பேசாமல் பேசலாம் சூப்பராக!


 "என்ன சார், உங்க பையன் முன்னாடி நின்னு அபிநயம் பிடிச்சிட்டு இருக்கீங்க?"

"இது அபிநயம் இல்லை சார். சைகை மொழி"

"ஏன், பையனுக்கு காது கேக்காதா?"

"கேட்கும். இருந்தாலும் சில விஷயங்கள் அவன் அம்மாவுக்குத் தெரியாம இருக்குறதுக்காக இப்படி சைகை மொழியில பேசிக்குவோம்"

"அது சரி. 'சைகை மொழி'ன்னு சொல்றது சரியா?"

"சைகைகள் மூலமாக பேசுறதும் ஒரு மொழிதான் அப்படீங்கறதை மொழியியல் வல்லுநர்கள் ஒப்புக்கொள்றாங்க. அர்த்தமுள்ள தனித்தனி ஒலிகளை ஒன்றாக்கி, அர்த்தமுள்ள சொற்களை ஒரு மொழியில உருவாக்குறது மாதிரியே, அர்த்தமுள்ள தனித்தனி சைகைகளை ஒன்றாக்கி,அத்தமுள்ள சொற்களை சைகை மொழியில  உருவாக்குகிறோம். சைகை மொழிங்கறது ஆற்றலும், மென்மையும், நுட்பமும் நிறைஞ்ச ஒரு மொழிதான்!"

"அப்படியா?"

"ஆமாம். சைகை மொழியில கவிதை பாடுறதும் சாத்தியம் தான். சைகைகளை மாத்தி, மாத்தி காட்டுறது மூலமா சிலேடை மொழிகளும் பரிமாறிக்கலாம்! கால்லெடெட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிளேட்டன்லல்லி என்கிற ஆய்வாளர் இது தொடர்பா நெறைய ஆராய்ச்சிகள் பண்ணியிருக்கார்"

"அது சரி...இப்போ உங்க பையன் கிட்ட சைகை மொழியில என்னமோ சொல்லிட்டு இருந்தீங்களே?"

"புதுசா ஒரு ஓட்டல் திறந்திருக்காங்க. அம்மாவுக்குத் தெரியாம போய் சாப்பிடலம். வர்றியான்னு கேட்டேன்."

"அதுக்கு அவன் என்ன சொன்னான்?"

"உங்களுக்குத் தெரியாம நேத்தே நானும் அம்மாவும் அந்த ஓட்டலுக்கு போய்ட்டு வந்துட்டோம்னு சொல்றான்!

0 comments:

Post a Comment