முகமூடிகள் செய்யலாம் வாங்க!

சூப்பர் முகமூடிகளை நீங்களே எளிமையாக தயாரித்து உங்கள் நண்பர்களை பயமுறுத்தலாம். இங்கே உள்ள  வழிமுறைகளை அப்படியே பின்பற்றி முகமூடிகள் உருவாக்கி அசத்துங்கள்! ஆல் தி பெஸ்ட்!!


தேவையான பொருட்கள்:
  1. பேப்பர் பிளேட் (பேன்சி கடைகளி்ல் கிடைக்கும்)
  2. நூல் -ஒரு மீட்டர் நீளம்
  3. வண்ணப் பென்சில்கள் அல்லது கிரேயான்கள்
  4. வண்ண நூல்கள்
  5. வண்ணக் காகிதங்கள்
  6. கத்திரி 
  7. பசை


பேப்பர் பிளேட்டை முகமாக நினைத்துக் கொண்டு,  அதில் பென்சில் மூலம் கண், மூக்கு,வாய் வரைந்து கொள்ளுங்கள். 
 
25 காசு நாணயத்தை கண்களின் மீது வைத்து, அப்படியே வட்ட வடிவமாக துளையிடுங்கள். இப்போது, முகத்தில் வண்ணப் பென்சில்கள் மூலம் பிடித்த வண்ணங்களைத் தீட்டுங்கள்.இப்போது முகத்தின் வலது, இடது புறங்களில், காதுகள் இருக்கும் இடத்தில் சிறு துளையிடுங்கள்.

இரண்டு துளைகள் வழியாகவும் நூலை நுழைத்து கட்டிக் கொள்ளுங்கள். முகமூடி தலையில் மாட்டிக் கொள்ளும் அளவுக்கு நூலின் நீளம் இருக்கட்டும்.

இப்போது வண்ண நூல்களை சிறிது சிறிதாக வெட்டி, நெற்றியின் வலது, இடது புறங்களில் பசை தடவி ஒவ்வொன்றாக ஒட்டுங்கள்.

 


நெற்றிக்கு நடுவில் மேல் பகுதியில் முக்கோண வடிவில் வண்ணப் பேப்பரை வெட்டி, குல்லாய் போல ஒட்டி விடுங்கள்.முகமூடி ரெடி, முகத்தில் மாட்டிக் கொண்டு நண்பர்களை அசத்துங்கள்!

0 comments:

Post a Comment