சோம்பேறிக்கு எங்கும் மதிப்பில்லை!


 
சிவராமன் மகா சோம்பேறி, படிப்பறிவில்லாதவன். முன்னேற வேண்டும் என்ற ஆர்வமிருந்தாலும், சோம்பேறித்தனத்தால் எதையும் செய்யாமல் காலம் கழித்தான். கிராமத்தார் அனைவரும் தன்னை ஏளனமாகப் பேசுவதால், ஒரு நாள் வெறுத்துப் போய் அக்கிராமத்தை விட்டே வெளியேறினான். நமக்கு யாருமே உதவி செய்ய மறுக்கிறார்களே..எப்படியாவது பெரும் பணக்காரனாகி அவர்கள் முகத்தில் கரியைப் பூச வேண்டும் என எண்ணிக் கொண்டு பயணித்தான்.

வெகுதூரம் பயணித்த சிவராமன், காட்டு வழியே செல்கையில் ஒரு முரடன் பெரிய மூட்டை மற்றும் வாளுடன் தூங்குவதைக் கண்டான். மெதுவாக அவனிடம் சென்று மூட்டையைப் பிரித்துப் பார்த்து, அதில் தங்க நாணயங்கள் இருப்பதைப் பார்த்து அசந்து போனான். படிப்பறிவில்லாததால் தன்னால் அதிகம் சம்பாதிக்க முடியாது என்பதால், அந்த நகைகளை எடுத்துச் சென்று வியாபாரம் செய்யலாமா என யோசித்தான்.

முரடனைப் பார்த்தால் நல்லவனைப் போல் தெரியவில்லை என்பதால், தனது எண்ணத்தை உறுதி செய்து கொண்டு மூட்டையை இழுத்தான். அப்போது திடீரென கண்விழித்துக் கொண்ட அந்த முரடன், சிவராமனை நோக்கி பாய்ந்தான். பயம் காரணமாக கீழே கிடந்த வாளைச் சிவராமன் சுழற்ற, அது அந்த முரடனின் கழுத்தில் பாய்ந்து அவன் இறந்தான்.


உடனே மூட்டையை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த கிராமத்துக்குச் சென்றான் சிவராமன். அவனது சட்டையில் ரத்தக் கறை படிந்திருப்பதை ஊர் பெரியவர்கள் கண்டு சந்தேகித்தனர். இதைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட சிவராமன், "நான் ஒரு வியாபாரி. என் கையிலிருக்கும் நாணயங்களை ஒருவன் கொள்ளையடிக்க முயன்றான். அவனை நான் கொன்று விட்டேன். அவனிடமிருந்து இந்தப் பையை எடுத்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்து விடலாம் என புறப்பட்டேன்" என ஒருவாறாக சமாளித்தான்.

உடனே அந்த முரடனின் உடலைச் சென்று பார்த்த மக்கள், அவன் வெகு நாட்களாக ஊர் மக்களை மிரட்டி கொள்ளையடித்து வந்த திருடன் என்றும், நேற்றிரவு சில வீடுகளில் கொள்ளையடித்துச் சென்றதாகவும் கூறினர். நகைகளைப் பறிகொடுத்த சிலர் மட்டும் சிவராமன் கையிலிருந்த மூட்டையிலிருந்து, தங்கள் நகைகளை மட்டும் தேடி எடுத்துக் கொண்டனர்.


உடனே அந்த ஊர் மக்களின் கதாநாயகனாக உயர்ந்தான் சிவராமன். "நீங்கள் பெரியசேவை செய்துள்ளீர்கள். நீங்கள் தான் இனி எங்கள் காவல் தெய்வம்" எனப்புகழ்ந்த ஊர் மக்கள், பையில் மீதமிருந்த அடையாளம் தெரியாத நகைகளை அவனிடமேதிருப்பிக் கொடுத்தனர். இனி வேறு எங்கும் செல்லக் கூடாது என்றும் அன்புக்கட்டளையிட்டனர். அன்று முதல் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அறுசுவை உணவுசிவராமனுக்கு அளிக்கப்பட்டது. ஊர் மக்களின் அன்பைப் பார்த்து கண்கலங்கியசிவராமன்,  யாருக்கும் பயனின்றி ஜ்சோம்பேறியாக் இருப்பதால்இகழப்படுவதையும், மற்றவர்களுக்கு பயன்படும் செயல்களைச் செய்தால்மதிப்பளிக்கப்படுவதையும் உணர்ந்தான்.

தன்னிடம் இருந்த நகைகளை வைத்து கறவை மாடுகளை வாங்கிய சிவராமன், அன்றுமுதல் சோம்பேறித்தனத்தை கைவிட்டு தினமும் பால் கறந்து குறைந்த விலைக்குகிராமத்தினருக்கு விற்று நல்ல நிலையை அடைந்தான். இதனால் அவன் மதிப்புமேலும் கூடியது.

0 comments:

Post a Comment