சுந்தர காண்டம் - 3


 
ஒரு பெரிய மரத்தின் மீது ஏறிக்கொண்ட ஹனுமார், அங்கு அமர்ந்தபடி நான்கு திசைகளையும் கூர்ந்து நோக்கினார். ராவணனுடைய அசோகவனம் இந்திரலோகத்து நந்தவனம் போல் தோற்றமளித்தது. எராளமான பழமரங்களும், மலர் செடிகளும், கொடிகளும் நறைந்து இருந்த அசோகவனத்தில் அசோக மரங்கள் மற்ற மரங்களைவிட அதிகமாக இருந்தன. மரங்களில் அமர்ந்து கொண்டும், வனத்தில் பறந்து கொண்டுமிருந்த பறவைகள் இரவு ஓய்வெடுக்கத் தயாராகிக் கொண்டிருந்தன.
 
அசோகவனத்தில் நடுநாயகமாக ஒரு பெய மண்டபம் தென்பட்டது. அந்த மண்டபத்திற்கு அருகில் இருந்த ஒரு மிகப்பெரிய அசோக மரத்தின் மீது தன் கவனத்தை அனுமார் திருப்பியபோது, அந்த மரத்தடியில் தலைவிரிகோலமாக, அழுதழுது கன்றிய கத்துடன் ஓர் அபலை ஸ்திரீ காணப்பட்டாள். அவளைச் சுற்றிலும் பயங்கர உருவங்கொண்ட ராட்சஸிகள் காவல் இருந்தனர். ஒருவேளை அதுதான் சீதையாக இருக்குமோ என்று அனுமாருக்குத் தோன்றியது. உடல் இளைத்ஒப்போய், சோகமே உருவாக அந்தப் பெண் காட்சி அளித்தாள்.
 
அவள் உடல், உடைகள் அனைத்திலும் புழுதி படிந்திருந்தது. அதுதான் சீதா என்று அனுமாருக்கு நம்பிக்கைத் தோன்றலாயிற்று. ஆனால் தேவியை அணுகுன் அந்த நம்பிக்கையை மேலும் உறுதிப் டுத்திக் கொள்ள விரும்பினார்.
தேவியை அடையாளம் காண இராமர் கூறிய வர்ணனையை நினைவு கூர்ந்தார். இராமர் கூறிய அதே சந்திரனைப் போல் வதனம், கறுமையான கூந்தல், மற்றும் பல அங்க அடையாளங்கள் இராமர் கூறியவை போலவே இருந்தன.
 
சீதா தேவியின் ஆபரணங்களைப் பற்றியும் இராமர் விளக்கியிருந்தார். ஆனால், அவை எதையும் தேவி அணியவில்லை. கழுத்தில் அணிந்து இருந்த ஆபரணங்களை இராவணன் அவளைக் கடத்திக் கொண்டு வரும் போதே கழற்றி ஒரு முட்டைக் கட்டத் தேவையான துணியை தான் அப்போது அணிந்திருந்த புடைவையிலிருந்தே கிழித்து எடுத்தாள். அந்தத் துணியை இராமர் ஏற்கெனவே அனுமாருக்குக் காட்டியிருந்தார். அந்தத் துணியின் நிறம், தேவி அசோகவனத்தில் உடுத்தியிருந்த புடைவையின் நிறம் ஒன்றாக இருந்ததைக் கண்டதும், தான் தேடிவந்த தேவியை அடைந்து விட்டோம் என்பது அனுமாருக்கு உறுதியாயிற்று.
 
சீதையைப் பிரிந்து இராமர் எத்தனை கஷ்டங்களை அனுபவித்து இருப்பார்! அந்தக் கஷ்டங்கள் எல்லாம் தீரும் நாள் வந்து விட்டது என்று அவர் ஆறுதல் அடைந்தார். தேவியைச் சுற்றி காவலிருந்த அரக்கிகள் உறங்கின பிறகு தேவியை சந்திக்கலாம் என்று அனுமார் மரத்தின் மீது பொறுமையுடன் காத்திருந்தார்.
 
நடு இரவு நேரம் நெருங்கியது. உலகமே ஆழ்ந்து உறங்கும் நேரத்தில், இராவணனின் அரண்மனையில் இருந்து திடீரென மங்கல வாத்தியங்களுடன் வேதகோஷங்கள் முழுங்கின. முதலில் வியப்படைந்தாலும், மனிதர்கள் பகல் நேரத்தில் செயற்படுவதுபோல், அரக்கர்கள் செயற்படும் நேரம் இரவு தானே என்று தோன்றியது.
 
சற்று நேரத்தில் ராஜ அலங்காரத்துடன் இராவணன் அசோகவனத்தில் நடந்து வருவது புலப்பட்டது. அவனுடன் கூட நூறு அந்தப்புரப் பெண்கள் வந்தனர். அவர்களில் சிலர் கையில் தீவர்த்திகளும், சிலர் சாமரங்களும் சிலர் மயிலிறகு விசிறிகளும், சிலர் மதுபானம் நி ரம்பிய பாத்திரங் களுடனும் உடன் வந்தனர்.
அந்த அர்த்த ராத்தியிலும் இராவணனுக்கு ஒருத்தி குடை பிடித்து வந்தாள். நேராக இராவணன் சீதையிருந்த அசோகமரத்தைத் தேடி வந்தான். இராவணனைப் பார்த்த மாத்திரத்திலேயே, சீதையின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவளுடைய கண்ணீரைப் பொருட்படுத்தாத இராவணன் அவளை அணுகி, "ஏன் என்னைக் கண்டுபயப்படுகிறாய்? நான் உனக்கு ஒரு கெடுதலும் செய்யமாட்டேன்.
 
ஏனெனில் எனக்கு உன்மீது அபார மோகம்! உன்னை இந்தக் கோலத்தில் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை ஈரேழு பதிநான்கு உலகங்களும் கண்டு அச்சப்படும் இராவணன் உன்மீது பிரியம், வைத்திருக்கிறான் என்பதை நினைத்து நீ மகிழ்ச்சியும், கர்வம் அடையவேண்டும். என்னை நீ மணந்தால், உன்னை திபுவனமகாராணியாக்குவேன்.
 
இராமனை மணந்த உன் கதியை  நினைத்துப்பார்! உன்னைக் காட்டிலும் மேட்டிலும் பரிதவிக்க விட்டவனை நீ மறந்துவிடுவதே மேல்! அவனை நீ மறந்து விடு! அவன் இப்போது உயிரோடு இருக்கிறானா என்பதே சந்தேகம்! அப்படியயே உயிரோடு இருந்தாலும், அவனால் என்னிடம் இருந்து உன்னை மீட்க டியாது. அதனால் அவனை மனத்திலிருந்து அகற்றிவிட்டு, அகில உலகத்திற்கும் அதிபதியான என்னை மணந்து கொள்!" என்றான்.
 
தன்மீது கொண்டமோகத்தினால் தகாத வார்த்தைகளைக் கூறிய இராவணனை நேரிட்டுப் பார்க்கக் கூட விருப்பமின்றி, தேவி ஒரு புல்லைப் பிடுங்கி இடையில் கிடத்தி, அதைப் பார்த்துப்பேச ஆரம்பித்தாள். "என்னை ஏன் வதைக்கிறாய்? பாவிகளுக்கு மோட்சம் கிடைப்பது எவ்வாறு நடக்க முடியாத விஷயமோ, அதுபோல் தான் நீ என்னை அடைய  நினைப்பது! நான் ராமனுடைய மனைவி! என்றுமே அவருடைய மனைவியாக இருப்பதையே விரும்புகிறேன்.
 
உன்னுடைய மனைவிமார்களை வேறு யாரையாவது ஆண்கள் அபகரித்துச் சென்றால் நீ சும்மாயிருப்பாயா? அப்படியிருக்க, நீ மட்டும் இந்த தகாத செயலைச் செய்ய எவ்வாறு துணிந்தாய்? நீ செய்த இந்தப் பாவச் செயலுக்கு நீ மட்டுமன்றி உன்னுடைய லங்காபுரியே அழிந்து நிர்முலமாகப் போகிறது.
இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. செய்த தவறுக்கு வருந்தி என் கணவடம் மன்னிப்புக்கேள்! தயாளனான அவர் உன் குற்றத்தை மன்னித்து விடுவார்" என்று விம்மினாள் சீதை.
 
தான் எத்தனை கெஞ்சியும் பிடிவாதமாக இருக்கும் சீதையைக் கண்டு ஆத்திரமடைந்த இராவணன், என்னை உதாசீனப்படுத்தும் உன்னை இப்போதே என்னால் கொன்றுவிடமுடியும். ஆனால் உன் மீது நான் வைத்திருக்கும் பிரியத்தினால் என்னால் அவ்வாறு செய்யமுடியவில்லை. உனக்கு இன்னும் இரண்டு மாதகால அவகாசம் தருகிறேன். அதற்குப் பிறகும் நீ இசையாவிட்டால், உனக்கு மரணம் சம்பவிக்கும், ஜாக்கிரதை!" என்று சீறினான்.
 
பிறகு, சீதையைச் சுற்றிக் காவலிருந்த ராட்சஸிகளை நோக்கி, "அவளுடைய மனத்தை எப்படியாவது மாற்ற முயற்சி செய்யுங்கள்!" என்று கட்டளை இட்டான். இராவணன் உடனிருந்த பெண்களில் சிலர் சீதை மீது அனுதாபங்கொண்டு அவளை இரக்கத்துடன் பார்த்தனர். இராவணனுடனிருந்த அவன் மனைவிகளில் ஒருத்தியான மாலினி மட்டும் இராவணனை நோக்கி, "நாதா! உங்கள் மீது துளியும் பிரியம் இல்லாதவளை இப்போதே கொன்று விடுங்கள்" என்றாள்.
 
பின்னர், இராவணன் உடன் இருந்த பெண்களுடன் அந்தப்புரம் திரும்பினான். அவன் சென்றவுடன், காவல்காத்து வந்த ராட்சஸிகள் சீதையைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர். ஒருத்தி இராவணனை மணப்பதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைக்க மற்றொருத்தி அவள் மறுத்தால் ஏற்படப்போகும் விளைவுகளைக் கூறிப் பயறுத்தினாள். அவர்களுடைய பயறுத்தல்களைக் கேட்டு சீதைக்கு ஒருபுறம் பயம், ஒரு புறம் கோபம் உண்டாயிற்று.
தன் கணவரைப் பார்க்காமலே உயிர் பிரிந்து விடுமோ என்ற பயம், ஏன் தன் கணவர் தன்னை இன்னமும் மீட்கவரவில்லை என்ற கோபம் உண்டாயின. ஒருவேளை தன் கணவருக்கும், லட்சமணனுக்கும் ஏதாவது ஆபத்து நேர்ந்து விட்டதோ என்ற பயம் தொடர்ந்து சீதைக்க ஏற்பட்டது.
 
இவ்வாறு பலவித உணர்ச் சிகளால் சீதை அலைக்கழிக்கப் பட்டபோது, திஜடை எனும் ராட்சஸி அப்போதுதான் உறங்கி எழுந்தாள், அவள் மற்ற ராட்சஸிகளை நோக்கி, "சீதையை சற்றுநேரம் சும்மா விடுங்கள்! நான் இப்போது ஒரு பயங்கரக்கனவு கண்டேன். அதைப் பற்றி நினைத்தாலே உடல் பதறுகிறது" என்றாள். உடனே மற்றவர்கள் அவளுடைய கனவைப் பற்றிக் கேட்டனர்.
 
"சீதையின் கணவர் இராமரும், அவளுடைய கொழுந்தனார் லட்சுமணரும் வெண்ணிற மாலை, வெண்ணிற ஆடைகள் புனைந்து, ஆகாயமார்க்கமாக லங்காபுக்கு வந்தனர். அவர்களுடைய வாகனத்தை ஆயிரம் அன்னப் பறவைகள் இழுத்து வந்தன. லங்காபுரியை அடைந்ததும் அவர்கள் இருவரும் நான்கு தந்தங்கள் உடைய ஒரு யானையின் மீது சவாரி செய்து சுவேத மலையை அடைந்தனர்.
அப்போது சீதையும் அந்த மலைக்கு வந்து, அவர்களுடன் யானைமீது ஏறிக்கொண்டாள். இராமருடன் சேர்ந்து சீதையைப் பார்க்கும் போது, சூரியனும், சந்திரனும் சேர்ந்து இருப்பது போல் தெரிந்தது. பிறகு இராமர் எட்டு காளை மாடுகள் சேர்ந்து இழுத்து வந்த ஒரு ரதத்தில் ஏறி வருவதைக் பார்த்தேன். அதிலிருந்து இறங்கி வந்த இராமர் தன்னுடன் சீதையையும், லட்சுமணரையும் அழைத்துக் கொண்டு புஷ்பக விமானத்தில் ஏறுவதைக் கண்டேன்.
 
பிறகு காட்சி மாறியது. இராமர் உடலில் எண்ணெய் பூசிக் கொண்டு, சிவப்பு உடையணிந்து, வாகைசூடி போர் செய்வது போல் காட்சி தோன்றியது. அடுத்தக் காட்சியை எப்படிச் சொல்வேன்? இராவணன் புஷ்பக விமானத்திலிருந்து தலைகுப்புற கீழே விழுந்தான். அதற்குப் பின் சிவப்பு மலர்களைச் சூடிய இராவணன் பைத்தியத்தைப் போல் சித்துக் கொண்டே கழுதைகள் பூட்டப்பட்ட ஒரு ரதத்தில் ஏறித் தென்திசை நோக்கிச் சென்றான்.
 
பிறகு அந்த ரதத்தில் இருந்து இராவணன் சேறும், சகதியுமாயிருந்த பூமியில் விழுந்து முழ்கிப் போனான். அடுத்து கும்பகர்ணனும், இந்திரஜித்தும் புதை குழியில் விழுந்து மறைவதைக் கண்டேன். பிறகு இராவணன் பன்றி மீதும் இந்திரஜித் தலை மீதும், கும்பகர்ணன் ஒட்டகத்தின் மீதும் சவாரி செய்யக் கண்டேன்.
 
அவர்கள் அனைவரும் தென் திசையை நோக்கிச் செல்வதைக் கண்டேன். லங்காபுரி முழுவதும் கடலுக்குள் முழ்கிப் போவதைக் கண்டேன். இராமனுடன் தூதுவனான ஒரு குரங்கு லங்காபுக்கு தீயிட்டது. இந்தக் கனவுகளுக்கெல்லாம் ஒரே ஒரு பொருள்தான் உள்ளது.
 
நிமது லங்காபுரி விரைவிலேயே அழியப் போகிறது. அதனால் நான் சொல்வதை சற்றுப் பொறுமையுடன் கேளுங்கள். இந்த அபலையான சீதையைத் துன்புறுத்தாதீர்கள்! அவளைத் துன்புறுத்தினால் நாம் அழிந்து போவோம்" என்றாள்.
 

0 comments:

Post a Comment