
அக்பரை விட கடவுள் பெரியவர் என்பதைச் சொல்லவே தேவையில்லை. ஆனால் அரசர் கோபித்துக் கொள்வாரே என எண்ணிய மற்றவர்கள் மவுனமாக இருந்தார்கள்.
மதிநுட்பம் வாய்ந்த பீர்பால் எழுந்து சொன்னார்,
“மன்னர் பெருமானே... இந்த விசயத்தில் சந்தேகத்திற்கு என்ன இடம் இருக்கிறது? கடவுளை விட தாங்கள் தான் பெரியவர்.”
அக்பரின் முகம் மகிழ்சியில் மலர்ந்தது.
“மதியூகியாகிய பீர்பாலே.. உமது கூற்றைத் தகுந்த காரணத்தோடு விளக்குங்கள்” என்றார் மன்னர்.
”சக்கரவர்த்தி அவர்களே, என்னைத் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உடனே என்னை நாடு கடத்தி விட முடியும், ஆனால் கவுளுக்கு என்னைப் பிடிக்காவிட்டலும் நாடு கடத்த முடியாது” என்றார்
பீர்பால்.
“எப்படி?” என்று கேட்டார் அக்பர்.
“உங்களின் ஆட்சி எல்லை குறுகியது. அதனால் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் என்னை அடுத்த நாட்டுக்கு விரட்டிவிடலாம். ஆனால் ஒட்டுமொத்த பூமியை மட்டுமின்றி அண்ட சராசரங்களையும் ஆளுகிற கடவுள் என்னை எங்கே நாடு கடத்த முடியும்?” என்றார் பீர்பால்.
0 comments:
Post a Comment