தகைய பயிற்சியைத் தம்மால் தான் அளிக்க முடியும் என்றும் வசிஷ்டரால் முடியாது எனவும் கண்டார்.
தான் செய்யப் போகும் யாகத்தைக் காக்க இராமரை அழைத்து வந்து அவருக்குத் தனக்குத் தெரிந்த வித்தைகளை எல்லாம் கற்றுக் கொடுத்துவிட வேண்டுமென நினைத்து அவர் அயோத்திக்குச் சென்றார்.

0 comments:
Post a Comment