மேஜிக் நாய்க்குட்டி!

ஏதாவது வித்தியாசமாக செய்து நண்பர்களை அசத்த வேண்டும் என ஆர்வமாக உள்ளீர்களா? இதோ உங்களுக்கான சூப்பர் மேஜிக் நாய்க்குட்டி! காலியான தீப்பெட்டியைக் கொண்டு எளிதாக இதைச் செய்து கலக்குங்கள்!

 தேவையான பொருட்கள்:
  1. காலியான பெரிய தீப்பெட்டி
  2. வண்ணக் காகிதம்
  3. வண்ண ஸ்கெட் பேனா
  4. பசை
  5. தூரிகை
  6. பென்சில்

 காலியான தீப்பெட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் பகுதியில் வண்னக் காகிதத்தை ஒட்டி, அதன் ஓரங்களை சரியாக கத்தரித்துக் கொள்ளுங்கள். அதன் பின் படத்தில் காட்டியுள்ளது போல, நீளமான உடலைக் கொண்ட் நாயின் முன்பகுதியை பென்சிலால் வரைந்து கொண்டு, அதில் வண்ணங்கள் தீட்டுங்கள்.

 உள்ளே இருக்கும் தீக்குச்சி வைக்கும் பெட்டியில் மேல், படத்தில் காட்டியபடி நீளமான உடலுடன் நாய்க்குட்டியின் பின்பகுதியை பென்சிலால் வரையுங்கள். அதன் மீது வண்னம் தீட்டுங்கள். சிறிது நேரம் உலர விட்ட பின் இரண்டு பெட்டிகளையும் இணைத்து விடுங்கள்.

 இப்போது, உள்புற பெட்டியை மெதுவாக வெளியே இழுத்தால், நாய்க்குட்டியின் உடல் படத்தில் உள்ளது போல நீளமாவதைக் காணலாம். சிறிய உடல் நீளமாகும் மேஜிக்கை நண்பர்களிடம் காட்டி வியக்க வையுங்கள். நாய்க்குட்டி என்றில்லை, பூனை, முயல் என, உங்களுக்கு விருப்பமானவற்றை நீளமாக்கி வரையலாம். தீப்பெட்டியை செங்குத்தாக்கி, ஒட்டகச்சிவிங்கியைக் கூட வரைந்து அசத்தலாம். 

0 comments:

Post a Comment