பேப்பர் சங்கிலி

ஹாய்! உங்கள் நண்பர்களை ஆச்சரியத்தால் அசத்த என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? இதோ சூப்பர் ஐடியா... பேப்பர் சங்கிலிகளை எளிதாக தயார் செய்து உங்கள் நண்பர்களை அன்பால் கட்டிப் போடுங்கள்... வீட்டில் தோரணங்களாக தொங்க விட்டால் அப்பா, அம்மாவின் பாராட்டுகளை அள்ளிக் கொள்ளுங்கள்!
ரெடி ஸ்டார்ட்!

தேவையான பொருட்கள்
  1. வண்ணக் காகிதம் அல்லது ஜிகினா காகிதம்
  2. கத்தரிக்கோல்
  3. பசை



முதலில் வண்ணக் காகிதத்தை 4 அல்லது 5 அங்குல நீளத்திற்கு துண்டுகளாக கத்தரிக்கவும்.













ஒரு காகிதத் துண்டை எடுத்து அதன் முனைகளில் பசை தடவி வளையாக ஒட்டவும். இப்போது முதல் வளையம் ரெடி. இது போல பல வளையங்களை உருவாக்கிக் கொள்ளவும்.












வளையங்களை இணைப்பதற்கு இணைப்பு தேவையல்லவா? இப்போது காகிதத் துண்டுகளின் முனைகளில் பசை தடவி, ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் வளையங்களில் நுழைத்து, அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைக்கவும்.






காகிதச் சங்கிலி தயார். காகிதத்தின் நீள, அகலங்களை அதிகமாக வைத்து வெட்டினால் பெரிய சங்கிலி கிடைக்கும். மெலிதாக வெட்டினால் சிறிய சங்கிலி கிடைக்கும்.


ஆல் தி பெஸ்ட்!

0 comments:

Post a Comment

Flag Counter