நன்றியுள்ளவர்கள் யார்?

ஒருநாள் அக்பர், பீர்பாலை அழைத்து, ‘நன்றியுள்ளவர், நன்றி கெட்டவர்’ இந்த இருவரையும் உதாரணத்தோடு காட்டும்படி கேட்டுக் கொண்டார்.
மறுதினம், பீர்பால் ஒரு நாயுடன் சபைக்கு வந்தார்.

அரசர் முன்னிலையில், அந்த நாயை நிறுத்தி, ‘இந்த நாய் மிகவும் நன்றியுள்ளது. ஒரு ரொட்டித் துண்டுக்காக இரவும் பகலுமாக வாலை ஆட்டிக் கொண்டு மனிதன் காலடியில் எப்பொழுதும் கிடக்கிறது.

வாலை ஆட்டுவதன் மூலம் தன் நன்றியை எப்பொழுதும் தெரிவித்துக் கொண்டிருக்கிறது’

அடுத்து, சபையில் அமர்ந்திருந்த ஒருவரைச் சுட்டிக் காண்பித்து, ‘இவர் உங்கள் உறவினர். நன்றிகெட்டவர். இவருக்கு எவ்வளவோ ரூபாயைக் கொடுத்தீர்கள். ஆனாலும், போதவில்லை என்று எப்பொழுதும் கூறிக் கொண்டே இருக்கிறார்.

தவிர ஒரு நாளாவது உங்களைப் புகழ்ந்து ஒரு வார்த்தை சொல்லி இருக்கிறாரா?’ என்று கூறி முடித்தார் பீர்பால்.
பீர்பாலின் அறிவுக்கூர்மை எத்தகையது என வியந்து மகிழ்ந்தார் அக்பர்.

0 comments:

Post a Comment

Flag Counter