நாய்க்குட்டி பென்சில் பாக்ஸ்!

ஒவ்வொரும் முறையும் கடையில் காசு கொடுத்து பென்சில் டப்பா வாங்குவதற்கு பதிலாக, நீங்களே அழகான பென்சில் டப்பாவை எளிதாக உருவாக்கி உங்கள் நண்பர்களை அசத்தலாம்.
 
 தேவையான பொருட்கள்:
  1. பெரிய டப்பா -1
  2. சிறிய டப்பா -1
  3. வண்ணக் காகிதம் -1
  4. வெள்ளைக் காகிதம் -1
  5. கத்தரிக் கோல்
  6. வண்ண ஸ்கெட்ச்
  7. பசை


 வண்ணக் காகிதத்தை எடுத்து, பெரிய டப்பா மற்றும் சிறிய டப்பாக்களின் மூடிகளின் மேல் வண்ணக் காகிதத்தை சுருக்கமில்லாமல் பசை தடவி ஒட்டுங்கள். ஓரங்களை சரியாக கத்தரிக் கோலால் வெட்டியெடுத்து விடுங்கள். அடுத்து, சிறிய பெட்டியை அப்படியே எடுத்து, படத்தில் இருப்பது போல பெரிய பெட்டியின் மீது பசை தடவி ஒட்டிவிடுங்கள்.


 ஸ்கெட்ச் பேனா எடுத்து, சிறிய பெட்டியின் மீது நாய்க்குட்டியின் கண்களை வரையுங்கள். எஞ்சியுள்ள வண்ணக் காகிதத்தை எடுத்து, படத்தில் காட்டியுள்ள படி நாயின் காதுகளைப் போல இரண்டு துண்டுகளை வெட்டியெடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை சிறிய டப்பாவின் மீது, கண்கள் பகுதிக்கு பின்புறம் ஒட்டிக் கொள்ளுங்கள். அதன் பின் வெள்ளைக் காகிதத்தை எடுத்து, படத்தில் உள்ளது போல நாயின் நாக்கு போல ஒட்டிக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த நிறங்களை ஸ்கெட்ச் பேனா மூலம் நிரப்புங்கள். அதே காகிதத்தை எடுத்து மெல்லிய, நீளமான துண்டுகளாக வெட்டி, பெரிய டப்பாவில் மீசை போல ஒட்டிக் கொள்ளுங்கள். 

இப்போது, கடினமான இரண்டு சிறிய காகிதத் துண்டுகள் அல்லது இரண்டு துண்டு துணியாலான துண்டுகளை எடுத்து, பெரிய டப்பாவின் பின் பகுதியில் மூடியையும் டப்பாவையும் இணைக்கவும்.   

 நாய்க்குட்டி பென்சில் டப்பா தயார்! இனி நாயின் முகத்தைத் தூக்கி, பெட்டிக்குள் பென்சில் உள்ளிட்ட பொருட்களை வைக்கலாம்!

0 comments:

Post a Comment