தமிழ்த்தாய் வாழ்த்து


    நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
    சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
    தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
    தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
    அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
    எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
    தமிழணங்கே!

    உன் சீரிளமைத் திறம்வியந்து
    செயல்மறந்து வாழ்த்துதுமே!
    வாழ்த்துதுமே!!
    வாழ்த்துதுமே!!!

 Neerarum kadaludutha lyrics in english:

   
Neeraarum Kadaludutha Nilamanthaik Kezhilozhugum
    Seeraarum Vadhanamenath Thigazh Bharathak Kandamithil
    Thekkanamum Adhirpirandha Draavida Nal Thirunaadum
    Thakkasiru Pirainudhalum Tharitthanarum Thilakamume
    Atthilaka Vaasanaipol Anaithulagum Inbamura
    Etthisayum Pugazh Manakka Irundha Perum Thamizhanange,
    Thamizhanage
    Unseerilamai Thiram Viyandhu Seyal Marandhu Vazhthudhume,
    Vazhthudhume,
    Vazzhthudhume 

தமிழ்த்தாய் வாழ்த்து என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெரும் கடவுள் வாழ்த்துப் பாடலாகும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை வணக்கக் கூட்டம் ஆகியவற்றின் துவக்கத்தில் பாடப்படுகிறது. இந்திய தேசிய கீதம் இறுதியில் பாடப்படும்.
தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்வாழ்த்து வாழ்த்துப்பாடலை எழுதியவர் மனோன்மணியம் சுந்தரனார் என்பவராவார். இவர் எழுதிய புகழ்ப்பெற்ற நாடக நூலான மனோன்மணியம் நூலில் உள்ள துதிப்பாடலின் ஒரு பகுதி இப்பாடலாகும். இதை 1970ஆம் ஆண்டு தமிழக அரசு இப்பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.

0 comments:

Post a Comment