சட்டை இல்லைன்னா சங்கடம் இல்லை! தடையத்தை அழித்தாலும்...



 "வக்கீல் ஐயா இருக்காங்களா?"

"நான் தான் வக்கீல். யாரப்பா நீ?"

"ஐயா, வக்கீல்கிட்டயும், டாக்டர்கிட்டயும் பொய் சொல்லக் கூடாதுன்னு சொல்வாங்க. அதனால உண்மையைச் சொல்றேன். நான் ஒரு திருடன் சார். சமீபத்துல ஒரு திருட்டு நடந்துருச்சி. அதுல நான் மாட்டிக்கக் கூடாது. தடயம் எல்லாத்தையும் அழிச்சிட்டேன். ஆனாலும் பயமா இருக்கு. அதான் உங்க கிட்ட ஐடியா கேக்க வந்தேன்"

"இந்தக் காலத்துல உன்னை மாதிரி உண்மை பேசுற திருடனைப் பாக்குறது அபூர்வம். ஏதாவது ஒரு சின்ன தடயத்தை விட்டுட்டாலும், மாட்டிக்க வேண்டியது தான். நியூசிலாந்துல உன்னை மாதிரி ஒரு திருடன். தான் எங்க திருடப் போனாலும், அங்க "Have a nice day" அப்படீன்னு ஒரு நன்றி கிரீட்டிங் கார்டு வச்சிட்டு போய்டுவான். ஆனா ஒரு தடயமும் சிக்காது., அவன கண்டுபிடிக்க போலீஸ் ரொம்ப சிரமப்பட்டாங்க...ஆனாலும் அவன் மாட்டிக்கிட்டான்"

"எப்படி சார்?"

"எல்லா நன்றி கார்டையும் ஒரே கடைல வாங்கிருக்கான். அத வச்சி அவன கண்டுபுடிச்சிட்டாங்க. அதே மாதிரி ஆகக் கூடாது. நீ என்ன திருடுன... எப்படி தடயங்களை அழிச்ச?"

"நான் பக்கத்துல இருக்குற 'அறுசுவை பவன்' ஹோட்டல் வாசல்ல இருந்த வெள்ளை கலர் காரை நேத்து திருடினேன். உடனே நம்பர் பிளேட்டை மாத்திட்டேன்."

"அப்படியா.. கார்ல வேற என்ன இருந்தது?"

"ஒரு டைரி இருந்தது. அதையும் எரிச்சிட்டேன். கார் கலரை மாத்தி பெயிண்ட் அடிச்சிட்டேன். காரை அக்குவேறு ஆணி வேறா பிரிச்சி விக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன். இப்போ சொல்லுங்க. ஏதாவது தடயத்தை விட்டுட்டேனா, நான் மாட்டிக்க மாட்டேன் தானே..."

"கண்டிப்பா மாட்டிக்குவ...தடயத்தையெல்லாம் அழிச்சிட்டு, நீயே வந்து சிக்கிட்டியே!"

"என்ன சார் சொல்றீங்க?"

"அந்தக் கார் என்னோடது!"

0 comments:

Post a Comment

Flag Counter