தப்பிக்க வழியுண்டா?



 "வக்கீல் சார், நீங்க தான் என்னைக் காப்பாத்தணும்!"

"சொல்லுங்க, நான் என்ன செய்யணும்?"

"நான் பத்தாவது வரைக்கும் தான் படிச்சிருக்கேன். ஆனா டாக்டர்னு போர்டு மாட்டிட்டு பொழப்பு நடத்திட்டிருந்தேன். நான் ஒரு போலி டாக்டர்னு ஜனங்களுக்கு தெரிஞ்சிடுச்சி. இப்போ என்னை போலீஸ் தேடுறாங்க. டாக்டர் வேஷம் போட்டு நடிச்சா பெரிய தண்டனை கொடுப்பாங்களா.. தண்டனையில இருந்து தப்பிக்கறது எப்படி?"

"போலி டாக்டர் தானே நீங்க... போலி நீதிபதி கேள்விப்பட்டிருக்கீங்களா...?"
"இல்லையே!"

"சூடான் நாட்டுல அப்படி ஒரு ஆசாமி பிடிபட்டிருக்கார்... அந்த ஆள் ரொம்ப சாமர்த்தியமா சூடான் நீதி அமைச்சகத்துல, நீதிபதின்னு அடையாள அட்டை வாங்கிட்டாராம்.. அதுக்கப்புறம் ஒம்பாடா -ங்கற பகுதியில இருக்குற போலீஸ் ஸ்டேஷன்ல அடையாள அட்டையைக் காட்டி, வழக்குகளை அங்கேயே வச்சி பைசல் பண்ணி நல்ல காசு பார்த்திருக்கிறார். ஒருமுறை தப்பு தப்பா சட்ட பிரிவுகளை உளறி மாட்டிக்கிட்டிருக்கார்."

"இது ரொம்ப தப்பு சார்"

"நீங்க பண்ணினதும் தப்புதானே..."

"ஆமாம் சார். அதை இப்போ உணர்கிறேன். ஏற்கனவே நான் பண்ணின தப்புக்கெல்லாம் தண்டனை அனுபவிக்காம தப்பிக்க முடியுமா?"

"ரொம்ப கஷ்டம்"

"நானும் ரொம்ப கஷ்டப்பட்டு தான் சார் இந்த வேஷத்தை போட்டுருக்கேன். அடுத்தவங்களுக்குத் தெரியாம போலியா நடிக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா சார்..."
"அப்படி ஒண்ணும் கஷ்டமா தெரியலயே.. இப்ப நான் கூடத் தான் நான் போலியா நடிக்கிறேன். உங்களால கண்டுபிடிகக் முடியலயே..."

"என்ன சொல்றீங்க வக்கீல் சார்?"

"நான் வக்கீல் இல்ல... போலீஸ்!"

0 comments:

Post a Comment

Flag Counter