சுந்தர காண்டம் - 4

 
அசோகவனத்தில் தனிமையில் தவித்துக் கொண்டிருந்த சீதை இராமரிடமிருந்து ஒரு தகவலும் கிடைக்கப் பெறாமல் விரக்தியின் எல்லைக்கே சென்றுவிட்டாள். இவ்வாறு எத்தனை நாள்தான் காலம் கடத்துவது? ஒருநாள் பொறுமை இழந்து இராவணனே தன்னைக் கொன்று விடலாம்! அல்லது தன்னைச் சுற்றியுள்ள ராட்சஸிகள் அவனுடைய கட்டளையின் பேரில் தன்னைக் கொன்றுவிடலாம். அதற்கு முன் நாமே நிம் உயிரை மாய்த்துக் கொள்வோம்! இவ்வாறு எண்ணிய சீதை தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்தாள்.
 
திடீரென சீதையின் இடது கண் துடித்தது. இடது கண் துடித்தால் நில்லது நிடக்கும் என்ற நிம்பிக்கை உண்டு. அதனால் சீதை தன் உயிரை மாய்த்துக் கொள்ளத் தயங்கினாள். அதே அசோகமரத்தில்தான் அனுமார் உட்கார்ந்திருந்தார். அவர் வேறு விதமாகத் தவித்துக் கொண்டிருந்தார்.
 
அசோகமரத்தினடியில் வித்த கூந்தலும், கண்ணீரும் கம்பலையுமாய் இருப்பவள்தான் சீதை என்று உறுதியாகத் தெரிந்து விட்டது. அவளிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, இராமன் தூதர் நான் என்ற செய்தியைச் சொல்லி விட்டுப் போகலாம் என்று துடித்தார். மறுகணம் சீதையைப் பார்த்ததே போதும் என்ற செய்தியை உடனே சென்று இராமரிடம் சொல்லிவிடலாம் என்றும் தோன்றியது.
ஆனால் இத்தனை சிரமப்பட்டு இலங்கைக்கு வந்து தேவியைப் பார்த்து விட்டு அவளோடு பேசாமல் போனால் நன்றாக இருக்குமா? அவளைச் சந்திக்காமல் போனால், இராமரே ஒரு வேளை தன்னை ஏன் சீதையை சந்திக்கவில்லை என்று கேட்கலாம். அதற்கு என்ன பதில் சொல்வது? அவரைச் சந்தித்து அவருக்கு தைரியம் கூறுவதுதான் நல்லது! ஆனால் சீதை தன்னை முன்னே பின்னே பார்த்ததில்லை. நான் யாரென்றே நம்புவாளா? இராவணனே வேறு உருவம் எடுத்து வந்திருக்கிறான் என்று நினைக்க மாட்டாளா? தேவியை தான் இராமதூதன் என்பதை எப்படி நம்ப வைப்பது? இவ்வாறு பலவாறு சிந்தித்த அனுமார் குழம்பிப் போனார். கடைசியில் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. தன்னை நன்றாகக் கிளைகளுக்குள் மறைத்துக் கொண்டு சீதையின் காதுகளுக்கு மட்டும் எட்டும்படி இராமன் வரலாற்றை கூறத் தொடங்கினார்.
 
"தசரதர் என்ற சக்கரவர்த்திக்கு, இராமர் என்ற மிக உத்தமமான ஒரு மைந்தன் உண்டு. தன்னுடைய தந்தையின் கட்டளையை சிரமேற்கொண்டு, அவர் தன் தம்பியுடனும், மனைவியுடனும் வனம் சென்றார். அங்கு அவர் கரன் முதலிய நூற்றுக்கணக்கான ராட்சஸர்களைக் கொன்றார். அதையறிந்த இராவணன் கபட சந்நயாசி வேடம் பூண்டு இராமரும், இலட்சுமணரும் இல்லாத சமயம் பார்த்து, சீதை தேவியை அபகத்தான். அதையறிந்த இராமர் துடித்துப் போய் அழுது, புலம்பிக்கொண்டே அவளைத் தேடிக் கொண்டே திரிந்தபோது, சுக்ரீவன் என்ற வானர ராஜனின் நிட்பு கிடைத்தது. அவனுடைய தமையனான வாலியைக் கொன்று, சுக்ரீவனை ராஜாவாக்கி, அவனிடம் தன் மனைவியை மீட்க உதவி கோரினார். சுக்ரீவன் தன் வானரப் படையை நான்கு திசைகளிலும் அனுப்பி வைத்தார். அவ்வாறு தென் திசை நோக்கி வந்த வானரர்களில் நானும் ஒருவன்!
 
இவ்வாறு அனுமார் சொல்லி முடித்ததும், அதை ஒன்று விடாமல் கேட்டுக்கொண்டிருந்த சீதை வியப்பு உடன் மேலே அண்ணாந்துப் பார்த்தாள்.
அங்கு அவள் மரத்தில் கிளைகளினூடே மறைந்திருந்த அனுமாரைக் கண்டாள். அவளுக்குத் தான் கண்டதை நம்ப முடியவில்லை. அனுமாரை தன் கனவில் தோன்றிய குரங்கு என்று நினைத்தாள்.
 
அதற்குள் அனுமார் மரத்திலிருந்து குதித்து, மிகவும் வினயத்துடன் சீதை முன் நின்று, "தேவி! நான் தேடி வந்தது உங்களைத் தான் என்று நம்புகிறேன். கிழிந்த புடைவையும் அழுத முகமாக வாடி நிற்கும் நீங்கள்தான் இராமரைப் பிரிந்த அவருடைய பத்தினி என்று நினைக்கிறேன். என்னுடைய ஊகம் சரிதானே?" என்றார்.
 
"ஆம்! நான்தான் அந்த அபாக்கியவதி சீதை! இராவணன் வஞ்சகமாக என்னைக் கடத்திக் கொண்டு வந்து விட்டான். இராமர் என்னை மீட்க வருவார் என்ற நம்பிக்கையில் நான் இன்னும் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றாள்.
 
கண்ணீர் வடித்துக் கொண்டே சீதை கூறியதைக் கேட்ட அனுமான் நெஞ்சம் உருகியது. "தேவி! நான் இராமருடைய தூதனாக உங்களைக் காண வந்தள்ளேன். இராமர் கட்டாயம் உங்களை மீட்க வருவார் என்ற நல்ல விஷயத்தைக் கூறவே நான் உங்களைத் தேடிவந்தேன். நீங்கள் இங்கு இருக்கிறீர்கள் என்ற தகவலை அவரிடம் சொல்லுவேன்" என்றார்.
 
அதைக்கேட்டதும் சீதைக்கு மிகவும் நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாயின. ஆனால் மறுகணவே திடீரென்று அவள் மனத்தில் சந்தேகம் பிறந்தது. இராவணன் மாயாஜால வித்தைகளில் கை தேர்ந்தவன் என்பது அவளுக்குத் தெரியும். இராவணன்தான் ஒருவேளை வானர வடிவம் எடுத்து வந்திருக்கிறானோ என்ற சந்தேகம், பயம் உண்டாக அவள் அனுமாரை நோக்கி, "இல்லை! இல்லை! நீ பொய் சொல்கிறாய்! நீ இராமதூதனில்லை! நீ இராவணன்! வானர உருவத்தில் வந்து என்னை ஏமாற்றப் பார்க்கிறாய். என்னை ஏன் வீணாகத் தொந்தரவு செய்கிறாய்? நீ உண்மையிலேயே இராமதூதன் என்றால் அதை நிரூபித்துக் காட்டு! இல்லையேல் நீ சொல்வதை நம்ப மாட்டேன்" என்று வாதம் செய்ய ஆரம்பித்தாள்.
உடனே அனுமார் பொறுமையாக இராமன் குணநிலன்களைப் பற்றி விளக்கிக் கூறினார். இராமருடைய உருவத்தை வர்ணித்தார். சீதையைப் பிரிந்ததிலிருந்து, இராமர் அவளை காடு, மேடுகளில் எல்லாம் தேடி அலைந்ததைப் பற்றி விவத்தார். சீதையைப் பிரிந்து அவர் புலம்பித் துடித்ததை வர்ணித்தார். கடைசியாக, இராமர் கொடுத்த மோதிரத்தை அவளிடம் அளித்தார்.
 
அப்போதுதான் சீதைக்கு அனுமார் மீது நம்பிக்கை உண்டாயிற்று அனுமார் சத்திரத்தைத் தாண்டி இலங்கை வந்தடைந்த சாகசத்தை எண்ணி வியந்தாள். இராமடம் அவர் கொண்டிருந்த பக்தியினால்தான் அத்தகைய சாகசங்களை செய்ய முடிந்தது என்று எண்ணி வியந்தாள். அனுமாரைப் போன்ற சக்திசாலியின் துணையிருக்கையில், தன் கணவரால் இராவணனைக் கொன்று தன்னை மீட்க முடியும் என்ற நிம்பிக்கை பிறந்தது. ஆனால் அப்படியும் அவளுடைய சந்தேகங்கள் தீரவில்லை.
 
"தேவி! இராமர் தங்களை ஒரு கணம் மறக்கவில்லை. நீங்கள் இல்லாமல் அவருக்கு ஊண், உறக்கமில்லை. உங்களைச் சந்திக்க ஒவ்வொரு கணம் துடித்துக் கொண்டிருகிறார்" என்று அனுமார் கூறிய பிறகே சீதைக்கு சந்தேகங்கள் தீர்ந்தன.
 
அப்படியும் அவளுடைய கவலைகள் தீரவில்லை. தன்னை மணந்து கொள்ள சீதைக்கு இராவணன் ஒரு வருட காலம் கெடு வைத்திருந்தான். அதில் பத்து மாதங்கள் கழிந்து விட்டன. எஞ்சிஇருக்கும் இரண்டே மாதங்களில் இராமர் தன்னை மீட்கவேண்டுமே என்று கவலைப்பட்டாள். இலங்கையில் விபீஷணன், அவன் மனைவி, அவனுடைய மகள் நிலா ஆகியோரைத் தவிர யாரும் அவளிடம் நட்புப் பாராட்டவில்லை.
 
உடனே அனுமார், "தேவி! உங்கள் கவலை அதுதான் என்றால் தாமதம் செய்யாதீர்கள், ஒரு வார்த்தை சொல்லுங்கள்! நான் உங்களை என் தோளில் சுமந்து கொண்டு சென்று இராமடம் சேர்ப்பிக்கிறேன்" என்றார்.
அவர் சொல்லை நம்பாத சீதை, "உன்னால் என்னை எப்படிச் சுமந்து செல்ல முடியும்?" என்று கேட்க, அனுமார் உடனே தன் உருவத்தை மிகப் பெரிதாக ஆக்கிக் கொண்டார்.
 
"தேவி! உங்களை மட்டுமல்ல! இந்த இலங்கையையே இந்த அனுமார் தன் தோளில் எடுத்துச் செல்ல முடியும்" என்றார்.
 
ஆனால் சீதை அந்த யோசனையைப் புறக்கணித்து விட்டாள். "நீ என்னைச் சுமந்து செல்வது சரியல்ல! திருட்டுத் தனமாக யாருக்கும் தெரியாமல் உன்னுடன் இலங்கையை விட்டு வெளியேறுவது இராமருடைய மனைவிக்கு அழகல்ல! நானும் வீர வம்சத்தில் தோன்றியவள்! இவ்வாறு செய்தால், அது இராமருடைய வீரத்திற்கும், என்னுடைய தந்தை ஜனகன் பெயருக்கும் அவமானத்தைத் தேடித்தரும். என் கணவர் நேருக்கு நேர் இராவணனுடன் போட்டு அவனை வென்று, அதன் பிறகு ஊரறிய என்னை மீட்பதே அவருக்கு கௌரவமாக இருக்கும்!" என்றாள்.
 
"சரி தேவி! உங்களைப் பார்த்து விட்டேன் என்று சொன்னாலே போதும். அதைக் கேட்டு இராமருக்கு அளவற்ற ஆறுதல் உண்டாகும்.
 
ஆனால் நான் உங்களைச் சந்தித்தேன் என்று சொன்னால் அதை இராமர் நம்ப வேண்டும்! அதற்கு நீங்கள்தான் ஏதாவது விவரங்களை கூறி எனக்கு உதவ வேண்டும்" என்றார் அனுமார்.
 
உடனே சீதைத் தனக்கும் இராமருக்கும் மட்டுமே தெரிந்த ஓர் அந்தரங்க நிகழ்ச்சியைக் கூறினார். ஒரு சமயம் அவர்கள் சித்திரக்கூட பர்வதத்தில் தங்கியிருந்தனர். ஒரு நாள் இராமரும், சீதையும் மட்டும் தனியே உலாவச் சென்றனர். வெகுதூரம் நடந்ததால் களைப்படைந்த சீதை, இராமரை உட்காரச் சொல்லி அவர் மடியில் அமர்ந்து கொண்டாள். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு காக்கை சீதையைப் பார்த்து அவளை நெருங்கியது.
 
அவளைச் சுற்றி வட்டமிட்ட காக்கை அவள் சற்றும் எதிர்பாராத வண்ணம் அவள் மார்பைக் கொத்தி விட்டது. கோபம் கொண்ட சீதை அதைத் துரத்தி விட்டாள். ஆனால் அது போகாமல் மீண்டும் அவளிடம் நெருங்கியது. மீண்டும் அதைத் துரத்த, மறுபடியும் அது அவளிடமே வந்தது.
 
தன் மனைவியை மீண்டும் மீண்டும் வட்டமிடும் காக்கையைக் கண்ட இராமர் அவளைத் தன் மடியில் வைத்து பாதுகாப்பாக அணைத்துக் கொண்டார். சற்று நேரம் கழித்து, சீதை அவர் மடியில் படுத்து உறங்கிப் போனாள். சீதை எழுந்ததும் இராமர் சீதையின் மடியில் தலை வைத்து உறங்கினார். அப்போது காக்கை மீண்டும் வந்து சீதையை நெருங்கி பலமாகக் கொத்த, சீதை துடித்தாள். திடுக்கிட்டு எழுந்த இராமர் காக்கையின் அலகில் இரத்தம் தோய்ந்திருப்பதையும், சீதையின் மார்பில் இரத்தம் வடிவதையும் கண்டார்.
 
இராமர் உடனே சீதையை இரத்தம் வழியக் கொத்திய காக்கையின் மீது கடுங்கோபம் கொண்டார். அப்போது தன் கையில் வில், அம்பு எதுவுமில்லாததால் அருகிலிருந்த ஒரு தர்ப்பைப் புல்லையெடுத்து, பிரமாஸ்திர மந்திரம் ஓதிக் காக்கையை நோக்கி வீசினார். அந்தப்புல் பிரளய அக்னியைப் போல் மின்னிக் கொண்டே காக்கையை அணுகியது.
 

0 comments:

Post a Comment

Flag Counter