வேர்க்கடலை குருவி

சாப்பிட்ட பின் தூக்கி எறியும் வேர்க் கடலையின் தோலைக் கொண்டு அழகிய குருவி பொம்மை செய்து அனைவரையும் அசத்தலாம் வாங்க!

தேவையான பொருட்கள்:

  1. வேர்க்கடலை தோல்
  2. வண்ண மெழுகுக் காகிதம்
  3. தடிமனான அட்டை
  4. தீக்குச்சிகள்
  5. பென்சில் சீவிய மரச் சீவல்
  6. தேங்காய் நார்
  7. கறுப்பு ஸ்கெட்ச் பேனா
  8. கத்தரிக் கோல்
  9. பசைசெய்முறை: தடிமனான அட்டை மீது வண்ன காகிதத்தை ஒட்டுங்கள். அதில் சிறிய வட்டம் வரைந்து, அப்படியே கத்தரித்துக் கொள்ளுங்கள்.


வேர்க்கடலையின் தோலைப் பாதியாக உடைத்து, படத்தில் உள்ளது போல வண்ண அட்டையில் ஒட்டுங்கள்.


பென்சில் சீவலை படத்தில் காட்டியபடி, பறவையின் வால் போல தோன்றும் படி பசை போட்டு ஒட்டிக் கொள்ளுங்கள். குருவியின் தலை மற்றும் அலகை, எளிதாக கறுப்பு ஸ்கெட்ச் பேனாவால் வரைந்து கொள்ளுங்கள்.
ஒரு தீக்குச்சியை மூன்று பாகங்களாக கத்தரியால் வெட்டிக் கொள்ளுங்கள். மருந்து இருக்கும் முனைப் பகுதியை ஒட்ட வெட்டி எடுத்துக் கொண்டு, அதை குருவியின் கண் போன்று ஒட்டுங்கள்.
மீதமுள்ள இரண்டு துண்டு குச்சிகளை, கால்களாக ஒட்டிக் கொள்ளுங்கள். மீண்டும் ஒரு குச்சியை எடுததுக் கொண்டு, மரக் கிளையைப்போல கால்களுக்குக் கீழ் ஒட்டுங்கள்.
இறுதியாக, தேங்காய் நாரை கொஞ்சம் எடுத்துக் கொண்டு, கிளை போல ஒட்டிய தீக்குச்சியின் முனையில் பசை தடவி ஒட்டுங்கள். இது பார்ப்பதற்கு கூடு போல தோற்றமளிக்கும்.

இப்போது அழகிய, தத்ரூபமான குருவி ரெடி! உங்கள் நண்பர்களிடம் காண்பித்து அசத்துங்கள்!!

0 comments:

Post a Comment